Categories
உலக செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. தகர்க்கப்பட்ட பாலம்…. குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்….!!

வெடிப்பொருட்கள் வைத்து பாலம் தகர்க்கப்பட்டதினால் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன.

ஜெர்மனியில் உள்ள சல்ஸ்பச்டல் நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஆயிரம் அடி பாலத்தில் தினமும் 90,000 வாகனங்கள் பயணம் செய்யும். இந்த பாலத்தில் உள்ள ரோலர் பீயரிங் பழுதடைந்துள்ளது. இதனால் அதன் ஒரு பகுதி மணலில் புதைந்தது. இதன் காரணமாக பாலமானது 5 மாத காலமாக  மூடப்பட்டது. இதனை அடுத்து பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலத்தை கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது. அதற்காக  220 கிலோ வெடிப்பொருட்கள் பொருத்தப்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பாலமானது தகர்க்கப்பட்டது.

இதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் சுற்று பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட ஏதேனும் வெடிக்காத குண்டுகள் இருக்கின்றனவா என்று சோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே பாலமானது வெடிப்பொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது. குறிப்பாக பாலம் தகர்க்கப்பட்டதினால் 15,000 டன் கட்டுமான குப்பைகள் சேர்ந்துள்ளன. இதனை அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |