Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அலைபாயும் தண்ணீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

பாலத்தின் மீது தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து நரியம்பட்டு-குடியாத்தம் பகுதிகளை இணைக்கும் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது.

இதன் காரணத்தினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் இருபுறமும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |