மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 126 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல் குண்டாறு, அடவிநயினார் கோவில், ராமநதி ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. குற்றால அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது.