பழனி முருகன் கோவிலில் தங்கரதம் புறப்பாடு 11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது ரூபாய் இரண்டாயிரம் கட்டணமாக செலுத்தி 56 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பழனி கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து தைப்பூச திருவிழாவில் 5 வது நாள் மட்டும் கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரதம் புறப்பாடு நடைபெற்றுள்ளது. இதற்கிடையே மீண்டும் தங்கரத புறப்பாடு தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 15ஆம் தேதி பழனி கோவில் நிர்வாகம் தங்கரத புறப்பாடு தொடங்கப்பட்டது.
முன்னதாக சின்னகுமரர் உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்தில் வலம் வந்தார். அதனை தொடர்ந்து சின்னகுமரருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்ற பின் தங்கரத சப்பரத்தில் எழுந்தருளிப் புறப்பாடு நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். அங்கு சின்ன குமாரருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று பின்னர் வெளிப்பிரகாரத்தில் இருந்து தங்கரத புறப்பாடு தொடங்கியது.
கடந்த 11 மாதங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் அனைவரும் திரண்டு வந்து கந்தனுக்கு அரோகரா என்ற கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் ரூபாய் 2௦௦௦ கட்டணமாக செலுத்தி 56 பக்தர்கள் இந்த தங்கரத புறப்பாடு கலந்து கொண்டனர். இதில் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிர்ஈஸ்வர் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.