Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பழங்குடியினர் இன சாதி சான்றிதழ்” 1,715 மனுக்கள்…. கலெக்டரின் உத்தரவு….!!

பழங்குடியினர் இன சாதி சான்றிதழ் கேட்டு 1,715 மனுவினை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அதன்படி இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் சிறப்பு முகாம் நடத்துவதற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். இதனையடுத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது.

அதன்பின் ஜவ்வாதுமலையில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லி வாசல் நாடு போற்ற பகுதிகளில் தாசில்தார் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி போன்றோர் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதனைதொடர்ந்து தாலுகாவில் ஏலகிரி மலை போன்ற 57 கிராமங்களில் பழங்குடியினர் இன சாதி சான்றிதழ் கேட்டு 1,715 மனுவினை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

Categories

Tech |