Categories
சினிமா தமிழ் சினிமா

பல சர்ச்சைக்கு நடுவே பிரபல நடிகர் அனுப்பிய வாழ்த்து…. நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன்….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக உள்ளது. இவர்கள் இருவரும் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு நிறைய சட்டவிதிகள் இருக்கும்போது இவர்கள் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சர்ச்சைகளை எதை பற்றி கவலைப்படாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்களுக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நடிகர் கார்த்தி விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு போக்கை அனுப்பி, பெற்றோர்கள் சங்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நால்வரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து கார்த்திக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |