ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் குவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்துள்ளது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும் இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்..
இலங்கை அணி 2 போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 1 போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா இரண்டு போட்டியிலும் தோல்வியுற்று மூன்றாம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி ஒரு தோல்வியுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது..
இந்நிலையில் இன்று சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்ஷார்ஜா மைதானத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களாக ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் – ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கம் சிறப்பாக இருந்த நிலையில், ஹரிஸ் ரவூப் வீசிய 4ஆவது ஓவரில் குர்பாஸ் 17 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார்.. அதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார்..
இதனை அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர்.. கரீம் ஜனத் 15, நஜிபுல்லா சத்ரன் 10, முகமது நபி 0 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 3ஆவது வீரராக களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் 35(37) ரன்கள் எடுத்து பொறுமையாக ஆடி வந்த நிலையில் அவரும் 17ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.. கடைசியில் அஸ்மத்துல்லா உமர்சாய் 10 ரன்களும், ரசித் தான் ஒரு 18(15) ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஹரிஸ் ரவூப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் குவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.