Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கார் வாங்கிய ”பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை…. இணையத்தில் வெளியான புகைப்படம்….!!!

ரித்திகா புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி” சீரியல். இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. இவர் ராஜா ராணி சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தவர். இதனையடுத்து ”குக் வித் கோமாளி சீசன் 2” ல் பங்கேற்றதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா செய்த செயல்.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.  - Cinemapettai

சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். இந்நிலையில், இவர் புதிதாக கார் வாங்கியுள்ளார். அவர் புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/Ccc47yVv5NA/

Categories

Tech |