Categories
உலக செய்திகள்

சிறுவனால் ஏற்பட்ட விளைவு…. கோவில் மீது தாக்குதல்…. ட்விட்டரில் வெளியான காணொளி….!!

பாகிஸ்தானில் உள்ள இந்து கோவிலின் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமானது வீடியோவாக ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கிழக்கு பஞ்சாபில் ரஹிம் யார்கான் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோவிலை சிலர் அடித்து நொறுக்கி அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனை சபாஸ் கில் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இதற்கு காரணம் ஒரு சிறுவன் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் வார தொடக்கத்தில் 8 வயது சிறுவன் ஒருவன் மதராசா நூலகத்தில் உள்ள மதப் புத்தகங்கள் சுத்தி வைத்திருந்த கம்பளியின் மீது தெரிந்தே சிறுநீர் கழித்துள்ளான். இதனால் அச்சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். பொதுவாக இது போன்ற அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவது பாகிஸ்தான் இஸ்லாம் மதத்தின் வழக்கமாகும். ஆனால் அதற்கு சரிசமமான செயலை செய்துள்ள சிறுவனுக்கு  நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதால் கோபத்தில் இந்து கோவிலை தாக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் வெறும் 2% மட்டுமே அவர்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |