Categories
உலக செய்திகள்

“அரசகுடும்பத்தினர் இனவெறியர்கள் அல்ல”… இவரு தான் என் மகனை மோசமான வார்த்தையால திட்டினாரு… குற்றம் சாட்டிய பாகிஸ்தானியர்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மீது பாகிஸ்தானிய நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும்  ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியில் அரச குடும்பத்தினர் தங்களது குழந்தையை இனரீதியாக விமர்சித்தனர் என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் ஹரி தனது மகனை இனரீதியாக விமர்சித்தார் என்று பாகிஸ்தானில் வசிக்கும் Muhammed Yaqoob Khan Abbasi குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ” ஹரி ராணுவத்தில் இருந்த பொழுது Ahmed Raza Khan என்ற தன் மகனை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதால் அவர்  ஒரு மோசமான வார்த்தையைக் கூறி திட்டினார். ஹரி தான் என் மகனிடம் அப்படி ஒரு வார்த்தையை கூறினார். ஆனால் பிரிட்டன் மக்களோ அரச குடும்பத்தினரோ இனவெறியர்கள் கிடையாது ”  என்று  Muhammed Yaqoob Khan Abbasi கூறியுள்ளார்.  2009 ஆம் ஆண்டு Ahmed Raza Khan-னை   பிரிட்டன் இளவரசர் ஹரி மோசமான வார்த்தை ஒன்றால் திட்டியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது நினைவுகூறத்தக்கது.

Categories

Tech |