Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல்…. பயங்கரவாத செயல்….சீன தூதர்களின் எதிர்பாராத நிலை….!!

பாகிஸ்தானில் சீனத் தூதர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது .

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரைச் சேர்ந்த நட்சத்திர ஓட்டலில் கார் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகள் நிறைந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இதே ஹோட்டலில் சீனா தூதர்கள் உட்பட உயர் அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு தங்கியிருப்பது தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் ஏற்பட்ட தருணத்தில் சீனா தூதர்கள் மற்றும் குழுக்களை சேர்ந்த எவரும் அங்கு இல்லை என்பதை தெரிவித்துள்ளனர்.

மேலும் வெடிகுண்டு தாக்குதல் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியது இது ஒரு பயங்கரவாத செயலாக காணப்படுகிறது என்றும்  வெடிகுண்டு தாக்குதல் நடந்த ஹோட்டல் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
.

Categories

Tech |