விமானக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தலீபான்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருந்து இஸ்லாமாபாத் சல்வதற்கு 2500 அமெரிக்க டாலர்கள் என்று பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால் இதனை குறைக்க வேண்டும் என்று தலீபான்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் முன்பு இருந்தது போல 120 முதல் 150 டாலர்கள் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் தலீபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக ஏர்லைன்ஸ் நிறுவனம் காபூலிற்கு தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது. மேலும் தற்பொழுது ஆப்கானில் Calm Air நிறுவனத்தின் விமான சேவைகள் மட்டுமே இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.