பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய துணை சபாநாயகர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதனையடுத்து, அந்நாட்டின் ஷபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்த குவாசிம் கான் சுரி, இம்ரான் கானின் ஆதரவாளர் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், புதிய பிரதமர் பதவியேற்றவுடன் குவாசிம் கான் சுரி மீது இன்று நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டனர். எனவே, தன் மீது நம்பிக்கையற்ற தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். எனவே நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகரை நிர்ணயிக்கும் பணி விரைவாக நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.