காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு முக்கிய நகரங்களில் பேரணி நடத்தினர்.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக்கொண்டது.
இந்நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் போன்ற முக்கிய நகரங்களில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் பேரணி நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரிய பேரணி நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற அந்த பேரணியை அந்த பிராந்திய பிரதமரான ராஜா பரூக் ஹைதர் தலைமை தாங்கி நடத்தினார்.