டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி ஜெர்ஸியில் இந்தியாவின் பெயர் இல்லாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
7-.வது டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது .ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி தொடங்குகிறது.அதேசமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை போட்டி நடந்தாலும் அதற்குரிய அதிகாரபூர்வ உரிமம் இந்தியாவிடம் இருக்கிறது .இதனால் இப்போட்டி ‘ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டி இந்தியா 2021 ‘ என்று அழைக்கப்படும் என ஐசிசி ஏற்கனவே தெரிவித்திருந்தது .
இந்நிலையில் பாகிஸ்தான் அணி சீருடையில் இந்தியாவின் பெயரை தவிர்க்க’ ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டி யூ.ஏ.இ.2021 ‘ என பொறித்துள்ளது. இது பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் ஜெர்ஸியில் இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணி அதிகாரபூர்வமாக தங்கள் அணியின் சீருடையை அறிமுகப்படுத்தவில்லை. அதேசமயம் மற்ற அணிகளின் ஜெர்சியில் இந்தியாவின் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.