பாகிஸ்தான் நாட்டின் தொலைபேசி எண்களிலிருந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக இந்தியாவில் வெளியான செய்தியை பாகிஸ்தான் மறுத்திருக்கிறது.
மும்பையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக காவல்துறையினருக்கு இரண்டு நாட்களுக்கு முன் குறுஞ்செய்தியில் மிரட்டல்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “மீண்டும் மும்பையில் 26/11 போன்ற தாக்குதல் மேற்கொள்ளப்படும், நகரமே சூறையாடப்படும்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
மும்பையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகங்கள் எழுந்தது. ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதனை மறுத்திருக்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நாட்டிற்கு எதிராக திட்டமிட்டு தீவிரவாதிகள் கதையை பரப்புகிறார்கள்.
தகவல்களை பொய்யாக வெளியிடுகிறார்கள். இந்திய நாட்டின் உளவுத்துறை ரஜவுரி எல்லை பகுதியில் ஊடுருவல் நடக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் பொய் தகவல்களை பரப்புகின்றது. எங்கள் நாட்டை இழிவுபடுத்தும் இவ்வாறான குற்றச்சாட்டுகள், இந்திய நாட்டின் சூழ்ச்சிகளை எதிர்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.