Categories
உலக செய்திகள்

ஏவுகணை பிரச்சனை…. இந்தியா அளித்த பதில் ஏற்கக்கூடியதாக இல்லை… -பிரதமர் இம்ரான்கான்…!!!

ஏவுகணை பிரச்சனையில் இந்தியா அளித்த பதில் ஏற்கக்கூடியதாக இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் நடந்த ஏவுகணை பிரச்சனையை பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9ம் தேதி அன்று இந்தியாவினுடைய சூப்பர்சோனிக் ஏவுகணையானது லாகூர் நகரிலிருந்து 275 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மியான் சன் பகுதியில் விழுந்தது.

இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதற்கு நாங்கள் பதில் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஆனால், அமைதியை பின்பற்றினோம். ஏவுகணை தரையிறங்கியது தொடர்பில் இந்தியா தெரிவித்த விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லை. இது குறித்த உண்மைகளை தெளிவாக விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |