பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு உள்ள ஆதரவை காண்பிக்கும் வகையில் நேற்று இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த தீர்மானம் தொடர்பான விவாதம் நாளை நடக்கவிருக்கிறது. அதனையடுத்து வரும் 3ஆம் தேதி அன்று வாக்கெடுப்பு நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பாக எதிர்க்கட்சியினருக்கு தனக்குள்ள ஆதரவை காண்பிப்பதற்காக, இம்ரான்கான் கடந்த 27-ஆம் தேதியன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதிக கூட்டத்தை கூட்டி, பேரணி நடத்தியிருக்கிறார்.
மேலும், எதிர்க்கட்சிகளும் தங்களின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் இஸ்லாமாபாத்தில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தியிருக்கிறார்கள். அதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் பங்கேற்று இம்ரான்கானின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தனர்.