Categories
உலக செய்திகள்

பாக். மதபாடசாலையில் குண்டுவெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி…!!

பாகிஸ்தானில் செயல்பட்ட மதம் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள சுவன் ஜமாத் என்ற மசூதி ஒரு  பகுதியில் மத கருத்துக்களை  கற்றுக் கொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் சிறுவர்கள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மத பாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மத கல்வி பயின்று வந்தனர்.

காலை 8.30 மணி அளவில் மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் மசூதி கட்டிடத்தை விட்டு வெளியே தப்பி ஓடினர். ஆனாலும் குண்டுவெடிப்பில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 70க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |