பாகிஸ்தான் அரசு சீக்கிய மதத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு 163 விசாக்கள் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 8ஆம் தேதி இருந்து 17ஆம் தேதி வரை குரு அர்ஜன் தேவ் தியாக தினம் சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த பண்டிகைக்கு செல்ல சீக்கிய மதத்தை சேர்ந்த யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தால் 163 விசாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
குரு அர்ஜன் தேவ் தியாக தினத்திற்காக தங்கள் நாட்டின் உயர் கமிஷன் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா அளிக்கக்கூடிய பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த நல்ல சமயத்தில் யாத்ரீகர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் யாத்திரை சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள் என்று உயர் கமிஷனின் பொறுப்பாளரான அப்தாப் ஹசன் கான் கூறியிருக்கிறார்.
1974-ஆம் வருடத்தின் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடியதற்கான இந்தியா-பாகிஸ்தான் நெறிமுறையின் படி இந்த விசா வழங்கப்படுகிறது. அதன்படி வருடந்தோறும் இந்திய நாட்டிலிருந்து சீக்கிய யாத்திரீகர்கள் பலரும் மதம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு செல்வார்கள். பிற நாடுகளிலிருந்து செல்லும் அவர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் அளிக்கப்படும் விசாக்களுடன் மேலும் அதிகமாக இந்த விசாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.