பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அதிகமாக இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீமதி கரினா என்னும் சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். ஆனால், காவல்துறையினர் சிறுமியை யாரும் கடத்தவில்லை எனவும் கலீல் ரகுமான் ஜோனோ என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து கராச்சி நீதிமன்றத்தில் சிறுமி திருமண ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினர்.
இதனால் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். நாட்டின் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரியின் குடியிருப்பின் முன் திரண்ட மக்கள் காவல்துறையினரை எதிர்த்து முழக்கமிட்டனர். மேலும் சிறுமியை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.