பாகிஸ்தான் தலைநகரில் முதல் முறையாக இந்து கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்துள்ளது
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் அங்கு இந்துக்கோவில் இல்லாத காரணத்தினால் நாட்டின் வேறு பகுதிகளுக்கு அவர்கள் சென்று வழிபடும் சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் தேசிய மனித உரிமை ஆணையம் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் தலைநகர் வளர்ச்சி ஆணையம் ஹெச்-9செக்டர் என்ற பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை கொடுத்துள்ளது. வெகு நாட்களாக தொடர்ந்து வந்த இழுபறிக்குப் பிறகு இன்று கோயில் கட்டும் பணி தொடங்க பூமி பூஜை நடைபெற்றது. பாகிஸ்தான் மனித உரிமைக்கான நாடாளுமன்றச் செயலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பூமி பூஜை செய்துள்ளார்.
பின்னர் அவர் கூறுகையில் இஸ்லாமாபாத்தில் கோவில் கட்டவேண்டும் என்பது அங்கு வசித்து வரும் இந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் அங்கு கட்டப்பட்ட சிறிய வழிபாட்டு தலங்கள் கைவிடப்பட்டுள்ளன புதிதாக கட்டப்பட இருக்கும் இந்த கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்தீர் என இந்து பஞ்சாயத்து அமைப்பு பெயரிட்டுள்ளது. கோயில் வளாகத்தின் உள்ளே இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் வசதியும் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.