Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டு வாகனத்தில்… பாகிஸ்தான் கொடியா…?? …. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ்நாட்டு வாகனத்தில் பாகிஸ்தான் கொடி இருந்ததை அகற்றிவிட்டு இந்திய கொடியை போலீசார் நட்டி விட்டனர்.

பெங்களூர் மாவட்டத்திலுளள வீரசந்திராவில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தமிழகத்தில் இருந்து வந்த ஒரு காரின் முன்பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக் கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் காரின் குறுக்கே சென்று நிறுத்தினர்.

இதையடுத்து அந்த காரை தடுத்து நிறுத்திய பின் அந்தக் காரில் பயணம் செய்து வந்த இருவரை கீழே இறங்க சொல்லி, காரின் முன்னாள் கட்டப்பட்டு இருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு “இந்தக் கொடியை இங்கு கட்டக் கூடாது” என அறிவுரை கூறி இந்திய தேசியக் கொடியைக் கட்டி விட்டனர். இதனை காட்சி படமாக எடுத்த சிலர் இணையத்தில் பரப்பி விட்டதால் தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது.

Categories

Tech |