Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி எதிரொலி… பிள்ளைகளை கொன்று விடவா?… ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பெண்…!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பொருளாதார பிரச்சனைகளால் அரசாங்கத்திடம் கேள்வி கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மின்சார கட்டணம் மற்றும் உணவு பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விலைவாசி அதிகரிப்பதால் தான் படும் கஷ்டங்களை பேசி ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

கராச்சியில் வசிக்கும் அந்த பெண் பணவீக்கம் அதிகரித்ததால் தான் சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அழுது புலம்பியிருக்கிறார். “நான் என்ன செய்ய முடியும், மின்சார கட்டண உயர்வு, வீட்டு வாடகை, என் பிள்ளைகளுக்கு தேவைப்படும் பால், மருந்து பொருட்கள் என்று அனைத்திற்கும் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

என் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டுமா? அல்லது அவர்களை கொன்று விடட்டுமா? என்று ஆதங்கத்துடன் அரசிடம் கேட்டிருக்கிறார். மேலும், தன் இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |