பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஹபீஸ் சயீத் இல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய உளவு அமைப்பை குற்றம் சாட்டியுள்ளார்.
ஹபீஸ் சயீத் அமைப்பானது, ஐநா வால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பானது, பாகிஸ்தானில் சாதாரணமாக சுற்றி திரிவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. லாகூருக்கு அருகில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த ஹபீஸ் சயீத் இல்லத்தில், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதியன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 24 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. எனவே இச்சம்பவம் தொடர்பில் அங்குள்ள ஒரு மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான, மொயீத் யூசுப் பத்திரிகையாளர்களின் பேட்டியின் போது, இந்த தாக்குதல் இந்தியாவை சேர்ந்த ஒருத்தரால் நடத்தப்பட்டது என்றும் “ரா” என்ற இந்திய உளவு அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தத் தாக்குதல் மொத்தமாக இந்தியாவின் ஆதரவால் நடத்தப்பட்டிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார். எனினும் எந்த உளவுத் தகவல்களை வைத்து அவர் இவ்வாறு கூறினார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.