Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு… துணை ராணுவ படை வீரர் உட்பட 6 பேர் பலி… 22 பேர் படுகாயம்…

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் துணை ராணுவ படை வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிபியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் மேற்கு கடலோர பகுதியின் வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்த 160 அகதிகள் மீட்கப்பட்டிருப்பதாக இடம்பெயர்வு காண சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் உளவு பார்த்ததாக கூறி ரஷ்ய தூதரக அதிகாரிகள் மூன்று பேரை அந்நாட்டின் அரசு நாடு கடத்தி இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்கா பெரும் வரவேற்பு அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கார் குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சீனாவின் எதிர்ப்புகளை தவிர்ப்பதற்காக தைவான் பிற நாடுகளுக்கு ரகசியமான முறையில் கொரோனா உதவிகளை செய்ததாக தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வூ கூறியுள்ளார். நேற்று இந்துக்களின் புனித பண்டிகையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வங்காளதேசத்தில் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்துக்களுக்கு அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அதிபர் அப்துல் ஹமீது ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் சாமன் நகரில் இருக்கின்ற ஒரு சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்ததால் துணை ராணுவ படை வீரர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |