கேரள மாநில திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாறாசாலா பகுதியில் ஷரோன்(23) என்பவர் வசித்து வந்தார். இவர் கிரீஸ்மா(22) என்ற இளம் பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில காரணங்களுக்காக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டுள்ளதால் அவரது பெற்றோரை மருத்துமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் விஷம் அருந்தியதன் காரணமாக இவ்வாறு வாந்தி எடுத்ததாக தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விஷம் அருந்தியதன் காரணமாக அவரது உடல் உறுப்புகள் முழுவதுமாக செயலிழந்து கடந்த 25ஆம் தேதி ஷரோன் உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு திட்டமிட்டு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரை காதலித்த கிரீஷ்மா தான் விஷம் கொடுத்துள்ளார் என்று ஷரோனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், தங்களது மகன் அந்த பெண்ணை சந்தித்து விட்டு வரும்போதுதான் வாந்தி எடுத்ததாகவும் உடல் நலனுக்காக காதலி கசாயம் கொடுத்ததாக தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் கிரீஸ்மாவை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து கீரிஷ்மாவிடம் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது ஷரோனை காதலித்து வந்த கீரிஷ்மாவுக்கு அவரது பெற்றோர் ராணுவ வீரர் மணம் முடிக்க தேர்வு செய்ததாகவும், அவருடன் ஜனவரில் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக காதலனை மனம் முடித்தாலும் அவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியுள்ளார். அதனால் அந்த பெண்ணை வைத்தே ஷரோனை கொலை செய்ய கீரிஷ்மாவின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். திட்டமிட்டப்படி கடந்த 14ஆம் தேதி காதலியை சந்திக்க சென்ற ஷரோனிடம் ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் காப்பர் சல்பேட் கலந்த ஜூசை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு முறை சந்திக்க சென்றபோது அவர் கசாயம் எனக் கூறி விஷம் கலந்த ஜூசை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் கிரீஷ்மா வாக்கு மூலம் அளித்ததை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் ஆதாரங்களை சேகரிக்க கீரிஷ்மாவின் வீட்டில் ஷரோனை கொலை செய்வதற்காக பயன்படுத்திய விஷயத்தை கைப்பற்றினர். அதன் பிறகு அந்த பெண்ணை போலீசார் நடுமங்காடு காவல் நிலையத்தில் இன்று விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த கழிவறைக்கு பயன்படுத்துவதற்கான கிருமி நாசினி குறித்து கீரிஷ்மா தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.