டெல்லியில் சமீப காலமாக காற்றின் தரம் மிக மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் வெளியே செல்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். சுவாச மற்றும் பார்வை கோளாறுகள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகளில் சேர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று தரக் குறியீட்டு அளவில் காற்றின் தரம் 326 என்ற அளவில் நேற்று காலை பதிவாகியுள்ளது. இது மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது. கடந்த வாரம் கடுமையான பிரிவில் மூன்று நாட்களுக்கு நீடித்த இந்த நிலைமை சற்று மாறி உள்ளது. தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மோசமடையக் கூடிய நிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல டெல்லி, என்சிஆர் பகுதியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசம் அடைந்து காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உள்ள நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு 356 ஆக உள்ளது.
அதனை தொடர்ந்து உலக அளவில் காற்று தர பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவ வகையில் 2007ஆம் ஆண்டு உலகக் காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த அக்டோபரில் ஆசிய நாடுகளில் அதிக மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களில் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10 இடம் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் குருகிராம் நகரம் உள்ளது. இதன் காற்று தரக் குறியீடு 679 புள்ளிகள் என்று அளவில் உள்ளது. இதனையடுத்து ரேவாரி நகர் அருகிலுள்ள தருகஹெரா மற்றும் பீகாரில் உள்ள முசாபர்பூர் ஆகிய நகரங்கள் உள்ளது. இந்தப் பட்டியலில் பெருமளவில் வட மாநிலங்களை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டுத்தக்கது.