வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் சூறாவளி புயலானது வங்காளதேச நாட்டின் சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையை கடந்தது. சூறாவளியால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவின் அசாம் உள்ளிட்ட க மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வங்காளதேசம் எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், மேகாலாயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியை சூறாவளி கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. திரிபுராவில் புயலால் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைப் போலவே முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. கடல் பகுதிகளுக்கு மக்கள் தேவையின்றி செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி அசாம் உள்ளிட்ட குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்களை சிட்ரங்க சூறாவளி கடந்து சென்றது. அசாமில் சிட்ரங் சூறாவளி பாதிப்புக்கு 83 கிராமங்களை சேர்ந்த 1146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. இதனால் அசாமில் நாகவான் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கலியாபோர், பாமுனி, சக்முதியா தேயிலை தோட்டம் உள்ளிட்ட பல பகுதியில் வீடுகள் சேதமடைந்துள்ளது. மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தது சூறாவளியால் ஏற்பட்ட கனமழையை தொடர்ந்து 325.51 ஹெக்டர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது. இருப்பினும் உயிரிழப்பு, காயங்கள் உள்ளிட்டவை ஏற்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சிட்ரங் சூறாவளி முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பக்காளி வீட்டில் கடல் அலைகள் அதிக உயரத்துடன் வீசியது. இதனால் சுற்றுலா வாசிகள், உள்ளூர் பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.