Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS NEW : காயம் காரணமாக தொடரிலிருந்து …. நியூசிலாந்து வீரர் விலகல் ….!!!

பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.

கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 தொடரில்  விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக கராச்சி சென்றடைந்த நியூசிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்நிலையில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் பிளண்டல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் .

இவருக்கு வங்காளதேசத்திற்கு எதிரான தொடரின் போது காயம் ஏற்பட்டது. இவரது காயம் குணமடையாததால்  இத்தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .இதனால் இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் டெரில் மிட்செல் அணியில் இடம்பெற்றுள்ளார். இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.

Categories

Tech |