பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் வங்காளதேசம் அணி 39 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 330 ரன்கள் குவித்தது. இதன்பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 286 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக அபித் அலி 133 ரன்கள் குவித்தார். வங்காளதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .
இதன் பிறகு 44 ரன்கள் முன்னிலையில் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் 25 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து அந்த அணி தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹீம் – யாசில் அலி இருவரும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் 3-ம் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் குவித்துள்ளது.பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டும், ஹசன் அலி 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.