ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. மேலும் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி :- பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷபிக், அசார் அலி, பஹீம் அஷ்ரப், பவாத் ஆலம், ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாம் உல்-ஹக், முகமது நவாஸ், நமன் அலி, சஜித் கான், சாத் ஷகீல், ஷகீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், ஜாகித் மக்மூத்.
மேலும் மாற்று வீரர்களாக கம்ரான் குலாம், முகமது அப்பாஸ், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, யாசிர் ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Pakistan squad for Test series against Australia announced #PAKvAUS pic.twitter.com/j4O93DhbjR
— Pakistan Cricket (@TheRealPCB) February 9, 2022