Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த போட்டோல இருக்குற விஜய் பட நடிகை யாருன்னு சொல்லுங்க…? யாராக இருக்கும்..???

பிரபல நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. சோசியல் மீடியாவில் அவ்வபோது பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகின்றது. அந்த வகையில் பிரபல நடிகையின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் யார் அந்த நடிகை என விரைவாக கூற முடியாத அளவிற்கு இருக்கின்றது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.? பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நம்ம பூஜா ஹெக்டே தான் அந்த பொண்ணு. தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

மாதம் ரூ.25,000 சம்பளம்…. தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்…. அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!!

அண்ணா பல்கலை.யில் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 25,000 ஊதியத்தில் தமிழ் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ டிச.20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். [email protected] என்ற இணையதள இளநிலை, முதுநிலை தமிழ் பாடத்தில் 55% மதிப்பெண்கள் பெற்றவர்கள் முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

Categories
Tech

வாட்ஸ் அப்பில் வந்தது புதிய வசதி…. இனி உங்க மெசேஜை மறைத்து விடலாம்…. சூப்பர் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரு முறை பார்த்து விட்டாலே மறைத்து விடும் மெசேஜ்களை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அப்ளிகேஷனில் பீட்டா வெர்சனில் இந்த வசதி அமிலுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே போட்டோக்களை ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் பெறுநர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: PF வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை…. இதை மட்டும் செஞ்சிராதீங்க…!!!

EPFO அமைப்பானது ஊழியர்களுடைய பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுடைய பணிக்காலத்தில் ஊதியத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை கொடுக்கிறது. ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், அதே அளவிற்கு ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் ஊழியரின் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இந்த பிஎஃப் பணத்திற்கு வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊழியருக்கு அதிகபட்சமாக ஓய்வூதியமாக 15000 கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் EPFO மூலம் PF பிடிக்கப்படும் ஊ ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்க் ஆண்டனி படத்துல “3 விஷால், 2 எஸ்.ஜே சூர்யா”…‌ பேட்டியில் விஷால் ஓபன் டாக்..!!!!

மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: இந்த பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இந்த பகுதிகளில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ56,000 சம்பளத்தில் TNPSC வேலை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி : உளவியலாளர் காலி பணியிடங்கள்: 24 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 37- க்குள் விண்ணப்ப கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. இன்று இந்த ரயில் தாமதமாக செல்லும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது.  இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சீரடி வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 14ஆம் தேதி அதாவது இன்று  ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 10.20 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்கிறார் உதயநிதி…. அதுவும் எந்த துறை தெரியுமா….?????

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் இன்று  காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி ஏற்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பின் விமர்சிக்கமாட்டார்களா….? எப்போனாலும் இதுதான் நடக்கும்…. அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும்  இன்று(14.12.22)  காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில்  உதயநிதிக்கு எப்போது அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் விமர்சிக்கதான் செய்வார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓய்வறியா சூரியனாக ஸ்டாலின்…. புதிய சூரியனாக உதயநிதி…. புகழ்ந்த MLA TRB ராஜா….!!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும்  இன்று(14.12.22)  காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் CM தலைமையிலான ஆட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(14.12.22) முதல் 3 நாட்களுக்கு….. இவர்களுக்கு மட்டும்…. மறக்காம போயிடுங்க….!!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு  அந்த வகையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்ப தான் கல்யாணம் ஆச்சு….! அதுக்குல்ல ஹன்சிகா வீட்டில்…. இப்படியொரு ஷாக் நியூஸ்….!!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் அவரது அண்ணனுக்கு விவாகரத்து நடக்க இருக்கிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் பிரிந்து இருந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! இறைவழிபாடு அவசியம்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி லாபத்தை கொடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். கடன் பிரச்சனைகள் சரியாகும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று காதலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! பாதுகாப்பு அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். உங்களின் கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக உழைக்க நேரிடும். சற்று சிரமத்துடன் தான் இன்று நாளை கழிக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். கோபத்தை முற்றிலும் தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களின் மூலம் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். பழைய பிரச்சினைகளுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! உயர்வு உண்டாகும்..! வாய்ப்புகள் அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்படும் மகிழும் நாளாக இருக்கும். உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் போதுஅரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இன்று உறவினர்களின் வருகை உண்டாகும். அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எந்தவொரு முடிவையும் எடுப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். வெற்றி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்..! மரியாதை கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதிற்குள் இருந்த வருத்தங்களும் சரியாகும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மனதில் உள்ளதை பிரதிபலிப்பீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக செயல்படுவீர்கள். சாதுரியமான அணுகுமுறையால் நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சந்தோஷம் நிலவும்..! ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் கவனத்துடன் இருங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை. உங்களின் நல்ல செயலுக்கான பாராட்டுகள் வந்துச்சேரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அனைத்து விஷயத்திலும் நன்மை இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். மங்கள காரியங்கள் நடைபெறும். துணிவுடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். அடுத்தவரின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! குழப்பங்கள் குறையும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களை அனைவரும் புரிந்துக் கொள்வார்கள். உங்களின் தெளிவான நோக்கம் மற்றவரைக் கவரக்கூடும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கையால் தெம்பு உண்டாகும். உல்லாசப் பயணங்கள் உற்சாகத்தை கொடுக்கும். இன்று விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். காரியத்தில் தடை தாமதம் ஏற்படக்கூடும். தடைகளைத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! அறிவுத்திறன் மேம்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தெரிகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். பணவரவு சுமாராகதான் இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரியத்தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களின் பொழுது அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சரியான உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக நண்பர்களுடன் பேசும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் அவசியம்..! அமைதி நிலவும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பணவரவு லாபத்தைக் கொடுக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இன்று எந்தவொரு முயற்சியிலும், தடைகளுக்குப் பின்தான் வெற்றிக் கிடைக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயலில் ஈடுபடுங்கள். இன்று இறைவழிபாடு என்பது கண்டிப்பாக வேண்டும். நிதானத்தை கடைபிடியுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நிலுவைத் தொகை வசூலாகும்..! நிதானம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக்கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பிரச்சனைகளும் சரியாகும். முக்கிய செயல்களில் கவனமாக ஈடுபடவேண்டும். யாரை நம்பியும் இன்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். செய்யும் செயலில் நிதானம் வேண்டும். எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்ட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! நன்மை அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். அவர்களை மதிப்பது நல்லெண்ணத்தை உருவாக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல நன்மை ஏற்படும். இன்று பணவரவால் மன மகிழ்ச்சி அடையும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். சோர்வில்லாமல் உழைப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல பெயரையும் மற்றும் புகழையும் ஈட்டிக் கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை அடைவீர்கள். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் பக்குவமாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று திறம்பட செயல்களைச் செய்வீர்கள். அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்துவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும். உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உங்களின் பேச்சில் வசீகரத் தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்தேக் காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரியங்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கற்பனைத்திறன் அதிகரிக்கும்..! ஒற்றுமை பலப்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புதிதாக காதல் மலரும். எல்லா வளமும் பெருகி சிறந்த பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று குடும்பசுமை கூடும் நாளாக இருக்கும். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். தனவரவு தாராளமாக இருக்கும். பணம் அதிகளவில் வந்துசேரும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சமூக காரியங்களில் அக்கறை செல்லும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். கலைத் துறையில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (14-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 14-12-2022, கார்த்திகை 28, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 11.42 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு பூரம். சித்தயோகம் பின்இரவு 05.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 14.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 14…!!

திசம்பர் 14  கிரிகோரியன் ஆண்டின் 348 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 349 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 17 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 557 – கான்ஸ்டண்டினோபில் நகரம் நிலநடுக்கத்தினால் பெரும் சேதத்துக்குள்ளானது. 1287 – நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1542 – இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் முதலாம் மேரி என்ற பெயரில் இசுக்கொட்லாந்தின் அரசியாக முடிசூனாள். 1782 – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று பலூனை முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கிமீ உயரம் வரை இது பறந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வறுமையில் வாடிய முதியவருக்கு உதவிய நடிகர் ரஜினி”….. எதற்காக தெரியுமா….? நெகிழ வைக்கும் பின்னணி இதோ…..!!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை தனது பேரன்களோடு கொண்டாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை தனது பேரன்களான லிங்கா, யாத்ரா ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். சென்னையில் மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதை தவிர்ப்பதற்காகவே கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தபோது வருமானம் இல்லாமல் சில நாட்கள்  ஒருவேளை மட்டுமே சாப்பிடுவாராம். அந்த சமயம் சென்னை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் நெல்லியடிக்கரை பகுதியில் ராஜபாண்டியன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புண்ணியவயல் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ராஜபாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜபாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டி….. சாதனை படைத்த தமிழக பெண்….!!!!

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் கலந்து கொண்டார். இந்நிலையில் “மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” அழகி போட்டியில் நளினி கடந்த ஆண்டு கலந்து கொண்டார். இந்த போட்டியில் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் நளினி மட்டுமே. இதனையடுத்து மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் நளினி 2021-ஆம் ஆண்டுக்கான “மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” என்ற பட்டத்தையும், “கிளாமர் […]

Categories
உலக செய்திகள்

4 வருடங்களுக்கு பிறகு…. நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமரின் மகன்….!!!

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018- ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது சுலைமான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்ந்து அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தனர். அப்போது சுலைமான் நாட்டை விட்டு தப்பி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான குழல் வழக்குகளின் […]

Categories
உலகசெய்திகள்

சாலையில் கவிழ்ந்த பேருந்து…. கோர விபத்தில் 5 பேர் பலி…. 28 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டாஸ் மாகாணத்தின் தலைநகர் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து…. காயமடைந்த 21 பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கிருஷ்ணமூர்த்தி(47) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். கண்டக்டராக பிரகாஷ்(44) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி சடன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவி…. அரியலூரில் உற்சாக வரவேற்பு….!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஷர்வாணிகா 2- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி இலங்கையில் நடைபெற்ற ஆசிய செஸ் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் 7 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நடைபெற்ற 3 பிரிவு போட்டிகளிலும் ஷர்வாணிகா வெற்றி பெற்று 6 தங்க பதக்கங்களையும், சுழற்கோப்பையையும் வென்றார். நேற்று குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஷர்வாணிகா அரியலூருக்கு வந்தார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் வந்த மகன்…. முதியவருக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கொல்லை பகுதியில் பால்சாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கந்தையா என்ற தம்பி உள்ளார். அவரது மகன் சங்கர்(47). இந்நிலையில் பால்சாமிக்கும், சங்கருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த சங்கர் பால்சாமியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலசாமியின் தலையில் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த பால்சாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அப்படி போடு…!! ஜியோவில் வந்தது smart phone…. மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

பிரபல  நிறுவனம் முதல் முறையாக 5g ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில்   ஜியோ நிறுவனம்  முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக 5ஜி தொழில்நுட்பம் அடங்கிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். மேலும் இதில் பெரிய 6.5 இன்ச் HD+LCD டிஸ்பிலே  வசதி, 90HZ refresh rate,snapdragon 480+SoC சிப்,4GB Ram,32GB ஸ்டோரேஜ் போன்ற  பல வசதிகளை […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி… எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்…? மொத்த லிஸ்ட் இதோ…!!!!!

அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், கேரளா – கர்நாடகா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமினலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.12.2022முதல்17.12.2022 வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் […]

Categories
மாநில செய்திகள்

கேபிள் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை… தமிழக அரசு புது முயற்சி…!!!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அரசு கேபிள் டிவி நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 -இன் கீழ் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்கும் 2007 -ஆம் வருடம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் 2017 -ஆம் வருடம் ஒன்றிய தகவல் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்… 18 அணு ஆயுத போர் விமானம்… பதற்றத்தால் மக்கள் அச்சம்…!!!!!

கடந்த 2016 -ஆம் வருடம் முதல் ஜனாதிபதியாக சாய்இங் -வென் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து சீனா – தைவான் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக தைவான் – சீனாவின் ஒற்றையங்கம் என்ற பரப்புரைகளை ஜனாதிபதி சாய்இங் -வென் தொடர்ந்து மறுத்து வருவது மற்றும்  தைவானை சுதந்திர சுயாட்சி நாடாக அறிவித்து வருவதுமாகும். அது மட்டுமல்லாமல் சீனா- தைவான் மீதான ராணுவம், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு… அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கனடாவில் வாடகை வீட்டில் வசித்து வரும் குறைந்த வருவாய் கொண்ட ஒரு சில பேருக்கு அரசு 50 டாலர்கள் உதவித்தொகை வழங்குவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 15 வயது உடையவர்களாகவும், 2022 -ஆம் வருடத்தில் தங்கள் 2021 -ஆம் ஆண்டு வருவாயில் 30 சதவீதத்தையாவது வாடகையாக செலுத்தி இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் 35,000 டாலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களாகவோஅல்லது 20,000 டாலர்கள் அல்லது அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள்… தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!!!!!

வைகுண்ட ஏகாதசியையொட்டி வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏகாதசியை  முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சில விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்வதற்கு தெற்கு ரயில்வே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு… எங்கு தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை  வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புகள் சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக முகப்பு அருகே படிப்பு வட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசால் […]

Categories
அரசியல்

C.M ஸ்டாலினே சொல்லிக்கிறாரு…! P.M தேர்வில் டிடிவி அதிரடி …!! பிளான் போட்ட AMMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்னைக்கு DMK ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். அவங்களை தமிழ்நாட்டில் வீழ்த்த வேண்டும் என்றால்  நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஊடக வெளிச்சத்தில் இருப்பதால், அவர்களை நிறையபேர் தூக்கிப் பிடிப்பதால் அவர்களின் ஆட்சி பெரிய சாதனை செய்த மாதிரி முதலமைச்ச அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் மக்கள் வருத்தத்திலும், ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்பவும் சொல்றேன்,  இணைந்து செயல்படும் நான் என்னைக்குமே சொன்னது இல்லையே […]

Categories
தேசிய செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. நடிகை ரம்யா தயாரித்த பட தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்…. குழப்பத்தில் ரசிகர்கள்…..!!!!!

பிரபல நடிகை  தயாரித்துள்ள படத்தின் தலைப்பிற்கு  இயக்குனர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா. இவர் தற்போது ஆப்பிள் பாக்ஸ் என்ற  பட தயாரிப்பு நிறுவனத்தை தனியாக நடத்தி வருகிறார். தற்போது “சுவாதி முத்தின மலே ஹனியே” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த  தலைப்புக்கு மூத்த இயக்குனராக பணிபுரிந்து வரும் எஸ். வி. ராஜேந்திர சிங் பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அவர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பிய […]

Categories
மாநில செய்திகள்

“நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய உத்தரவு”… உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன்  பின்பற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்களுக்கும்  அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் தீர்ப்புகளை பதிவு செய்யும்போது, வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் […]

Categories
அரசியல்

சின்னதா செஞ்சாலும் ..! சின்சியரா செய்யுங்க… DMKவினருக்கு சின்னவர் போட்ட உத்தரவு…!!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  திமுக இளைஞரணி செயலாளர் வைத்த பிறந்த நாள் கோரிக்கை வேண்டுகோள் என்பது ஒன்றே ஒன்றுதான். கடன் வழங்கி நிகழ்ச்சி செய்வதை காட்டிலும்,  சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சின்சியரா பண்ணுங்க,  நம்முடைய மக்களுக்கு பயனுள்ளதாக பண்ணுங்க என்ற வேண்டுகோளை ஏற்று, இன்றைக்கு அதிலிருந்து சிறிதும் தடம் பிறழாமல் நம்முடைய அண்ணன்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியை ஓரங்கட்டிய தல”…. அதிக தியேட்டர்கள் துணிவு படத்துக்கு தான்?…. வெளியான புதிய தகவல்….!?!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகிறது. இதில் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன் பிறகு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களில் எந்த படத்திற்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…!! இனி குறைந்த கட்டணத்தில் “VOD,OTT, IPTV சேவை”…. தமிழக அரசு அதிரடி முடிவு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கடந்த 1956-ஆம் ஆண்டு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கேபிள் டிவி என்ற நிறுவனத்தை  தொடங்கியது. இது கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் என பெயர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித் யாரையும் நம்ப வச்சு ஏமாத்தல”…. பிரபல இயக்குனர் எச். வினோத் அதிரடி பேட்டி…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் 3-வது முறையாக நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எச். வினோத் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் அஜித் புரமோஷன் நிகழ்ச்சிகளில் […]

Categories

Tech |