கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரகம் சந்திரன் ஏரி பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குப்புராஜ், சந்திரன், மாது, தேவராஜ் ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்தபோது அவர்கள் சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்கு முட்டையில் 16 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்துள்ளது. இதனால் குப்புராஜ், மாது, சந்திரன், தேவராஜ் ஆகிய […]