Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியின் ரன் எடுக்காத சாதனை என்ன தெரியுமா…..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின்  5 வீரர்கள்  ரன்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட் இழந்து சாதனை படைத்துள்ளனர். நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  தொடங்கிது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய  பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 43 (30) ரன்களும், சர்பராஸ் கான் 39 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் ராகுல் …..!!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று ராகுல் காந்தி வெளியிடுகிறார் . பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் வெற்றி யாருக்கு….? ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான்  அணிகள்  மோதுகின்றன 12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில்  இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் மண்ணை கவ்வியுள்ளது. இரண்டு  அணிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தாலும் ஒருசேர அணியாக செயல்படுவதில் வெற்றி காண முடியாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பணத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை” துரைமுருகன் பேட்டி…..!!

வருமானவரிதுறையினர் சோதனை நடத்தியத்தில் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றும் நேற்று  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் வேலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது திமுக . பொருளாளர் துரைமுருகன் பணமென்றும் , அவரின் நெருங்கிய நண்பருடைய சிமெண்ட் தொழிற்சாலை என்றும் தகவல் வெளியாகியது. கட்டு கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றி சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

வருடம் முழுவதும் “உல்லாசமாக இருக்கலாம்” ரூ 46,00,000 மோசடி செய்த கும்பல் .!!

தனியார் நிறுவன ஊழியரின் உல்லாசமாக ஆசைக்கு ரூ 46 லட்சத்தை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள குரார் என்ற பகுதியில் 65 வயதான ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வசித்து வருகின்றார். இவர் பொழுதுபோக்குக்காக இணையதளத்தை பார்ப்பது வழக்கம். அப்போது ஆபாச படம் பார்த்ததாக தெரிகின்றது. அப்போது ஆபாச ஆசைக்கு ஆளான அவர் தனது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து அதில் இணைந்துள்ளார். மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் திரைப்பட இயக்குநர் காலமானார்….. திரையுலகம் அதிர்ச்சி….!!

 பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் .   தமிழில் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குநராக   அறிமுகம் ஆனவர் மகேந்திரன் . இவர் யதார்த்த சினிமாவின் இயக்குநர் என்று புகழப்பட்டார். இவருக்கு வயது 79 . கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால்  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.     கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சரத்பவார் பிரதமர் கனவில் இருந்தார்” மோடி விமர்சனம்……!!

ஒரு காலத்தில் சரத் பவார் பிரதமர் ஆக வேண்டுமென்ற கனவில் இருந்ததாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று பிஜேபி , காங்கிரஸ் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபியுடன்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திகின்றது. இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து வார்தாவில் நேற்று  தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது தொண்டர்களிடம் பேசிய மோடி , காங்கிரஸ் […]

Categories
அரசியல்

“IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் காரணம்” பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…!!

IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் முக்கிய காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவரை ஆதரித்து சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் , திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முக.ஸ்டாலின் , அனைவரும் படிக்க  வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையர் இன்று தமிழகம் வருகை….!!

முக்கிய ஆலோசனைகள் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகின்றனர். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழு இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர். இந்தக் குழு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கின்றார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகளுடன் நாளை (புதன்கிழமை) […]

Categories
பல்சுவை

பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் எவ்வித மாற்றமும் இல்லை…!!

பெட்ரோல் மற்றும் டீசல்  விலை எவ்வித மாற்றமுமின்றி காணாப்படுகின்றது . தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 02….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 02 கிரிகோரியன் ஆண்டு : 92_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 93_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 273 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க மாநிலம்) முதற்தடவையாகக் கண்டார். 1755 – பிரித்தானியக் கடற்படைத்தளபதி வில்லியம் ஜேம்சு இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள மராத்தா கோட்டையைக் கைப்பற்றினார். 1800 – பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாவது தன்னாட்சியுரிமை கொண்ட கிரேக்க மாநிலம் செப்டின்சுலார் குடியரசு கான்ஸ்டண்டினோபில் உடன்பாடு மூலம் அமைக்கப்பட்டது. 1800 – லுடுவிக் வான் பேத்தோவன் தனது முதலாவது சிம்பொனியை வியன்னாவில் அரங்கேற்றினார். […]

Categories
பல்சுவை

தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 48 குறைவு….. வாடிக்கையாளர் மகிழ்ச்சி…!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (02/04/2019) தங்கத்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அசுர பந்து வீச்சில் அடங்கிய டெல்லி….. பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி..!!

டெல்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய  பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 43 (30) ரன்களும், சர்பராஸ் கான் 39 (29)ரன்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதிர் நடிக்கும் ஜடா படம் குறித்து பரபரப்பு தகவல்..!!

நடிகர் கதிர் நடிப்பில் உருவாகும் ஜடா படத்தினை பற்றிய தகவலை படக்குழு அறிவித்துள்ளது.    பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நடிகர் கதிர்,விஜயுடன்  இணைந்து தளபதி 63 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.இதைதொடர்ந்து அறிமுக இயக்குநர் குமரன் இயக்காதில் கதிர் தற்போது ஜடா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். மேலும் ரோஷினி நாயகியாகவும், சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.இப்பசாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார்.   இப்படம் தமிழகத்தில் வசித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்…..!!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 166 ரன்கள் குவித்துள்ளது.   12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுலும், கர்ரனும் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடி காட்டிய  கே.எல் ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிலைத்து நின்ற சர்பராஸ் கான் அவுட்…..பஞ்சாப் அணி 15 ஓவர் முடிவில் 129/4……!!

பஞ்சாப் அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 129 ரன்களுடன் விளையாடி வருகிறது  12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுலும், கர்ரனும் களமிறங்கினர். தொடக்கத்தில் பவுண்டரியுடன் சிறப்பான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 86/3……!!

பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 86 ரன்களுடன் விளையாடி வருகிறது  12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுலும், கர்ரனும் களமிறங்கினர். தொடக்கத்தில் பவுண்டரியுடன் சிறப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயை திருமணம் செய்ய விரும்பும் நடிகை ரைஸா…!!!!

விஜயை திருமணம் செய்ய விரும்புவதாக ரைஸா வில்சன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகபோட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது. மேலும் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலிஸ் (Alice) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.   இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்குகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங் பிறந்த நாள்…… கேக் வெட்டி அமர்க்களப்படுத்திய CSK அணியினர்…..!!

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின் பிறந்த நாளை CSK அணியினர் வெகு சிறப்பாக கொண்டாடினர்.  நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடேயேயான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. இதையடுத்து  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர்  ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின்  46வது பிறந்த நாளை சென்னை அணியினர் வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினர். ரெய்னா மெழுகுவர்த்தி கொளுத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது..!!விஜய் சேதிபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா..!!

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் இணையத்தில்  திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.  சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டும் இதை தவிர்க்க முடிய வில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இது வரை அதிகமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி பந்து வீசுகின்றது….!!

பஞ்சாப் மற்றும் டெல்லி அணி போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரண்டு வெற்றிகளை பெற்ற நிலையில் விளையடும் இந்த இரண்டு அணியும் மூன்றாவது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனி கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கிய கிரிக்கெட் வீரர்….. ஜாலியாக பேசி மகிழ்ந்த இரு அணியினர்….!!

சென்னை அணியின்  கேப்டன் தல தோனியிடம் ராஜஸ்தான் அணி வீரர்கள் புகைப்படம் எடுத்தும், ஆட்டோகிராஃப்பும் வாங்கிக்கொண்டனர்.     12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின்  களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நில்லுங்க..! நில்லுங்க..! போகாதீங்க ? மக்களிடம் கெஞ்சிய அதிமுக_வினர்…. !!

மான்னர்குடியில் முதல்வர் பிரசாரத்திற்கு வந்த போது கூடியிருந்த மக்கள் வீட்டுக்கு கலைந்து சென்றது அதிமுக_வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது  மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மன்னர்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த போது பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிமுக_வினரிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னட நடிகர் யஷ்க்கு வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு…!!!

கன்னட நடிகர் யஷ்க்கு தற்போது வசித்துவரும் வாடகை வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு. பிரபல கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ.40 ஆயிரம். இந்நிலையில் யஷ் பல மாதங்கள் வாடகை செலுத்தவில்லை இதையடுத்து வீட்டு உரிமையாளர் வாடகை பாக்கியை செலுத்திவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மீது செருப்பு வீச்சு…… வைரலாகும் வீடியோ……!!

தஞ்சையில் பிரசாரம் செய்த முதல்வர் மீது செருப்பு வீசிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிங்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் தேர்தல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹாட்ரிக் தோல்வியில் ராஜஸ்தான்….. ரஹானேவுக்கு 12,00,000 அபராதம்….. அதிர்ச்சியில் அணி நிர்வாகம்……!!

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச தாமதமான காரணத்தால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவுக்கு 12,00,000 அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின்  களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்…!!!

மீண்டும் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம்  ‘பிங்க்’. தற்போது இந்த படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இதில் மூன்று பெண்கள் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர் அவர்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.மேலும் இவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். மேலும் […]

Categories
பல்சுவை வானிலை

தாக்குப்பிடிக்குமா ? சென்னை…..இந்த ஆண்டிலே அதிகபட்ச வெட்பநிலை பதிவு….!!

இந்த ஆண்டிலே அதிகப்படியான வெட்பம் நேற்று சென்னையில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் நேற்று சென்னை மாநகரித்தின் மையப் பகுதிக வெப்பநிலையானது 36.8 டிகிரி செல்சியஸ் இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   அதே போல சென்னை புறநகர் பகுதிகளின் வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டிலே தற்போது சென்னையில் பதிவாகிய வெப்பநிலை தான் அதிகமென்றும் , இன்று  சென்னையில் 37 டிகிரி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா….. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்….!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெம்ப் மீது பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாததால் தல தோனி அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பினார். 12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 […]

Categories
பல்சுவை

உயர்ந்த தங்கத்தின் விலை….. மாற்றமின்றி வெள்ளி விலை……!!

தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று உயர்ந்துள்ளது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்ட கோவை SP…… பணியிடை மாற்றம் செய்து அரசு நடவடிக்கை ….!!

பொள்ளாச்சி விசாரணையில்  மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை SP பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் இந்த வழக்கில் 4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வைரல்

கட்டுக்கட்டாக பணம்…… வைரலாகும் வீடியோ….. கதறும் திமுக தலைமை….!!

திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் vs டெல்லி மோதல்….. இரு அணிகளும் பயிற்சியில் தீவிரம்….!!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.   12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் தற்போதைய ஐபிஎல் தொடரில்  3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் சமநிலையில் புள்ளிகளை பெற்றுள்ளது. ஆகவே இன்றைய போட்டியில்  வெற்றி பெற வேண்டும்  என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர்ந்து 5 வெற்றி….. பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி…!!

பாகிஸ்தான் அணியுடனான ஐந்தாவது ஒரு நாள் போட்டியையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.  ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த இந்த தொடரின் முதல் நான்கு போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் ,  இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 5வது ஒரு நாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற […]

Categories
தேசிய செய்திகள்

‘எமிசாட்’ மற்றும் 28 செயற்கைகோள்கள் விண்ணில் பாய்கின்றது…!!

‘எமிசாட்’ மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்து 28 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றது. இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட’எமிசாட்’ செயற்கைக்கோளான பி.எஸ்.எல்.வி.சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள்  உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமெரிக்காவின் 24 செயர்க்கைக்கோள்கள் , சுவிட்சர்லாந்து , ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு செயற்கைக் கோள்கள் மற்றும் லுதுவோனியவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என நான்கு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்ட நாயகன் தோனி 75*(46)….. அரைசதம் விளாசிய வீடியோ!!

ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் தோனி அபாரமாக விளையாடி அரைசதம் விளாசிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.  12-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது .இப்போட்டி  சென்னை சேப்பாக்கம்  சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதன் பின் களம் கண்ட […]

Categories
பல்சுவை

குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை….!!

இன்றை பெட்ரோல் மற்றும் டீசல்  விலை குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாரத்துக்கு வந்த தலைவரின் தங்கையிடம்……. தொண்டர்கள் இப்படி செய்யலாமா…?

YSR காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் YSR  காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ‌ஷர்மிளா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று குண்டூரில் YSR காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ஆதரித்து பிரசாரம் செய்த ஷர்மிளா_வை கான ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி முகாம் தீவிரம்..!

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . இந்த தேர்தலின் போது தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் பற்றி பயிற்சி வகுப்பில் வாக்கு இயந்திரங்களை கையாளும் முறை, அதில் ஏற்படும் சிறிய பழுதுகளை எவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்…. இந்திய எல்லையில் பரபரப்பு…..!!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜவுரி மாவட்டத்தின் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் தீடிரென தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர்  இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை நோக்கி பீரங்கி குண்டுகள் மூலமாக  தாக்குதல் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 01 ….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 01 கிரிகோரியன் ஆண்டு : 91_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 92_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 274 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 286 – உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக நியமித்தார். 325 – இளவரசர் சின் செங்தி தனது 4-வது அகவையில், சீனாவின் கிழக்கு யின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1545 – பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற நகரம் அமைக்கப்பட்டது. 1625 – இடச்சு-போர்த்துக்கீசப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிராவோ அபார பந்து வீச்சு…… ஹாட்ரிக் வெற்றியை ருசித்த சென்னை…..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை  8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.   12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய சாம்சன் 102*….. அரைசதம் விளாசிய ரஹானே 70 …. சன்ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்கு….!!

 ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது.  12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 […]

Categories
அரசியல்

“தமாகா_வுக்கு ஆட்டோ சின்னம்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….. !!

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகா_விற்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , புதிய தமிழகம் , தேமுதிக , புதிய நீதி கட்சி மற்றும்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கட்சியின் வேட்பாளராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலி_ யின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவை நோக்கி திரும்ப செய்தவர் ராஜமௌலி. இவர் இயக்கிய பாகுபலி 1,2 ஆகிய இரண்டும் மிக பெரிய வெற்றியை கண்டது. இவருடைய படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் போன்ற அம்சங்கள் மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. மேலும் இவர் பாகுபலி படத்திற்கு முன்பாகவே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில், தெலுங்கில் பிரபல  கதாநாயகரான  ராம்சரண் தேஜா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்சன், ரஹானே சிறப்பான ஆட்டம்….. ராஜஸ்தான் அணி 15 ஓவர் முடிவில் 122/1….!!

சாம்சன், ரஹானே பொறுப்பான ஆட்டத்தால்  ராஜஸ்தான் அணி 15 ஓவர் முடிவில் 122/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.  12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்சன், ரஹானே நிதான ஆட்டம்….. ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 75/1….!!

சாம்சன், ரஹானே பொறுப்பான ஆட்டத்தால்  ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 75/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.  12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் […]

Categories
அரசியல்

“அஞ்சா நெஞ்சனும் ஸ்டாலின்” மதுரையில் நடந்த சுவாரஸ்யம்…!!

 திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக மதுரையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , மார்க்கெட் , கடை வீதிகள் என நடந்து சென்று தி மு க தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது மார்க்கெட்டில் வணிகர்கள் , மக்களிடம் , கலந்துரையாடிய ஸ்டாலின் பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வேட்பாளருடன் சேர்ந்து குடித்தார். இதையடுத்து அங்கிருந்த ஏராளமான இளைஞர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஹா படத்தில் ஹன்சிகா_வுடன் இணையும் சிம்பு…!!!

மஹா படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வளர்ந்து வரும் பிரபல நடிகையானா ஹன்சிகா, சிம்புவுடன் இணைந்து ஜோடியாக நடித்த படம் `வாலு. இப்படத்தில் நடித்த போது  இருவரும் காதலித்தனர், ஆனால் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்  பிரிந்து விட்டனர். பிரிந்தாலும் கூட நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கூறிய இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும்  ‘மஹா’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேய் வேடத்தில் பிரபுதேவா…!!!

தேவி  படத்தின் இரண்டாவது பக்கத்தில்  நடிகர் பிரபு தேவா பேயாக நடித்துள்ளார்.  தமிழில் பேய் படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில் வருடத்துக்கு 25-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் வெளிவருகின்றன. முன்னணி நடிகைகளும் பெரும்பாலும் பேயாக நடிக்க விரும்புகிறார்கள். நயன்தாரா பேயாக நடித்த மாயா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது திரைக்கு வந்துள்ள ஐரா படத்திலும் பேயாக மிரட்டி உள்ளார். திரிஷாவும் மோகினி படத்தில் பேய் வேடம் ஏற்றார். பேய் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூல் ஈட்டி கொடுப்பதால் பேய் படங்களின் இரண்டாம் […]

Categories

Tech |