Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பை புறப்படுவதற்கு முன் ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனர்..!!

மும்பை கிளம்பிய ரஜினியை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகும் படம் தர்பார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிக்காக ரஜினிகாந்த் இன்று மும்பை செல்கிறார். மும்பை கிளம்புவதற்கு முன்பு இவரை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு உள்ளது. அங்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி அபார பந்து வீச்சு….பரிதாப நிலையில் கொல்கத்தா…. 11 ஓவர் முடிவில் 49/6…!!

கொல்கத்தா அணி 11 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 49ரன்களுடன் விளையாடி வருகிறது  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.   முதல் ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறும் கொல்கத்தா…. 6 ஓவர் முடிவில் 29/4..!!

கொல்கத்தா அணி 6 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 29 ரன்களுடன் விளையாடி வருகிறது  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். முதல் ஓவரில் தீபக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாராட்டு மழையில் நனைந்து போன தல அஜித்…!!!!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார்.   அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் உச்சக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இதற்காக பிரமாண்டமான ஒரு கோர்ட்டு மாதிரியான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   அதில், தல அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சிபடப்பிடிக்கப்பட்டது. நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அதைப்பார்த்த ஒட்டு மொத்த படக்குழுவும் கைதட்டி அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது..!!

 கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.   கொல்கத்தா அணி களமிறங்கும் வீரர்கள்  சென்னை அணி களமிறங்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடிமகன் பட இயக்குனருக்கு பிரபல நடிகர் பாராட்டு..!!!

குடிமகன் படத்தை பார்த்து விட்டு அப்படத்தின் இயக்குனருக்கு நடிகர் பாக்கியராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.  சத்தீஷ்வரன் இயக்கத்தில், ஜெயக்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘குடிமகன்’. இப்படத்தில் ஜெனிபர் நாயகியாகவும், மாஸ்டர் ஆகாஷ், பாவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகரும்,இயக்குனருமான பாக்கியராஜ் இப்படத்தை பார்த்து விட்டு பாராட்டுகள் தெரிவித்துள்ளார். கதை மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை சத்தீஸ்வரன் இயக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘குடிமகன்’ திரைப்படத்திற்கு மூன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டேவிட் வார்னர் நிகழ்த்திய மோசமான சாதனை என்ன தெரியுமா…!!

பஞ்சாப் அணிக்கெதிராக போட்டியில் டேவிட் வார்னர்  62 பந்தில் 70 ரன்கள் அடித்து   ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.    நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்டெம்புக்கு பதில் பிளாஸ்டிக் நாற்காலி…. நடு ரோட்டில் பேட்டிங் செய்த பிரட் லீ..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ ஜெய்ப்பூரில் சாலையில் சிறுவர்களுடன்  சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய  புகைப்படம்   இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஐ.பி.எல் சீசன் ஆரம்பித்து விட்டாலே  கிரிக்கெட் ரசிகர்கள்  மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரே குஷி தான். போட்டியில் விளையாடும் இந்திய  கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும், அணியின் பயிற்சியாளர்களும் தங்களது குடும்பத்தினருடன்  இந்தியாவுக்கு  வந்து ஒரு ஜாலியான டூர் அடித்துவிடுகிறார்கள். இந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் சமீபத்தில் மாறுவேடத்தில் சென்னையில்  […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி கலையும்!!.. ஸ்டாலின் அதிரடி பேச்சு!!…

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி கலையும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆணைய ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகள் மாபெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிக்க தயாராகியுள்ள கருவாப்பையா கார்த்திகா…!!!

தூத்துக்குடி படத்தின் மூலம் பிரபலமான நடிகை கார்த்திகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி விட்டார்.   ‘தூத்துக்குடி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் கார்த்திகா. இந்த படத்தில் “கருவாப்பையா கருவாப்பையா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்தவர் கார்த்திகா. இதை தொடர்ந்து தைரியம், மதுரை சம்பவம், ராமன் தேடிய சீதை, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தங்கையின் படிப்பு காரணமாக மும்பையில் சில வருடங்கள் கார்த்திகா வாழ்ந்து வந்தார். தற்போது தங்கையின் படிப்பு முடிந்துள்ள நிலையில் அவர் சென்னை திரும்பியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு….!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் விமானநிலையத்தில் பரபரப்பு..!!

சேலத்தில்  உள்ள விமான நிலையத்தில் பெண் பயணியிடம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் சென்னைக்கு  செல்வதற்காக சேலம் விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரது கைப்பை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது வெடிபொருள் இருப்பது போன்று சிக்னல் அலாரம் ஒலித்தது, அதனால் அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்தப் பெண்ணின் கைப்பையில் ரசாயனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசந்தபாலன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்..!!!

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.  வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’ இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை தந்தது. இதையடுத்து ‘ஜெயில்’ என்ற படத்தை தற்போது வசந்தபாலன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவருகிறார். விரைவில் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.   இந்நிலையில் வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்திவருகிறார். இதில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதற்கான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டிட கான்டிராக்டர் வீட்டில் கொள்ளை…!

கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட கான்டிராக்டர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் என் .பி .சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வேலைக்காரியான மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள் மற்றும் இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.இச் சம்பவம் குறித்து கட்டிட காண்டிராக்டர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி வரை போராடி தோற்றோம்….. பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை – சன்ரைசர்ஸ் கேப்டன்..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணி கேப்டன் புவனேஸ்வர் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.  நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் […]

Categories
பல்சுவை

தங்கம் பவுனுக்கு 72 ரூபாய் உயர்வு……!!

தங்கம் விலை ஒரு பவுனுக்கு 72 ரூபாய் கிடுக்கிடுவவென உயர்ந்துள்ளது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி பெற்றது மகிழ்ச்சி தான்…. இருந்தாலும் முன்னேற்றம் தேவை – கேப்டன் அஷ்வின்..!!

ஹைதராபாத்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.  நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசு ஆசிரியர்களுக்கு ஆப்பு….. டியூசன் எடுத்தால் நடவடிக்கை…. நீதிமன்றம் உத்தரவு….!!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணத்திற்கு டியூசன் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு  உத்தரவிவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிகையில் , அரசுப்பள்ளிஇஎல் வேலை பார்க்கும்  ஆசிரியர்கள் இலாபநோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கின்றார்களா என்று கண்காணித்து வேண்டும். மேலும் டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சொல்லிய அறிவுறுத்தலில் , அனைத்து அரசு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் நடிகை அமலா…!!!

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி நடிகையாக இருந்த அமலா மீண்டும் நடிக்க உள்ளார். அமலா தனது தமிழ் திரையுலகில் மைதிலி என்னை காதலி, வேலைக்காரன், மெல்ல திறந்தது கதவு,  அக்னி நட்சத்திரம், வேதம் புதிது, கொடி பறக்குது போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் அமலா 1992-ல் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.   அதன்பின்பு ஐதராபாத்தில் உள்ள விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பில் இணைந்து செயல்பட்டார். தற்போது மீண்டும் அமலா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமலை ஏமாற்றிய ரஜினி …… பிஜேபி_க்கு ஆதரவு…..!!

எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று கூறிய ரஜினி பாஜக_வின் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளார்களை  சந்தித்தார் . அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஆதரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்களுக்கு “என்னுடைய அரசியல் பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அதில்  எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேல இத பத்தி பேச விரும்பவில்லை எங்கள் நட்பை கெடுத்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார். மேலும் பாஜக வெளியிட்ட தேர்தல் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் புதிதாக ஆஸி. பயிற்சியாளர் நியமனம்..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ரீட் என்பவர் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  புவனேஸ்வரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணி கால் இறுதியில் தோற்று வெளியேறியது. இதன் காரணமாக தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய  முன்னாள் ஹாக்கி வீரர் ஹரேந்திர சிங் நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீக்கம் செய்யப்பட்ட பின்  புதிய பயிற்சியாளர்  யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்காக  புதிய பயிற்சியாளர்  தேர்வு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 54,94,84,50,00,000…… இந்தியர்களே முதலிடம்….. உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் தகவல்….!!

வெளிநாடுகளில் வேலை செய்யும்  இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அவரவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் தொகையின் பட்டியலை  உலக வங்கியானது 2018_ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டு புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில் உலகத்திலேயே இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் பணி புரிந்து கொண்டு  அதிக தொகையை இந்திய நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள பட்டியல் விவரத்தில் , இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பி.எம்.நரேந்திரமோடி படத்தை பாராட்டிய காஜலுக்கு பலர் எதிர்ப்பு…!!!!

நடிகை காஜல் அகர்வால் பி.எம்.நரேந்திரமோடி படத்தை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதை பலரும் கண்டித்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரித்தனர். தேர்தல் கமிஷனையும், நீதிமன்றத்தையும் அணுகினர் ஆனால் படத்துக்கு தடை விதிக்கவில்லை. இந்த படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து பி.எம்.நரேந்திரமோடி படம் திரைக்கு வரஇருக்கிறது இதற்க்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவேக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் : சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…. பணம் மற்றும் செல்போன் பறிமுதல்..!!

   மங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும்  செல்போன் பறிமுதல் செய்தனர்.   12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இப்போட்டியில் 8 அணிகள்  பங்கேற்றுள்ளன.  ஒவொரு அணியும் மற்ற அணியுடன்  தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள்  ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று  இறுதிப்போட்டிக்கு செல்லும். ஐபிஎல்லில் ஒவ்வொரு வருடமும்  சூதாட்ட […]

Categories
பல்சுவை

தங்கம் பவுனுக்கு மீண்டும் 08 ரூபாய் உயர்ந்தது….!!

தங்கம் விலை ஒரு பவுனுக்கு 08 ரூபாய் உயர்ந்து காணப்படுகின்றது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

“என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே முடியும்” முக.ஸ்டாலின் ஆவேசம்…!!

என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே மக்களை மதத்தால் பிரிக்க முடியும் என்ற முக.ஸ்டாலின் கன்னியாகுமாரியில் பேசியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை   மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்   காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் , மக்களவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஜீரோ அறிக்கை என்று விமர்சனம் செய்த ஸ்டாலின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாய் மகனை கொன்று விட்டு 22 சவரன் கொள்ளை…..!!

நகைக்காக தாய் மகனை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் அருகேயுள்ள  பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிடபட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் வழியாக எகிறி குதித்து வீட்டிற்குள்ளே சென்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை : இந்திய அணியின் 15 வீரர்கள் யார்..? ஏப்ரல் 15ம் தேதி அறிவிப்பு..!!

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெரும்  வீரர்கள் விவரம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படவுள்ளது.  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படம் நடிக்க பயமாக இருக்கிறது……இலியானா கருத்து…!!!

முன்னணி நடிகையான இலியானா படம் நடிக்க பயமாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.    இது குறித்து இலியானா கூறுகையில், சமூக வலைத்தளத்தை பயன்படுத்து மக்கள் அதிகமாக நடிகர்-நடிகைகள் பற்றி தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் இப்போது படத்தில் நடிக்கிறார்களா இல்லையா இப்போது யாருடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள நினைக்கிறார்கள்.   ஒரு சர்வேயில் பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா,தீபிகா படுகோனே ஆகியோரை விட என்னைத்தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக தேடி வந்தனர் என்றனர் இலியானா. சில மாதங்கள் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

பாஜக ஜீரோ , காங்கிரஸ் சூப்பர் ஹீரோ… தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலின் கருத்து….!!

பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வசந்தகுமார் வேட்பாளராக களமிறங்குகின்றார். அதே போல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில்  பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்குகின்றார். இதையடுத்து நாகராஜகோவில் திடலில் வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் முக. ஸ்டாலின் பரப்புரை செய்தார். அப்போது, பேசிய ஸ்டாலின் , பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் பாஜக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR பலப்பரீட்சை…… ஆண்ட்ரே ரஸெலின் அதிரடியை கட்டுப்படுத்துவாரா தோனி..?

ஐ.பி.எல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.  இந்த இரண்டு அணிகளுமே கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடி  வெற்றிப் பெற்ற்றுள்ளது. சி.எஸ்.கே முன்னதாக நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது.  சிஎஸ்கேவின் அபார சுழற்பந்து வீச்சினால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் கோவை வருகின்றார் பிரதமர் மோடி….!!

தேர்தல்  பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 நாடாளுமன்ற தொகுதியில் ஓன்று கோவை நாடாளுமன்ற தொகுதி. இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடராஜனும் அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா” பட்டைய கிளப்பிய ரஜினியின் தர்பார்…!!

இயக்குனர் முருகதாஸ் ரஜினி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து நடிகர் ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் , அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகவுள்ள அந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்றும் பேசப்பட்டது. மேலும் சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நடிகை நயன்தாராவுடன்  மீண்டும் ரஜினி நடிக்கிறார். ரஜினிகாந்தின்  167வது படமாக […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பாஜகவிற்கு தலைவர்கள் கண்டனம்….!!

பாஜகவின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் தொடர்பான வாக்குறுதிகளுக்கு அம்மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு  வரும் 11 தேதி தொடக்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை […]

Categories
பல்சுவை

உயர்ந்தது பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்….!!

பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அஷ்வினை கிண்டல் செய்யும் விதமாக வார்னர் செய்த காரியம்…!!

  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அஷ்வின் பந்தை வீசும் போது  கிண்டல் செய்யும் விதமாக வார்னர் பேட்டை கிரீசுக்குள் வைத்திருந்தார்.   சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தீர்மானித்தது.  இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தனிநபர் தாக்குதல் வேண்டாம்” ஸ்டாலினுக்கு நீதிபதி அறிவுரை…!!

கோடநாடு விவகாரத்தில் முதல்வரும் , ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோடநாட்டில் நடைபெற்ற கொலை , கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம் ஸ்டாலின் மீதான விசாரணைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் மோடி வேண்டாம் மோடி….. ராகுலுக்கு பெருகும் ஆதரவு….. புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு…!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவு குறித்து புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட  கருத்துக் கணிப்புகளின்  முடிவுகள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகி 7 கட்டமாக நடைபெறுகின்றது. மேலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்ளின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய  கருத்துக் கணிப்பு ஒன்றினை […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

தவறாக பாஸ்வேர்டை பதிவு செய்த குழந்தை….. 48 வருடங்கள் முடங்கிய ஐ-பேட்…!!

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரின் குழந்தை  தவறாக  பாஸ்வேர்டை பதிவு செய்த காரணத்தால் ஐ-பேட் 48 வருடங்கள் முடங்கியுள்ளது. இந்திய சந்தைகள்  மற்றும்  உலகம் முழுவதும் விலை உயர்ந்த  போன்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் அல்லது ஐ-பேட் ஆகும். பொதுவாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துபவர்கள்  ஐ-பேட் அல்லது ஐ-போனை பயன்படுத்தினால் புதுவிதமாகவும், சற்று கடின சவாலாகவும் இருக்கும். ஏனென்றால் அந்த போனில் இருக்கும் ஆப்ஷன்கள் அனைத்தும் சற்று வேறுபாடாக வே  இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வேறு எந்தமொபைல் போனில் இருந்தும் ஐ-போனிற்கு டேட்டாக்களை […]

Categories
உலக செய்திகள்

ஆண் மலைப்பாம்பை வைத்து பெண் மலைப்பாம்பை பிடித்த விஞ்ஞானிகள் ……!!

 ஆண் மலைப்பாம்பு உதவியுடன் 17 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பை விஞ்ஞானிகள் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் பிக் சைப்ரஸ் என்ற தேசிய வனப்பகுதியில் சில காலமாக பறவை, முயல் உள்பட சிறிய வகை விலங்குகள் அடிக்கடி மாயமாகி வந்தன.  இதுகுறித்து ஆராய்ந்ததில் பெண் மலைப்பாம்பு ஒன்று இந்த விலங்குகளை வேட்டையாடி வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும் அந்த மலைப்பாம்பு பெரிய உயரமும் , 64 கிலோ கிராம் எடையும் கொண்டுள்ளது என தெரிந்ததையடுத்து வனத்துறையினர் விஞ்ஞானிகளின் உதவியுடன் மலைப்பாம்பை பிடிக்க திட்டமிட்டனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெத் ஓவரில் “நோ பால்”…. தோனியை புகழ்ந்த தீபக் சாஹர்…..!!

டெத் ஓவரில் நோபால் வீசியது குறித்து கேப்டன் தோனியையும், அணியையும்  தீபக் சாஹர் பெருமையாக கூறியுள்ளார்.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியின் போது  தீபக் சாஹர் வீசிய 2 ‘நோ பால்கள்’ மிக முக்கியமானது. முதலில் களமிறங்கி விளையாடிய சி.எஸ்.கே  160 ரன்கள்  குவித்தது. பின்னர் இலக்கை துரத்திய  பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள்  தேவைப்பட்டது. இதில் சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானின் F-16 போர் விமானம்…. சுட்டு வீழ்த்திய ஆதாரத்தை வெளியிட்டது இந்தியா…!!

இந்தியா விமானப் படை பாகிஸ்தான் நாட்டின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதரத்தை வெளியிட்டுள்ளது. ஜம்மு மாநிலத்தின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட CRPF  வீரர்கள் தற்கொலை படை மூலமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் அதிகாலையில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது. தாக்குதல் நடந்த அன்றே இந்திய எல்லைக்குள் பதிலடி தாக்குதல் கொடுக்க பாகிஸ்தான் விமானப்படையின் F-16 ரக போர்விமானங்கள் அத்துமீறி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

திமுக 33 ……பாஜக 279 ….. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தகவல்…!!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்குமென டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகி 7 கட்டமாக நடைபெறுகின்றது. மேலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்ளின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய  கருத்துக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப்..!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில்  பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி  ஸ்டேடியத்தில் இரவு  8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 09….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 09 கிரிகோரியன் ஆண்டு : 99_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 100_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 266 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்  190 – தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர். 1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர். 1288 – மங்கோலியரின் வியட்நாம் படையெடுப்பு: பாக் டாங் (இன்றைய வடக்கு வியட்நாம்) சமரில் யுவான் படைகள் திரான் படைகளிடம் தோற்றன. 1413 – ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார். 1440 – பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார். 1609 – எண்பதாண்டுப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இரண்டாவதும் ஆண்குழந்தை பிறந்துள்ளது..!!

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்  ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சசிகுமார் கதாநாயகனாக லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்த இப்படம் 2012ம் ஆண்டு வெளியாகி வெற்றி கண்டது. இதை தொடர்ந்து இவர் இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இது தவிர, தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் – மடோனா செபஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள  இப்படத்தின் படப்பிடிப்பு பணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காஞ்சனா 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்..!!தணிகை குழு அறிவிப்பு..!!

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திற்கு தணிகை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.     தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே ராகவா லாரன்ஸ் படம் தான்.இவர் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான படம் `முனி’. இதைத்தொடர்ந்து இவர் இப்படத்தின் இரண்டாவது பாகமான காஞ்சனா படத்தை வெளியிட்டார், இதனால் ரசிகர்களுக்கு ராகவா மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது, இதை உண்மையாகும் வகையில் இவர் காஞ்சனா 2 படத்தை  வெளியிட்டு வெற்றிகண்டு  தற்போது காஞ்சனா 3 படத்தை தயாரித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை !.. சோதனையில் 65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலை மீட்பு !!….

  பிரான்சில் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலைகலை  சென்னைக் மீனம்பாக்கம் விமானத்தில் கடத்திய வாலிபர் கைதுசெய்யப்பட்டார் . பிரான்சில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ தங்க விநாயகர் சிலையை கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து பின் சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டனர் . சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்திற்கு  பிரான்சில் இருந்து வந்த விமானத்தாய் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர் .  அப்போது […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

8 வழி சாலை தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு!!… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு !!..

எட்டு வழிச்சாலை தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு  எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . எட்டு வழிச்சாலை திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து  சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வலி சாலை தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளது  மேலும் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நிலா உரிமையாளர்களிடமே 8 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரின் அன்பில் மாற்றம் – நடிகை சமந்தா

கணவர் நாக சைதன்யாவின் அன்பில் மாற்றம் உள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று அழைக்கப்படுபவர் நடிகை சமந்தா. இவர் 2 வருடத்திற்கு முன்பு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கூட நடிகை சமந்தா தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் ‘மஜிலி’ என்ற படத்தில் நடித்துள்ளனர்.   இந்த படத்தில்இருவரும் கணவன் மனைவியாக நடித்ததற்கான காரணத்தை சமந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]

Categories

Tech |