Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் குண்டுவெடிப்பு எச்சரிக்கை :”5 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு “

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழகத்திலும் முக்கியமான நகரங்களில்  குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுரை விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவு துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது இதனையடுத்து விமான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“84 பறக்கும் படை 20 லட்சம் பறிமுதல் “தொடரும் தேர்தல் ஆணையத்தின் வேட்டை !!…

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வரும் பட்சத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் வரையிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன இந்த பணத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் , மேலும் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கவும் தேர்தல் நடத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லா குற்றாலம் “தமிழகத்திற்கு பொதுமக்கள் நன்றி !!!….

தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் பகுதிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதன் அழகை ரசிக்க சந்தோஷத்துடன் குளித்து மகிழ வருடந்தோறும் வந்து கொண்டே இருப்பார்கள் தமிழகத்திலேயே மிக அதிக அளவிலான மக்கள் கூட்டம் வரக்கூடிய சுற்றுலாத்தளமாக குற்றாலம் இருந்து வருகிறது இதனால் ஏராளமானோர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததால் அப்பகுதி முழுவதும் குப்பை கிடங்காக காணப்படும் ஆனால் இந்த வருடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

“பாணி புயலால் தமிழகத்திற்கு பிரச்சனை இல்லை “வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட திடீர் தகவல்!!…

வங்ககடலில் உருவாகியுள்ள  பானி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பாணி புயல் தோன்றியது .முதலில் இந்த புயலால் தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.இந்நிலையில்,சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புயல் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்  அவர் கூறியதாவது,வங்ககடலில் உருவாகியுள்ள பானி புயல் 1050 கிலோ […]

Categories
அரசியல் சென்னை

திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி நேற்று காலமானார்…..மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!!!!

திராவிடமுன்னேற்றக்கழக  முன்னாள் எம்.பி.யான வசந்தி ஸ்டான்லி, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று  காலமானார்.   வசந்தி ஸ்டான்லி, 2008ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். ஏற்கனவே  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார் .ஆனால்  சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது.அவரது உடல், ராயப்பேட்டை லாய்ட்ஸ் காலனியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை ”…முகமூடி அணிந்து கைவரிசை!!!

கோவையில் உள்ள முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கபட்டதாக புகார் அளிக்கப்பட்டு  போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ,நேற்று மாலை திவ்யா, ரேணுகா என்ற இரு ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தில் பணியில்  இருந்ததாகவும், காவலாளி இல்லை  எனவும் கூறப்படுகிறது. அப்போது முகமூடி அணிந்து வந்த  மர்மநபர்   812 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக அந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு ரிசல்ட்…

 நாளை 10-ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடப்படவுள்ளது . நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது . நாளை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று  அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் மே 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வேண்டுவோர் மே 6ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 2 முதல் […]

Categories
பல்சுவை

தங்கம் கிடு கிடு உயர்வு…. பவுனுக்கு ரூ 104 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்கு இதமான இளநீர் …….

வெப்பநாடுகளில் வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இளநீர் .  கோடை வெயிலில் இருந்து நம்மை  பாதுக்காக்கவும் , உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை நிறைந்து  உள்ளன. வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்குகிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஜீரணக் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையே வேண்டாம்” இந்திய அரசு வேண்டுகோள்…!!

இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து  குண்டுவெடிப்பு  நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 300_க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியதாக IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து நேற்று இலங்கையின் கல்முனையில் உள்ள  வீட்டில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. பீதியில் பொதுமக்கள்….!!

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொடூரம் …..கூலி தொழிலாளி வெறிச்செயல் !!!!!….

புதுவையில் கூலித்தொழிலாளி, இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி,  குமரகுருபள்ளத்தை சேர்ந்த 35 வயதான  கீதா, தனது  2 குழந்தைகளுடன்   கணவனை பிரிந்து, கீதா சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் தட்டுவண்டி தொழிலாளியான ஆனந்த் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது .திருமணமான ஆனந்த் அவ்வப்போது கீதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும்  இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்  ஆத்திரமடைந்த ஆனந்த் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன் கைது…!!

குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் மாற்றமில்லை….. இன்றைய விலை நிலவரம்!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]

Categories
கவிதைகள் பல்சுவை

அன்னையின் பாச கவிதைகள்…!!!

அன்னையே-அன்னையே!!!!! என் தேசத்தின் ஒளியே! நான் வேரூன்ற ஊட்டமளித்தவளே! மார்மீது என்னை வைத்து தாலாட்டியவளே! – உன் மடிமீது தவழ்ந்து நான் செய்த இம்சைகளை பொறுத்தவளே! ஈரேழு மாதங்கள் எனை தாங்கி நடந்தவளே!! என் நூலகமே! ஞானியே! – உன் ஆசைகளை எங்களுக்காய் துறந்தவளே!                                                […]

Categories
பல்சுவை

சே. ப. இராமசுவாமி ஐயர் வாழ்க்கை வரலாறு…!!

  ஒவ்வொரு நாளும் சிறப்பான தலைவர்களை குறித்து காண்கிறோம். இன்றைய நாளில் தலைவர்  சே. ப. இராமசுவாமி ஐயர் பற்றி பார்ப்போம். வரலாறு : பெயர்                 : சே. ப. இராமசுவாமி ஐயர் இயற்பெயர்     : சி. பி. ராமசுவாமி பிறப்பு                : 12-11- 1879 இறப்பு                : 26-09-1966 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேரன், மூதாட்டியை தாக்கிய விவசாயி கைது…!!

வல்லம் பகுதியில் மூதாட்டி ,பேரன் மீது விவசாயி தாக்கியதால் போலீசார் கைது  செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஊராட்சி அடுத்துள்ள குருங்குளத்தில் வசிப்பவர் மலர்க்கொடி (வயது 68 ). மூதாட்டியின் பேரன் ஆகாஷ் ( வயது 16). இவர்கள் இருவரும் குருங்குளம் அடுத்துள்ள கரும்புத்தோட்டத்தில் இருந்து அவர்களுடைய  வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். குருங்குளம் சாலையில் செல்லும்பொழுது அதே ஊரைசேர்ந்த விவசாயி சிவகுமார் (வயது 39) என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார். அப்போது சிறுவனின் எதிரெ லாரி வந்ததால் நிலைத்தடுமாறிய ஆகாஷ் சிவகுமார் பைக் மீது […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 28….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டு : 118_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 119_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 247 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார். 1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. 1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது. 1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான்..!!

ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது   ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது . இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர்.  கேன் வில்லியம்சன் 13 ரன்னில்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”எஜமானுக்காக உயிரை விட்ட பப்பி”…..!!

 தாஞ்சாவூரில் தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தனதுயிரை கொடுத்த நாயின் நன்றியுணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்  மாவட்டம்   வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நடராஜன். இவர் விவசாயி ஆவார் . இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த நான்கு  ஆண்டுகளாக  பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் வெளிக்கு  சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி  பின்னே சென்றது. திடீரென  ஐந்து  அடி நீளமுள்ள  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மனிஷ் பாண்டே அதிரடி….. ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு..!!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 160 ரன்கள்  குவித்துள்ளது  ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். கேன் வில்லியம்சன் 13 ரன்னில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சுரேஷ் பிரபு…!!!

அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு பதிலலித்துள்ளார்.  இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் பேரணிகளுக்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும், தேர்தல்  ஆணையம் மக்களுக்கு நல்லது செய்ய தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் பேரணிகளுக்கு 10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் இவருடன் செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து…. 17 பேர் பரிதாப பலி…!!

உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இங்கு தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காவலாளியை திருடன் என்று கோஷமிடுங்கள்” ராகுல் காந்தி மீது வழக்கு…!!

காவலாளி ஒரு திருடன் என்று கோஷம் எழுப்புங்கள் என்று கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றதேர்தலின் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முவைத்தார். மேலும் நான் இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் , நான் ஊழல் செய்யமாட்டேன் , யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற  தன்னுடைய  பிரசாரத்தை முன்வைத்தார். மேலும் மோடி பயன்படுத்திய காவலாளி என்ற சவுகிடார் என்ற ஹிந்தி வார்த்தையை பாஜகவினர் பலரும் பிரபலபடுத்தினர். இந்நிலையில் பிஜேபி மீது ரபேல் போர் விமான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி :”7 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்து கரண்ட் ஷாக் வைத்து கொன்ற 12 ஆம் வகுப்பு மாணவன் “திண்டுக்கலில் பரபரப்பு !!

திண்டுக்கல் அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திண்டுக்கல் பகுதியை அடுத்த குரும்பபட்டி பகுதியில்  7ஆம்  வகுப்பு படித்து வந்த மாணவி,  சில நாட்களுக்கு முன்பு  வாயில் வயரை கடித்த நிலையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில்  ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு  தகவல் அளித்தனர் . தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர்  , மாணவியின் உடலை  பிரேத […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பரிந்துரை..!!

அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா  ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய விளையாட்டுத் துறையில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு  உயர்ந்த விருதான அர்ஜூனா விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில்  நடப்பு ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்குவதற்கு  இந்திய கிரிக்கெட் வீரர்களை  தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில்  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை பூனம் யாதவ்,  இந்திய கிரிக்கெட் வீரர்கள் , ஜஸ்பிரீத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மோடி….ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…!!!

பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்காக அதிக பணம் செலவிடப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார் .    இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுவது தெரிந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து இவர் கூறுகையில், பிரதமரின் பேரணிகளுக்கு முன்பை விட  அதிக அளவு செலவு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு பேரணிக்கும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும்,  நாட்டு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

12 மணி நேரத்தில் வலுப்பெறும் “ஃபனி புயல்”….. தமிழகம், புதுச்சேரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“விதிகள் தெரியாத கவுதம் காம்பீர்” ஏன் ஆடுகிறார்..? ஆம் ஆத்மி வேட்பாளர் ட்வீட்…!!

விதிகள் தெரியவில்லை என்றால் கவுதம் காம்பீர் ஏன் விளையாட வேண்டும்? என்று  ஆம் ஆத்மியின் கட்சியின் வேட்பாளர் அதிஷி ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற மே 12_ஆம் தேதி நடைபெற  இருக்கின்றது. இதில் டெல்லி கிழக்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார்.  இவர் கடந்த வியாழகிழமை முன் அனுமதியின்றி ஜாங்புரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

19 பயங்கரவாதிகள்.. “அடுத்தடுத்து குண்டு வெடிப்பு” முன்னாள் ராணுவ வீரர் கைது..!!

தமிழகம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என்று போலியாக போன் செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஓசூரில் இருந்து பேசிய மர்ம ஆசாமி ஒருவர்  தென்னக ரெயில்கள் , ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் என்றும், இராமநாதபுர மாவட்டத்தில் 19 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளார்கள் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரு போலீசார் தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 மாநிலங்களில் வெடிகுண்டு தாக்குதல்” பொய் தகவல் அளித்த மர்ம ஆசாமி கைது…!!

தமிழகம் பல முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் அளித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம நபர் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், தெலுங்கானா, கோவா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில், குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் இதற்காக 19 பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்க அதிக வாய்ப்பு  உள்ளதாகவும் தகவலை சொல்லிவிட்டு அந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவுதம் கம்பீர் மீது வழக்கு பதிவு…. தூள் கிளப்பும் டெல்லி போலீஸ்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.  பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆக இருந்தவர். தற்போது பா.ஜ.க.  சார்பில் கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அனுமதியின்றி பேரணி நடத்தியுள்ளார். இதனால் இவர் தேர்தல் விதிகளை மீறுகிறார் என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், காவல்துறையினரிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. இதைத் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“3 வயது குழந்தையின் தலைமுடியை இழுத்து அடித்த திமுக செயலாளர் “ஆத்திரத்தில் புகார் அளித்த தந்தை !!!..

திருச்சி அருகில் நில பிரச்சனையை மனதில் கொண்டு குழநதையை தாக்கிய திமுகவின் நகர செயலாளர் மற்றும் ttv தினகரன் ஆதரவாளர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்  திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர்  அழகுமணி.இவருக்கும் அப்பகுதியை  சேர்ந்த  திமுகவின் முன்னாள்  நகர செயலாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே  நிலத்தகராறு என்பது நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகுமணியின் மூன்று  வயது குழந்தையை ரவிச்சந்திரன் மற்றும்  டிடிவி தினகரனின் ஆதரவாளர் சரவணன் ஆகிய இருவரும்  துணியை  கிழித்து தலைமுடியை இழுத்து அடித்ததாக அழகுமணி காவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்… வில்லியம்சன் அவுட்..!!

 டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தற்போது ஹைதராபாத் அணி 6 ஓவரில்  1 விக்கெட் இழந்து 51 ரன்களுடன் விளையாடி வருகிறது.     ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகள் கூண்டோடு மற்றம்… சென்னை நீதிமன்றம் அதிரடி…!!

அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திற்குள்  நுழைந்த பெண் அதிகாரி விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வாக்குப் பதிவு என்னும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இதற்க்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வாக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம்”- எம்எல்ஏக்கள் பேட்டி…

  கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறுகையில், ”நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான்  வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை”என கூறினார் . மேலும் நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி “ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள் !!!…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் நடைபெற்ற  ஜல்லிகட்டு போட்டியை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த  பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது .போட்டி நடைபெறும் முன்  புனித அந்தோணியார் தேவாலயத்தில்  காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின் சீர்வரிசை தட்டுகளுடன் காளைகளை அழைத்து சென்று  சென்று, அங்கு வித்தியாசமான முறையில்  அமைக்கப்பட்ட வாடிவாசலில் இருந்து  காளைகள்  அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்நது  செல்லும்  காளைகளை    வீரர்கள் அடக்கிப் பிடிக்கும் காட்சியை  காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான  மக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடும் பயிற்சிக்கு கிடைத்த வெற்றி !!…”தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 3 மாணவிகள் தேர்வு “

டெல்லியில் நடைபெற இருக்கும்  தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தேர்வில் சிவன்கையை சேர்ந்த மஃமூன்று மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்  சிவகங்கை மாவட்டத்தில்  விளையாட்டு அரங்கினுள்  அமைந்துள்ள நீச்சல் குளத்தில்  மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில்  கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர்  கடலூர் மாவட்டம்  நெய்வேலி பகுதியில்  நடைபெற்ற சென்னை  மண்டல அளவிலான போட்டியில்  சிவகங்கை மாவட்டத்தில் இருந்து  11 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் நேத்ரா,சண்முகப்ரியா ,சாரிகா ஆகியோர் வெற்றி பெற்று வரும் […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

“மாணவர்களிடம் போதை பொருள் விற்போர் மீது நடவடிக்கை “பள்ளி கல்வித்துறை அதிரடி !!..

பள்ளி மாணவர்களிடம்  போதைப்பொருள் விற்போர் குறித்த தகவலை  காவல்துறையினரிடம் அளித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது . பள்ளிகளுக்கு அருகிள் போதைப்பொருள்களை  விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்த தகவலை காவல்துறையினரிடம்  தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை இயக்குநர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளிட்டுள்ளார் . இந்த அறிக்கையானது  தமிழகத்தின்  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்விதுறை அலுவலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது ,பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்கள்,உருளைகிழங்கு சிப்ஸ் […]

Categories
Uncategorized

“புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ,புதியதாக உருவாக்கப்பட்ட 5 பேரிடர் மீட்பு குழு “அரியலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு !!…

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உருவாகியுள்ள இந்த புயலுக்கு பாணி என்று பெயரிட்டுள்ளனர். மேலும் புயலானது வருகின்ற 30 ஆம் தேதி தமிழகத்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களையொட்டி  கரையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் “உயர்ந்து கொண்டே இருக்கும் குடிநீர் விலையால் பொதுமக்கள் அவதி!!…

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுக்கள் குடிநீரை அதிகவிலைக்கு வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . சென்ற ஆண்டு போதிய அளவு கன மழை இல்லாததால் ஏரிகளில் நீர் வரத்து மோசமான நிலையில் குறைந்துள்ளது குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கும் செம்பரம்பாக்கம் சோழவரம் பூண்டி ஆகிய ஏரிகள் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தேவைப்படும் நிலையில் வெறும் 550 லிட்டர் மட்டுமே […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஏ.பி.எஸ். வசதியுடன் புதிய பல்சர் NS160….!!!!

பஜாஜ் நிறுவனமானது ஏ.பி.எஸ். வசதியுடன் தயாரிக்கப்பட்ட பல்சர் NS160 பைக்கின் இந்திய விலையை நிர்ணயம் செய்துள்ளது.  தற்போது இளைஞர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் வாகனமாக பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்.எஸ்.160 மோட்டார்சைக்கிள் உள்ளது. தற்போது  இந்நிறுவனம் இந்த வாகனத்துடன் ஏ.பி.எஸ். வசதியை சேர்த்துள்ளது.இந்த பல்சர் என்.எஸ் 160 மாடலில்  புதிதாக ஏ.பி.எஸ். வசதி பொறுத்தப்பட்டது தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பைக்கில் 160.3 cc திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 15.5 HP திறனை 8,500 RPM வேகத்திலும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அனிமேட்டட் ஸ்டிக்கர்ஷுடன் அப்டேட்டாகும் வாட்ஸ் ஆப் …..!!!!

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதியதாக அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வாட்ஸ் ஆப் உடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.  நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்யும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனமானது தனது புதிய அப்டேட்டான அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வெளியிட திட்டமிட்டு வருகிறது. விரைவில் இந்த வசதியை பயனர்கள் பயன்படுத்தும் வகையில் வெளிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் ஒருவருக்கு ஒரு ஜிப் பைல் அனுப்புகிறோம் என்றால் அது சில நோடிகளில் நின்றுவிடும், […]

Categories
பல்சுவை

உயர்ந்த பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்…. இன்றைய விலை நிலவரம்….!!

இன்றைய பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 27….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டு : 117_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 118_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 248 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார். 629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். 711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர். 1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டி : மும்பையை பழி தீர்க்குமா சென்னை.?

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது  ஐ.பி.எல் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் அதன் சொந்த மண்ணில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி அதனுடைய சொந்த மண்ணில் வெல்லும்  வெல்லும் என ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

தமிழகம் , ஆந்திரா_விற்கு எச்சரிக்கை….. “மிக கனமழை_க்கு வாய்ப்பு” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற […]

Categories
அரசியல்

“அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும் “அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…!!

நாடாளுமன்ற மற்றும்  சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் 2_ ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த 18 _ ஆம் தேதி நாடடைபெற்று முடிந்த நிலையில் அறிவிக்கப்படாத  4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளம் வீரர் பராக் ஆட்டத்தை பார்த்து புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித்.!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பராக் ஆட்டத்தை  புகழ்ந்து பேசியுள்ளார்  ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 […]

Categories
உலக செய்திகள்

இரட்டையர்கள் அதிகம் வாழும் நைஜிரீயா…. ஆய்வில் தகவல்…!!

உலகத்தில் அதிகமான இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள், இதில் அதிகமான இரட்டையர்கள் நைஜிரீயாவில் தான் இருக்கிறார்களாம். உலகத்தில் முந்தைய காலகட்டத்தை விட தற்போது அதிகமான இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் பரம்பரை பரம்பரையாக இரட்டையர்கள் பிறந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் என நகரங்களில் இரட்டையர்களின் எண்ணிக்கை நிரம்பியிருக்கிறது. இதில் ஒரு சில இடங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் அவ்வப்போது குழப்பம் ஏற்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதில் அதிகமான இரட்டையர்கள் நைஜிரீயாவில் உள்ள இக்போ ஓரா நகரத்தில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |