முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது, டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் சாலை வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து வந்தது. அப்பொழுது அங்கிருந்த வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி, பேருந்து சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து […]
