Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இன்று முதல் பெட்ரோல் இலவசம் “பொது மக்கள் மகிழ்ச்சி ..!!

ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர்  அறிமுகப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை  விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக கட்டாயமான முறையில் ஹெல்மெட்  அணிந்து இருப்போருக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டத்தை ஜூன் 1 முதல் அமுல்படுத்த திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் சொன்னபடியே ஹெல்மட் அணிந்திருப்பவருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும்  என்ற திட்டத்தை இன்று முதல் தொடங்கி வைத்துள்ளனர். திருச்செந்தூரில் […]

Categories
பல்சுவை

தங்கம் உயர்வு “பவுனுக்கு ரூ 08 அதிகரித்தது” பொதுமக்கள் கவலை…!!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 8 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (01/06 […]

Categories
மாநில செய்திகள்

ஆபத்தான PUBG …!! ” விளையாண்ட சிறுவன் மாரடைப்பால் மரணம் “

மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்ட நேரம் pubg விளையாடியதால் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நீமூச் பகுதியில் பர்கான் குரேஷி  என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் இரவு முழுவதும் pubg விளையாடியுள்ளார். விளையாடி விட்டு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கி ,மீண்டும் எழுந்து சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்து விட்டார் . தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாக pubg கேம்மை விளையாடியுள்ளார். இதனால் சோர்வடைந்து […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் , டீசல் விலை குறைவு” பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

இரண்டாவது நாளாக  பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 இடம்” அமைச்சர் பேட்டி ..!!

மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 2 பேர் இடம்பெற்ற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை […]

Categories
மாநில செய்திகள்

 மத்திய அரசு பொதுத்துறையில் “தமிழருக்கே வேலை” சட்டம் இயற்ற வைகோ வேண்டுகோள்..!!

 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% பணிவாய்ப்பு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டுமென்று வைகோ தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்தே வாட்டி வதக்கி வருகின்றது.இதனால் படித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா_வின் உதவி பொது செயலாளர் “இந்திய பெண் நியமனம்” குவியும் பாராட்டுக்கள்..!!

ஐ.நா சபையின் உதவி பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணிக்கு   பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளராக இந்திய நாட்டினை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா சபையின் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச்செயலாளர் குட்டரஸ் அறிவித்துள்ளார். ஐ.நா_வில் உதவி பொது செயலாளராக இந்தியாவை சேர்ந்த அதுவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டதையடுத்து பலரும் அனிதா பாட்டியா_விற்கு வாழ்த்து […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“ஜூன் 3_இல் பள்ளிகள் திறக்கப்படும்” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

தமிழகத்தில் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்பதில் எந்த மாற்றமுமில்லை என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல இந்தமுறையும் வெயிலின் […]

Categories
பல்சுவை

“முதலீட்டாளர்கள் கவலை” சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவில் முடிந்தது….!!

நேற்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வில் தொடங்கி சரிவில் முடிந்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். பங்கு சந்தை : பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. இங்கு நிறுவனங்களின் பங்குகள் விலைக்கு விற்பனை செய்யப்படும். பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் முதல் மிகப்பெரும் பணக்காரர்கள் வரை  எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குபெறலாம் . பங்குச் சந்தை நிறுவனங்களின் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது நிறுவனத்தின்  பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது . மும்பை பங்கு சந்தை : மும்பை பங்குச் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 01..!!

இன்றைய தினம் : 2019 சூன் 01 கிரிகோரியன் ஆண்டு : 152_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 153_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 213 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1215 – மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார். 1533 – ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார். 1535 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைகள் துனிசுவில் உதுமானியரைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர். 1649 – பிலிப்பீன்சு, வடக்கு சமரில் எசுப்பானியக் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 1660 – மேரி டயர் மாசச்சுசெட்சில் குவேக்கர்களைத் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார். 1670 – இங்கிலாந்தின் டோவர் நகரில், இங்கிலாந்தின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்….!!

வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது. விவசாயி தினேஷ்குமார் தற்கொலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வயநாட்டிற்கு புறப்படும் ராகுல்” வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்…!!

வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 7, 8 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி அமேதியில் மக்களவை தொகுதியில்  தோல்வி அடைந்தார். அதே நேரம் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். வயநாடு மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” பாஜக MP எச்சரிக்கை…!!

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” ஜெகதால் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என்று பாஜக MP எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜக_வும் எப்படியாவது மேற்கு வங்கத்தில் கால் ஊன்றிவிட வேண்டுமென்று தீவிரமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் திரிணாமுல் , கம்யூனிஸ்ட் என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக தனக்கான […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் முன்பு “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” பாஜகவினர் 10 பேர் கைது…!!

மேற்கு வங்க முதல்வர் முன்பு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கோஷம் போட்டதாக பாஜகவினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா 18 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிரட்டும் தன்ஷிகா..!!

நடிகை தன்ஷிகா “யோகி டா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நடிகை தன்ஷிகா ரஜினிகாந்த் நடித்த `கபாலி’ படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், தன்ஷிகா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தன்ஷிகா நேர்மையாக இருப்பதால் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் கதை. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மனோபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-3’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

`”வல்லவனுக்கும் வல்லவன்” 4 வேடத்தில் அசத்தும் பிரபல நடிகர்..!!

பாபிசிம்ஹா “வல்லவனுக்கும் வல்லவன்”என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜிகணேசன் ‘நவராத்திரி’ என்ற படத்தில் 9 வேடங்களிலும், உலக நாயகன் கமல்ஹாசன் `தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களிலும்  நடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களைப் போலவே  பிரபல நடிகர்கள் 2 , 3 வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பாபிசிம்ஹா,”வல்லவனுக்கும் வல்லவன்” என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருடன்  ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோர்  நடித்துள்ளனர்.  விஜய் தேசிங் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் […]

Categories
தேசிய செய்திகள்

“S -400 ஏவுகணை வாங்கும் இந்தியா” எச்சரிக்கும் அமெரிக்கா..!!

ரஷ்யாவிடம் இருந்து S -400 ஏவுகணையை  இந்தியா வாங்குவதால்  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய விமான படை  ரஷ்யாவிடமிருந்து, 400 கி.மீட்டர் தூரத்தில்  வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழியில் மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட  எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளது. சீனா மற்றும்   பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிநவீன S -400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே  பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு…… அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி….!!

சித்தா மற்றம் ஆயுர்வேத படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் படைப்பு கலை சிகிச்சை மையம், காற்றழுத்த குழாய் வழி அதி நவீன ஆய்வக சேவையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். இது மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பராமரிப்பதற்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய அமைச்சரவை கூட்டம்” மோடி தலைமையில் நடைபெற்றது…!!

பதவியேற்ற புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் பந்து வீச்சு…. சுருண்டு வீழ்ந்த பாகிஸ்தான்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்  –  பாகிஸ்தான்  அணிகள் மோதியது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-ஹக்கும், ஃபகர் சமானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின்  3வது ஓவரில் ஷெல்டன் […]

Categories
தேசிய செய்திகள்

“சோபியானில் துப்பாக்கி சண்டை” 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில்  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீரின் சோபியான் பகுதியிலுள்ள சாய்னாபோரா என்ற இடத்தில்  பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் சென்று அங்கு அதிரடி சோதனையை மேற்கொண்டனர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. […]

Categories
பல்சுவை

தங்கம் விலை கிடு கிடு உயர்வு ..!!

இன்று தங்கம் பவுனுக்கு ரூபாய் 208 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை  அடைந்துள்ளனர்.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் மாலை நடைபெறும்…!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது  மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து மோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 24 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அணுசக்தி மற்றும் விண்வெளி துறையை பெற்றுக்கொண்ட மோடி ….!!

அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உள்துறை அமைச்சரானார் அமித்ஷா” இலாகாக்கள் ஒதுக்கீடு…!!

நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில்  57 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு ஒவ்வொரு இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுக” உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்… பாஜக இல.கணேசன் கருத்து…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது  நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்று   பாஜக_வின் இல.கணேசன்  தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து..!!

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதாவை  எதிர்த்த கட்சிகள் அனைத்தும் மோசமான தோல்வியை சந்தித்தன. இதையடுத்து மக்களவை தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக  டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்திற்கு  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜூன் 3_இல் திமுக M.L.A மற்றும் M.P_க்கள் கூட்டம்….!!

ஜூன் 3_ஆம் தேதி திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 22  சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட இக்கூட்டணி 37 இடங்களிளிலும் , 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 இடங்களையும் கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை…!!

இன்று தங்கம் பவுனுக்கு ரூபாய் 8 உயர்ந்தும் , வெள்ளியின் விலையில் மாற்றமின்றியும் காணப்படுகின்றது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் […]

Categories
பல்சுவை

40,000 புள்ளியை கடந்து “மீண்டும் புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

மும்பை பங்குசந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளாக அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர். பங்கு சந்தை : பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. இங்கு நிறுவனங்களின் பங்குகள் விலைக்கு விற்பனை செய்யப்படும். பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் முதல் மிகப்பெரும் பணக்காரர்கள் வரை  எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குபெறலாம் . பங்குச் சந்தை நிறுவனங்களின் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது நிறுவனத்தின்  பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது . மும்பை பங்கு சந்தை : மும்பை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 9_ஆம் தேதி இங்கை செல்கிறார் பிரதமர் மோடி…!!

பிரதமர் மோடி வருகின்ற ஜூன் 9_ஆம் தேதி இங்கை செல்ல இருப்பதாக அந்நாட்டு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்று நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 9-ம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரவையில் இடமில்லை “சென்னைக்கு திரும்பாத OPS” டெல்லியில் இருக்கிறார்…!! 

தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் டெல்லியில் இருந்து OPS மற்றும் அவரது மகன் சென்னை கிளம்பாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மோடியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி தான் முடிவு செய்வார் “மத்திய அமைச்சரவையில் அதிமுக” குறித்து தமிழிசை பதில்…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் தமிழக பாஜக_வின் மாநில […]

Categories
பல்சுவை

2_ஆவது நாளாக “குறைந்தது பெட்ரோல் டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களை பிரித்தாளும் பாஜக” மேற்கு வங்க முதல்வர் குற்றசாட்டு …!!

பாஜக ஆளும் மாநிலத்தில் மொழிகள் அடிப்படையில் மக்களை பிரித்து ஆள முயற்சிக்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இனிமேல் நான் அமைச்சர் இல்ல தலைவர்” பாஜகவின் தலைவராக ஜெயப் பிரகாஷ் நட்டா…!!

பாஜகவின் அடுத்த தலைவராக அமைச்சரவையில் இடம் கிடைக்காத  ஜெயப் பிரகாஷ் நட்டா தேர்வு செய்யபட இருப்பது உறுதியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி பிடித்தது . நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கடந்த முறை பதவி “இந்த முறை அம்போ” பாஜகவின் முக்கிய தலைகள்…!!

நேற்று நடைபெற்ற மோடியின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம் பெறவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அவருடன் சேர்த்து பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களுடன் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா_வும் பதவி ஏற்றார். […]

Categories
பல்சுவை

மோடி பதவி ஏற்பு “ஏற்றம் கண்ட பங்குகள்” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றதையடுத்து இன்று பங்குசந்தை நல்ல ஏற்ற நிலையை அடைந்துள்ளது. பங்கு சந்தை : பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. இங்கு நிறுவனங்களின் பங்குகள் விலைக்கு விற்பனை செய்யப்படும். பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் முதல் மிகப்பெரும் பணக்காரர்கள் வரை  எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குபெறலாம் . பங்குச் சந்தை நிறுவனங்களின் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது நிறுவனத்தின்  பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது . மும்பை பங்கு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 31..!!

இன்றைய தினம் : 2019 மே 31 கிரிகோரியன் ஆண்டு : 151_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 152_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 214 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார். 1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது. 1293 – சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர்.[1][2] 1669 – சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார். 1790 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது. 1859 – வெஸ்ட்மின்ஸ்டர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் முன்பு “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” மம்தாவுடன் மோதும் பாஜகவினர்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அம்மாநில முதல்வரிடம் ஆக்கட்சியினர் மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா […]

Categories
அரசியல்

பிஜேபியை “பீப் ஜனதா பார்ட்டி” என்று மாற்றிய ஹேக்கர்கள்…..!!

மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற நிலையில் ஹேக்கர்கள் பாஜகவின் டெல்லி இணையத்தை ஹேக் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.இதற்கிடையே பாஜகவின்  டெல்லி இணையதளம் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் அந்த இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி ,  மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளின் புகைப்படம்  பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை ஹேக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “கைதட்டி மகிழ்ந்த மோடியின் தயார்” வைரலாகும் புகைப்படம்..!!

மோடியின் பதவி ஏற்பு விழாவை TV கண்டு மகிழ்ந்த அவரின் தயார் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவை தனது வீட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் தயார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“2_ஆவது முறையாக மோடி” இந்தியா கண்ட 15 பிரதமர்கள் பட்டியல்…!!

இதுவரை இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் குறித்தும் அவரின் ஆண்டு குறித்தும் காண்போம்.  இந்திய நாட்டின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 23_ஆம் தேதி எண்ணப்படட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றி ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்றுள்ளது. பாஜகவின் 17-வது புதிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து…!!

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இம்ரான் தாஹிர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய மத்திய அமைச்சரவை” 24 கேபினட் , 25 இணை அமைச்சர்கள் பட்டியல்…!!

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அதே போல அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு 25 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 24  இணையமைச்சர்கள் பெறுப்பேற்றுக்கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்ச்சர் அபார பந்து வீச்சு…. தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவரில் 173/6…!!

தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 173 ரன்களுடன் விளையாடி வருகிறது  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெண்களின் கற்பம் “வயது முக்கியம்” இந்த வயதை சரியாக பயன்படுத்துங்க …!!

கர்ப்பமாக முக்கியமான விடயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்போது நான் இந்த வயதுகளில் இல்லை எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா? அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். […]

Categories
லைப் ஸ்டைல்

“பெண்களே உஷாராக இருங்கள்” அவர்கள் அதில் முரடனாக இருப்பார்கள்…!!

புதிதாக மதுப்பழக்கம் இருக்கும் ஆண்கள்தான் செக்ஸில் அதிகளவில் முரட்டுத்தனமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸ் உறவு வைப்பதில் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.அடிக்கடி பார்ட்டிகும் , பார்களுக்குச் செல்லும் இளைஞர்கள் தங்களது செக்ஸ் நடவடிக்கைகளில் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பற்களுக்கு செல்லும் ஆண்கள் மது அருந்தவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு அந்த சூழல் அவர்களை முரட்டுத்தனமாக  செயல்பட வைக்கிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மைக்கேல் கிளெவெலண்ட் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மெயில் மற்றும் ஆன்லைன் மூலம் ஓர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் அதிரடி….. 4 வீரர்கள் அரைசதம்…. தென் ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு…!!

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் […]

Categories
அரசியல்

பதவியேற்றார் மோடி ..!! 17வது பிரதமருடன் அமைச்சர்கள் பதவியேற்பு ..!!

தொடர்ந்து 2 வது முறையாக குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்துவைக்க பதவியேற்றார் நரேந்திர மோடி . டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நரேந்திர மோடியை பிரதமராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இந்தியாவின் 17-வது பிரதமராகவும், தொடர்ந்து இரண்டாவது  முறையாகவும் மோடி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், இந்திய தேசிய கட்சி தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எட்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். […]

Categories

Tech |