Categories
பல்சுவை

தங்கம் விலை உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை…!!

தங்கம் பவுனுக்கு ரூ 8 அதிகரித்ததால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (03/06/2019) […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

 “அழகிய தீர்வு” இந்தி கட்டாயமல்ல – வரவேற்ற ஏ.ஆர். ரஹ்மான்..!!

இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட புதிய வரைவு கொள்கைக்கு “அழகிய தீர்வு” என்று ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் புதியவரைவு கல்வி கொள்கையின் படி மும்மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும். அதேபோல இந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஏதேனும் மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மிரிதி இரானி, ரவி சங்கர் பிரசாத் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பு..!!

மத்திய அமைச்சர்களாக ஸ்மிரிதி இரானி, ரவி சங்கர் பிரசாத், வி. கே சிங் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த துறைகளை சேர்ந்தவர்கள் பதவியேற்று வருகின்றனர். காங்கிரஸ் கோட்டை என  அனைவராலும் கூறப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு  பாஜகவின் ஸ்மிரிதி […]

Categories
தேசிய செய்திகள்

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் “

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிப்பதற்கான  சாதுக்களின் விவாத  கூட்டம் இன்று நடைபெறுகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருக்கக்க்கூடிய  சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது . இதனிடையே  மனுதாரர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் சார்பில்  அறிவுறுத்தபட்டதையடுத்து , ஓய்வு பெற்ற நீதிபதியான  கலிபுல்லாஹ், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான  ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞரான  ஸ்ரீராம்  ஆகியோர் அடங்கிய  சமரச குழு ஒன்று அமைக்கப்பட்டது.  […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளில் சென்று சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..!!

ஹர்ஷ்வர்தன் டெல்லியில் உள்ள அமைச்சகத்திற்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து கடந்த 30-ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 வழிச்சாலை திட்டம்” மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை….!!

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த பாரத்மாலா என்ற திட்டத்தின் கீழ் சென்னை முதல் சேலம் வரை 276 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவிவு செய்து 8 வழி சாலை அமைக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது.  இந்த திட்டத்தை செயல்படுத்த சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

“3-வது மொழியை தேர்வு செய்து படிக்கலாம்” இந்தி மொழி கட்டாயமில்லை..!!

கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்தி மொழி  பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு புதிய கல்வி வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டினர். […]

Categories
அரசியல்

“ராஜதந்திரம் அறிந்தவர் கலைஞர் “மம்தா புகழாரம் ..!!

ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம்  சூட்டியுள்ளார் . ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு  அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

“பாதுகாப்புபடையினர் அதிரடி” 5 மாதத்தில் 101 பயங்கரவாதிகள் காலி…!!

காஷ்மீரில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 101 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் உள்ள உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் தொடர்ந்து பெருகி கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 50 இளைஞர்கள் வரை அங்கு மறைமுகமாக செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் பாதுகாப்பு படையினரின் அதிரடி 101  பயங்கரவாதிகள் உள்பட 101 பயங்கரவாதிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் பகுதியில் 25 பேரும், […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த மொழியாக இருந்தாலும் விருப்ப பாடமாக இருக்க வேண்டும்” சித்தராமையா ட்விட்..!!

தாய்மொழி அல்லாத எந்த மொழியாக இருந்தாலும் அது விருப்ப பாடமாக இருக்கவேண்டும்  என்று கர்நாடக முன்னாள் முதல்வர்  சித்தராமையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் கஸ்தூரி ரங்கன் குழு தேசிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது. இதையடுத்து மாநில கல்விகளில் தாய்மொழி மற்றும் ஆங்கில மொழியை பயிற்று விக்கும் வகையிலுள்ள இரு மொழி கொள்கைக்குப் பதிலாக ஹிந்தியை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு….!!

50 நாட்களாக இருந்த கோடை விடுமுறைக்கு பின் தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல […]

Categories
பல்சுவை

“5_ஆவது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தொடர்ந்து 5_ஆவது நாளாக  பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 03..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 03 கிரிகோரியன் ஆண்டு : 154_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 155_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 242 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1616 – லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1715 – எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. 1791 – ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு..!!

கன்னியாகுமரியை சேர்ந்த 20  மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கன்னியாகுமரி சின்னத்துறை என்ற கிராமத்தை  சேர்ந்த 20  மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளனர். மீனவர்கள் லட்சத்தீவு அருகேயுள்ள  தித்திரா தீவுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 படகுகள் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு மற்றும் குடிநீரின்றி மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். மீனவர்கள் 20 பேர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷகிப், ரஹிம் அரைசதம் விளாசல்….தென் ஆப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு..!!

வங்காள தேசம் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா  –  வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இஃக்பாலும், சவுமியா சர்க்காரும் களமிறங்கினர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார் அமித்ஷா…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா காவலர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு  இலாக்கா  ஒதுக்கப்பட்டது. இதன்படி அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அமித்ஷா, நேற்று  முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் பயணமாக சியாச்சின் செல்லும் ராஜ்நாத் சிங்..!!

ராஜ்நாத் சிங் முதல் பயணமாக நாளை சியாச்சின் பனிமலை பகுதிக்கு செல்கிறார்   மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு  இலாக்கா ஒதுக்கப்பட்டது. இதில் ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து  ராஜ்நாத்சிங் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து பாதுகாப்பு துணை இணை அமைச்சராக  ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் இருந்து விலகல்” இது தான் காரணமா..?

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு வருபவர். இவர் அவ்வப்போது பாஜக பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படத்தக்கூடியவர். சமீபத்தில் கூட பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.  நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தி காங்கிரஸ் […]

Categories
அரசியல் புதுச்சேரி

புதுவை சபாநாயகராக சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு….!!

புதுவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுவை மக்களவை தொகுதியில் புதுவையில் சட்டப்பேரவை  சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது சபாநாயகர்  பதவியை போட்டியிடும் போதே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற இருக்கு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு புதிய சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று  அறிவிக்கப்பட்டது. உரிய கால அவகாசம் இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி “பழைய பஸ் பாஸ்ஸில் பயணிக்கலாம்” போக்குவரத்து துறை அறிவிப்பு…!!

நாளை பள்ளி திறக்க்கவுள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி செல்லலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல இந்தமுறையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை , திட்டமிட்டபடி ஜூன் 3 […]

Categories
தேசிய செய்திகள்

“மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை” ராணுவ வீரர் ஒருவர் பலி…!!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், அங்கிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான  துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில்  ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்  4 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்துள்ள […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

” தேர்தல் தான் முடிந்தது, தேடல் முடியவில்லை…” சீமான் பரபரப்பு பேச்சு..!!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும்  சீமான் பரபரப்பாக பேசியுள்ளார். திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார் அவர் பேசியதாவது, தற்போது நடைபெற்று முடிந்தது தேர்தல் மட்டும்தான், நாம் தமிழர் கட்சிக்கான தேடுதல் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறியுள்ளார் . நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் வெறும் தேர்தளுக்கானவர்கள் அல்ல தேர்தலில் தோற்றாலும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை நீதி மன்றங்கள் திறப்பு ..!!

கோடை விடுமுறை முடிந்து நாளை புள்ளிகளுடன் சேர்த்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன . கோடை காலத்தை முன்னிட்டு மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவது போல் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் கோடை காலம் முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன. கோடைகாலங்களில் அவசர வழக்குகளை விசாரிக்க அவ்வப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிறப்பு அமர்வு என்பது அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு அமர்வில் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 02..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 02 கிரிகோரியன் ஆண்டு : 153_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 154_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 212 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 455 – உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது. 1098 – முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர். 1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர். 1805 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் கைப்பற்றினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குறைந்த ரன்னில் சுருண்ட இலங்கை…. விக்கெட் இழக்காமல் வென்ற நியூசிலாந்து..!!

நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது  12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து –  இலங்கை அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ்  மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும், கருணரத்னேவும் களமிறங்கினர். ஜேம்ஸ் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த […]

Categories
அரசியல் கல்வி

“பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது “ஸ்டாலின் எச்சரிக்கை ..!!

மும்மொழி கல்வித் திட்டத்தை பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக்கூடாது எச்சரிக்கை  மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர்  கூறி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையானது இருமொழிக் கொள்கையை  தவிர்த்து மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கட்டாயமான முறையில் முன்மொழிகிறது. இந்நிலையில் திராவிட […]

Categories
அரசியல் கல்வி

“நேருவின் வாக்குறுதியை காப்பாற்றுங்க ” வைரமுத்து வேண்டுகோள் ..!!

நேருவின் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிற்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர்  கூறி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஹிந்தி பேசாத மக்கள் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் வரை மொழித் திணிப்பை செய்யமாட்டோம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தாயை கொன்ற மகன் “செல்போனால் நிகழ்ந்த விபரீதம் ..!!

இரவில் அதிகமாக செல்போன் பேசிய தாயை மகன் சரமாரியாக தாக்கி கொன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு பரத் என்ற 20 வயது மகன் ஒருவர் உள்ளார். வெண்ணிலா இரவு நேரங்களில் அதிகமாக மர்ம நபர் ஒருவரிடம் செல்போன் பேசி வந்துள்ளார். இதனை சற்றும் விரும்பாத மகன் பரத் தாய் வெண்ணிலாவை கண்டித்துள்ளார். ஆனால் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இரவு நேரங்களில் அதிகமாக செல்போன் […]

Categories
அரசியல்

“பிரச்சனைன்னு வந்தா ஒன்னு கூடிருவோம் “அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி ..!!

பிரச்சனை என்றால் அதிமுகவினர் ஒன்று கூடி விடுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் . தேர்தல் முடிவுகள் வெளியானது முதல்   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் அதிமுக தரப்பினர் பலர் இதனை பொய் எனக் கூறி நிராகரித்து விட்டனர். தற்பொழுது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது குறித்து பேசியதாவது, அதிமுகவில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் பிரச்சினை என்று வந்தால் […]

Categories
வானிலை

“அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் “ரெட் அலெர்ட் எச்சரிக்கை..!!

வெயிலின் தாக்கம் அதிகமாக அடுத்த 5  இருப்பதால் டெல்லிக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் கொடுத்துள்ளது . வெயில் காலம் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது தான் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அனல்காற்று பயங்கரமாக வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து தற்போது டெல்லியில் ஜூன் 5 வரை வெயிலின் […]

Categories
அரசியல் கல்வி

“மீண்டும் மொழிப் போர் ” அறிக்கை வெளியீடு செய்த வைகோ ..!!

புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தினாள் மீண்டும் மொழிப்போர் நடக்கும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் . அரசுப் பள்ளிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தமிழ்நாடு இந்திய மாணவர் சங்கத்தினர் இதற்கு  எதிராக மாநிலம் முழுவதும் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டு அது தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு மற்றொரு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியாவிற்கு வரி விதித்தது அமெரிக்கா “அமெரிக்கா அதிபருக்கு எம்.பிக்கள் கடிதம் ..!!

வளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை  அமெரிக்கா உறுதி செய்துள்ளது . 2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் […]

Categories
பல்சுவை

தங்கம் கிடுகிடு உயர்வு “ஒரே நாளில் பவுனுக்கு 200 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை…!!

இன்று தங்கம் பவுனுக்கு ரூபாய் 200 அதிகரித்ததால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
அரசியல்

“ஏமாந்து போன ஸ்டாலின் “அமைச்சர் காமராஜ் கிண்டல் ..!!

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த ஸ்டாலின் ஏமாந்து போனார் என்று அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார் . கடந்த மே 23ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாரதிய ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். ஆனால் பெரும்பகுதியில் திமுக வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் எட்டுவழி சாலை “சேலம் விவசாயிகள் போராட்டம்..!!

எட்டு வழி சாலைக்கு எதிராக நாழிக்கல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . சென்னை  to சேலம் எட்டு வழி சாலை மக்களுக்கு எதிரான திட்டம் என்றும் அதை செயல்படுத்துவதால் பல்வேறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள்  பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்தனர். இந்நிலையில் தமிழக அரசானது மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜரானார் கமல் ..!!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கமல் பேசியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பாக பிரச்சாரம் ஒன்றில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான் என்று கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ,இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு ஹிந்து ஆகையால் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இருந்துதான் என்று அவர் பேசினார். இதனையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ராஜ்நாத்சிங்..!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்   மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் , 09 பேர்  தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாகவும், 24 பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இதையடுத்து நேற்று அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாக்கா ஒதுக்கப்பட்டு, அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக பொறுப்பேற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“முடி மற்றும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு “பள்ளி கல்வித்துறை அதிரடி..!!

நாளை நான் முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை விதித்து உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்க உள்ள நிலையில், பள்ளியின் முதல் நாளே பஸ் பாஸ், புத்தகம் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகள் இறுக்கமான மேலாடைகள் மற்றும்  லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து பள்ளிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“டிப்-டாப்பா ட்ரெஸ் பண்ணுங்க “கிரிஜா வைத்தியநாதன் அறிவுரை ..!!

தலைமைச் செயலகத்தில் வேலைபுரியும்  அரசு ஊழியர்கள் உடை உடுத்துவதில்  புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணையிட்டுளார். தலைமை செயலகத்தின்   நல்மதிப்பை பராமரிக்கும் வகையில் அங்கே பணிபுரியும்    அரசு ஊழியர்கள், ஒழுக்கமான உடைகளை அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார்  சுடிதார் போன்ற உடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்  என்றும்  சேலையைத் தவிர மற்ற ஆடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிய வேண்டும் என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா…!!

அமித்ஷா உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன்  கேபினட் அமைச்சர்களாக  24 பேரும்,   தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாக 09 பேரும்,  ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் பதவி ஏற்றனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கும்,  அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு..!!

டெல்லியில் நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மக்களவை தேர்தலில் 52 தொகுதியில் மட்டும் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்வந்தார். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி இதனை நிராகரித்து, ராகுலுக்கு கட்சியின் கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்க அதிகாரம் அளித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வெறும் 30 % பெற்ற பாஜக” மக்களவையில் எப்படி வென்றது….காங்கிரஸ் தலைவர் கேள்வி..!!

உள்ளாட்சியில் 30 சதவீதம் வென்ற பாஜக மக்களவையில் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியுமென்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வியெழுப்பியுள்ளார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான 353 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பல்வேறு மாநிலங்களில் பாஜக முழுமையான வெற்றியை பெற்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்ற சூழலில் பாஜகவின் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம்” – அசாதுதின் ஓவைசி..!!

மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம் என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதியில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ச்சியாக  4-வது முறை வெற்றி பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ மோடியால்  கோவிலுக்குள்  சென்று வணங்க  முடியும் என்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடி  குகைக்குள் அமர்ந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் “மக்களவை முடிவை புரட்டி போட்ட உள்ளாட்சி” காங்கிரஸ் 509 , பிஜேபி 366 …..!!

கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான மதசார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.பாஜக 25 இடங்களையும் அதன் ஆதரவு சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் வேலையின்மை …வெளியாகும் அதிர்ச்சி தகவல் ..!!

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1% வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது 6.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், கடந்த 17 ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிய சரிவை  இந்தியா சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜிடிபி அளவானது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை..!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார். மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 24 கேபினட் மந்திரிகள் மற்றும் 33 ராஜாங்க மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட 54 அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் இன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவையில் “21 பேர் மீது கிரிமினல் வழக்கு” தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தகவல்..!!

மத்திய அமைச்சரவையில் 51 பேர் கோடிஸ்வரர்களாகவும் , 21 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாகவும் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையிலான புதிய மத்திய  அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்களாகவும் , 24 இணையமைச்சர்களாகவும் மற்றும் 9 பேர் தனிப்பொறுப்புடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கான  இலாகாகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்திய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பொறுப்பேற்ற 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது. இதில் 22 அமைச்சர்கள்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்பு ..!!”13 கிராம மக்கள் தொடர் போராட்டம் “

தஞ்சாவூரை சுற்றியுள்ள 13 கிராமத்து மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர் . மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆனது  தஞ்சாவூரை சுற்றியுள்ள     கிராமங்களில்    செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளை சுற்றியுள்ள 13 கிராம மக்கள்  இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டமானது உறுதியாக செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான உபகரணங்களான குழாய்கள், இயந்திரங்கள் போன்றவை கிராமங்களுக்கு தினந்தோறும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்வு

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களவையின் காங்கிரஸ் தலைவர்” தொடங்கியது M.P_க்கள் கூட்டம்…!!

மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில்காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சியின் MP_க்கள் தேர்வு செய்கின்றனர். இதில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில், வரும் பாராளுமன்ற  கூட்டத் […]

Categories

Tech |