தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்கத்தின் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் கிரண் பேடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் […]
