Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவிழ்கிறதா கர்நாடக அரசு ? 11 MLA_க்கள் சபாநாயகருடன் சந்திப்பு …!!

கர்நாடகாவில் 11 MLA_க்கள் சபாநாயகரை சந்திக்க இருப்பது அரசியலில் தீடிர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் கட்சியில் 80 இடங்கள் , மதசார்பற்ற […]

Categories
கல்வி மாநில செய்திகள்

2,00,00,000 ரூபாய் செலவில் 70,00,000மாணவர்களுக்கு TAB…கல்வித்துறை அதிரடி..!!

 2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு  TAB வழங்க நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்  ஆர்க்காடு  வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர்   செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும்  மரணம்  அல்ல , முயற்சி நின்றாலும்   மரணம் தான்   என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன் பின்  செய்தியாகளை சந்தித்து  பேசிய அமைச்சர்  செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு குறித்து விவாதம்…அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் முதலமைச்சர் அழைப்பு..!!

பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய  பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து  ஜூலை 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய  பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  போன்றவற்றில்  10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியநிலையில், 10%  இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து  விவாதிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது  குறித்து விவாதிக்க  வருகின்ற ஜூலை 8 ஆம் தேதியன்று  அனைத்துக் கட்சி கூட்டம்  தலைமை செயலக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“4 கேமராவுடன் Infinix Hot 7 ஸ்மார்ட் போன்” இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஹாட் 7 சீரிஸ் (Hot 7 Series) ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ (Infinix Hot 7 Pro) ஸ்மார்ட்போன்களை  இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலை விட உயர்ந்த வெர்ஷனை அறிமுகம் செய்ய போகிறது.   இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 (Infinix Hot 7) என்று அழைக்கப்பட உள்ளது. இந்த புதிய  ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனியின் கொளஞ்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமுத்திரக்கனியின் கொளஞ்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.     இயக்குனர் மற்றும்  நடிகராக  இருக்கும் சமுத்திரக்கனி பல படங்களில் நடித்து உள்ளார். இவர் இயக்கும் அனைத்து படங்களும் கருத்து  உள்ளதாக   இருக்கும். தற்போது இவர் நடித்துள்ள கென்னடி கிளப், ஆர்.ஆர்.ஆர், சில்லுக்கருப்பட்டி, அடுத்த சாட்டை, வெள்ளை யானை போன்ற பல திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இந்நிலையில்  தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிகராக கொளஞ்சி திரைப்படத்தில்  நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு   பல மாதங்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊதுகுழலால் கணவனை கொன்ற மனைவி…திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

குடிபோதையில் தகாரறு  செய்த  கணவனை ஊதுகுழலால் தாக்கி  கொன்ற மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த    முருகேசன்      தனது   மனைவி    மற்றும்    4 குழந்தைகளுடன் கல்பட்டிசத்திரத்தையடுத்த  வத்தமணியகாரன்பட்டியில்  வசித்து வருகிறார். கல் உடைக்கும் தொழிலை செய்துவரும் முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு .இதனால் கணவன் மனைவியிடையே  அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வர இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் போதை தலைக்கேறி தனது  […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு ….!!

மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி வெளியாகிய நிலையில் தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்களை ஜூன் 7_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22_ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் வினோதம்…நண்டுகளை கைது செய்யக்கோரி போராட்டம்..!!

மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க  கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக  பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள   சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள்  புகுந்த  தண்ணீர்  12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   இச்சம்பவம் குறித்து  மகாராஷ்டிரா மாநிலத்தின்  நீர்வளத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…!!

சென்னையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நீட் தேர்வு முடிவானது   ஜூன் 5 ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் பயில விரும்புவோர்  விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்  என தமிழக அரசு அறிவித்தன்படி, கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை  பதிவு செய்யுமாறு  அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.   மாணவர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் சேர்த்து,  தங்களது  சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப ஜூன்  22 ஆம் […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் கவலை ….!!

பட்ஜெட் அறிவிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 06..!!

. இன்றைய தினம் : 2019 ஜூலை 06 கிரிகோரியன் ஆண்டு : 187_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 188_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 178 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   1044 – புனித ரோமப் பேரரசன் மூன்றாம் என்றி அங்கேரி மீது படையெடுத்தான். 1189 – முதலாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1348 – கறுப்புச் சாவுக்குக் காரணமான யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஆணை ஓலையையை திருத்தந்தை ஆறாம் கிளெமெண்டு வெளியிட்டார். 1411 – தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு நாஞ்சிங் திரும்பிய மிங் சீனத் தளபதி செங் ஹே, தனது பயணத்தின் போது இலங்கையில் மிங்-கோட்டைப் போரில் கைது செய்த இலங்கை மன்னன் அழகக்கோனை யொங்கில் பேரரசரிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி துளியும் வாய்ப்பில்லை…. பாகிஸ்தான் 315 ரன்கள் குவிப்பு…!!

பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனென்றால் பாகிஸ்தான் 400 ரன்கள் குவிக்து,  வங்கதேச அணியை 84 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி அதிசயம் நிகழ்ந்தால் தான் வாய்ப்பு. இந்நிலையில் தொடக்க வீரர்களாக பக்கர் சமானும், இமாம் உல்-  ஹக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“தலையில் இடி விழுந்தது போல் இருந்தது” வைகோ ஆவேசம் …!!

தீர்ப்பை பார்த்ததும் எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது என்று என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“MP கனவு கம்பி எண்ண வச்சுருச்சே” வைகோ குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்

எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என்று வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். கடந்த 2009 தி.மு.க ஆட்சி காலத்தில்  நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மதிமுக வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்  பேசியதாக தேச துரோக வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்  விசாரித்து வந்த நிலையில் வைகோ […]

Categories
உலக செய்திகள்

“பஹமாஸில் கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்” கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பலி…!!

பஹமாஸிலிருந்து புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அமெரிக்க கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  உலகில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் கீழே விழுந்து  விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அது தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. அந்த வகையில் பஹமாஸிலிருந்து நேற்று 7 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லவுடர்டேல் பகுதியை (Fort Lauderdale) நோக்கி சென்றது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரில் அமெரிக்காவில் பல்வேறு நிலக்கரி சுரங்கங்களின் உரிமையாளரும், மிகப்பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

“ஜீரோ பட்ஜெட் விவசாயம்” விவசாயிகளுக்கு நிர்மலாசீதாராமன் வலியுறுத்தல்..!!

விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பயன்படுத்த வேண்டுமென பட்ஜெட் உரையில்  நிர்மலாசீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,வேளாண் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துவதற்காக  மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வாழ்க்கையை  எளிமையாக்குவது  விவசாயிகளுக்கும், தொழில் முறையை  எளிமையாக்குவது   வேளாண்மை சார்ந்த  தொழிலுக்கும் பொருந்தும் என்று  அவர் தெரிவித்தார். மேலும்  ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்று    வலியுறுத்தினார். இது புதிய முறையல்ல,ஏற்கனவே சில […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் விதிகளை மீறுகிறீர்களா??…அமைச்சரிடம் ஸ்டாலின் கேள்வி..!

வேலூரில் தேர்தல் நடத்தை   விதிமுறைகள்      அமலுக்கு     வந்தநிலையில்  புதிய  அறிவிப்புகளை வெளியிடுவது விதிமீறல் ஆகாத? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று புதிய அறிவிப்புகளை  மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட போது , வேலூர் மாவட்டத்திற்கும்  சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில்  இறுதி நேரத்தில் பேசிய திமுக  தலைவர் ஸ்டாலின், வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் விதிமீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கேள்விக்கு  […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் அறிவிப்பு “பெட்ரோல் , டீசல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி …!!

பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று மக்களவையில் 2019_2020_க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார். அதில் சாலை வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த்தப்படுமென்று அவர் தெரிவித்தார். இதனால் இன்று இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்கின்றது. நெடுஞ்சாலைத்துறை காண கூடுதல் வரி மற்றும் கூடுதல் கலால் வரி இரண்டுமே ஒரு ஒரு லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை…பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீரில்   பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்  பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  சோபியான் மாவட்டத்தில் உள்ள  இமாம் சாஹிப் என்ற பகுதியில் இருக்கும்  பட்போர்-நர்வானி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து  சென்ற பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என்று  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையறிந்த  பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க   பதிலடி கொடுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை….ஒரு வாரத்தில் இயக்க அமைச்சர் உறுதி..!!

கள்ளக்குறிச்சியில்   சர்க்கரை  ஆலையை  ஒரு வாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் சம்பத் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள கூட்டுறவு  சர்க்கரை ஆலைகள் இயங்காமல் மூடிக் கிடப்பததால் , கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றனர். எனவே ,  ஒரு சர்க்கரை ஆலையையாவது இயங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து  அமைச்சர் சம்பத் பேசுகையில் , கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் “தேசிய விவசாய சந்தை”…நிர்மலாசீதாராமன்..!!

நாடு முழுவதும் உள்ள  விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட தேசிய விவசாய சந்தை அமைக்கப்படுவதாக   நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2019-20க்கான பட்ஜெட் மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து பேசிய   நிர்மலா சீதாராமன் , மாநிலங்கள் முழுவதும்  உள்ள  விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருளை நேரடியாக  விற்று பயன் பெற   தேசிய விவசாய சந்தை அமைக்கப்படும் என்றும், நாடு முழுவதும் இருக்கும்  விவசாயிகள் 1ரூபாய் கூட முதலீடு செய்யமால்  விவசாயம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் , […]

Categories
கதைகள் பல்சுவை

நம் ஒவ்வொருவரின் விருப்பம் ???..

        விருப்பம்  :                               விருப்பம்  என்பது  தனக்கு  பிடித்த  ஓன்றை   அல்லது  உகந்ததான  ஓன்றை  செய்யவோ  அடையவோ  வேண்டும்  என்ற  உணர்வு,ஆசை ,நாட்டம்  இவையே   விருப்பமாக  கூறுகிறோம் .              இருந்தும்  ஒரு  விருப்பம்  நிறைவு  அடைந்த  பின்  இன்னொரு விருப்பம்  தோன்றுகிறது. நம்  ஒவ்வொருவரின்   விருப்பம்  […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்” பிரதமர் மோடி..!!

2019-20க்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இதில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின் பேசிய பிரதமர் மோடி,  2019-20க்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏழ்மையை ஒழிக்கும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய இந்தியாவை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் மகிழ்ச்சி “ரூ 1,00,000 கடன் பெறலாம்” பட்ஜெட்டில் அறிவிப்பு

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அதிகபட்சமாக  தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின்  2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இந்த முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.     அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில் , பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

பாலின் விலை உயர்வு…பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

சட்ட பேரவை கூட்டம் முடிவதற்கு முன் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 28ல் சட்டப்பேரவை தொடங்கி மானியாக்   கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து  இன்று நடைபெற்ற நீர்வளம்,பால்வளம்,  கால்நடை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

12.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த Bajaj Auto நிறுவனம்..!!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதை விட சற்று குறைவாக  4.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் 2 சதவீதம் குறைந்து 2.29 லட்சமாக உள்ளது. இந்த ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்தாக மாற்ற திட்டம்….. நிர்மலா சீதாராமன்

புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்ததாக மாற்ற திட்டம் உள்ளதாக  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

“இனி வீடு வாங்க கவலையில்லை” நிர்மலாசீதாராமன் அதிரடி அறிவிப்பு…மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!!

குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,குறைந்த விலை வீடுகள் ,கடனில் மின்சார வாகனம் வாங்கினால் வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.இதன்படி 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூபாய் 7 லட்சம் வரை மிச்சமாகும். பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி […]

Categories
தேசிய செய்திகள்

“சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதியம்” நிர்மலா சீதாராமன் தகவல்…!!

பிரதான் மந்திரி கரம் யோகி மான் தன் யோஜனா என்ற பெயரில்  சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதிய திட்டம் வழக்கப்படுமென்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். இதில் 3 கோடி சில்லரை […]

Categories
தேசிய செய்திகள்

20 ரூபாய் நாணயம் அறிமுகம்….நிர்மலாசீதாராமன்..!!

1,2,5,10,20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்படும் என்றார் .குடிநீர் ,சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 100 கோடி ஒதுக்கப்படும் . வரி வருவாய் 6.3 லட்சம் கோடியில் இருந்து 11.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துவோரின் பங்கு முக்கியமானது, […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் சம அளவில் மின்சாரம்” நிர்மலா சீதாராமன் உறுதி ….!!

நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். அதில் , அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து விமானத் துறை, […]

Categories
தேசிய செய்திகள்

“வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார்கார்டு “நிர்மலாசீதாராமன்..!!

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுடன் ஆதார் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,கழிவுநீர் சுத்திகரிப்புகாக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.நாட்டில் உள்ள 74 சுற்றுலாத்தலங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்படும்.சுய உதவிக்குழு பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.வங்கிகளில் வாராக்கடன் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை  குறைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குடிநீர் பிரச்சனைக்கு’ஹர் கர் ஜல்’ திட்டம்…நிர்மலாசீதாராமன் தகவல்…!!

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சனையை தீர்க்க “ஹர் கர் ஜல்” திட்டம்  மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும் என்றார் .குடிநீர்  பிரச்னையை தீர்ப்பதே மத்திய அரசின் பிராதன நோக்கம்,   2020க்குள் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க “ஹர் கர் ஜல்” திட்டம் மூலம்  நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்குமா…? வைகோ அதிரடி பதில் …!!

நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் சூழலில் இந்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு “ரூ 102 விலையில் சலுகை” ஜியோ அதிரடி..!!

அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கு என ஜியோ நிறுவனம் பிரத்யேகமாக புதிய சலுகையை அறிவித்துள்ளது.  ஜம்மு- காஷ்மீரில் ரிலையன்ஸ் ஜியோ (GIO) நிறுவனம் ரூ. 102 விலையில் அதிரடியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 S.M..S பலன்கள் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 98 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 G.P DATA […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி ” நிர்மலா சீதாராமன் பேச்சு …!!

புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது என்று மக்களவையில்  நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார். அபோது பேசியவர் , உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும். சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு என்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” வைகோ பேட்டி …!!

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் தண்டனையாக ஓராண்டு சிறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு” சிறப்பு நீதிமன்றம் உத்தரவு …!!

தேச துரோக வழக்கில் வைகோ_வுக்கு ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்ததுசிறப்பு நீதிமன்றம். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது  மதிமுக வழக்கறிஞர்கள்  மல்லை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

2019-20க்கான பட்ஜெட்டை நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார்..!!

2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலானது தொடங்கியுள்ளது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தொகுத்து வழங்கி வருகிறார்.  நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் மக்களவையில் 2019-20க்கான முழு பட்ஜெட்டை முதல் பெண் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்  தாக்கல் செய்து வருகிறார்.அதில் புதிய இந்தியாவை உருவாக்க முயற்சி எடுத்திருப்பதாகவும் ,பொருளாதாரத்தில் இந்தியாவை 25% உயர்த்துவதற்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்” திருமணம் வேண்டாம்னு சொன்ன ஓவியா..!!

“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்றும், அதனால் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும் ஓவியா தெரிவித்துள்ளார்.  நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்களே இருக்கின்றனர்.  ஓவியா நடித்த களவாணி படம் வெற்றி படமாக அமைந்தது. இதனால் களவாணி படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2-விலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சற்குணம் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறை செல்லும் வைகோ” குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு ….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல் துறையினர் 2009_ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு MP மற்றும் MLA_க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் அவர் மீது குற்றம் நிரூபணமாக்கப்பட்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நீதிபதி சாந்தி , உங்களுக்கான தண்டனையை அறிவிக்கப்பிக்கின்றேன் இன்று அறிவிக்கவா அல்லது திங்கள்கிழமை அறிவிக்கவா என்று […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை அணை உடைப்பால் பலி எண்ணிக்கை 18_ஆக அதிகரிப்பு …!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை  உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றியுடன் விடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்…. தோல்வியுடன் வெளியேறிய ஆப்கான்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் விடைபெற்றது  உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் அரை இறுதியில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் […]

Categories
உலக செய்திகள்

துனிசியா நாட்டில் சோகம் …. படகு மூழ்கி 80க்கும் மேற்பட்டோர் பலி …!!

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளாகி 80க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டில் இருந்து ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள்  சிலர்  ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்தனர். சுமார் 80_க்கும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் சென்ற படகு எடை தாங்காமல் நடுவழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு நீரில் மூழ்குவதை பார்த்த மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் 4 பயணிகளை மட்டுமே கரைக்கு மீட்டு […]

Categories
பல்சுவை

“பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விலை நிலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 05..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 05 கிரிகோரியன் ஆண்டு : 186_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 187_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 179 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 328 – உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர். 1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார். 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார். 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற […]

Categories
சினிமா

“பெண்களாக மாறிய ஆண்கள்” காமெடி தர்பாராக மாறிய பிக்பாஸ் வீடு..!!

தொடர்ந்து சண்டை சச்சரவு என சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீடு இன்று கலகலவென சிரித்த வண்ணம் இருந்தது. தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக  அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி […]

Categories
சினிமா

“நட்பை விட காதல் தான் முக்கியம்”காதலை பகிரங்கமாக தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்..!!

கவின்,சாக்க்ஷி நண்பர்களாக நெருங்கி பழகி வந்த நிலையில் கவின் மீது காதல் வயப்பட்டதாக சாக்க்ஷி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக  அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக … இந்தியளவில் ட்ரெண்டிங்… அதிர்ச்சியில் கழகத்தினர்..!!

திமுகவின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைதளவாசிகள்  கலாய்த்து வருவதால் திமுகவினர் வேதனை அடைந்துள்ளனர். ரெட்ஜெயண்ட் மூவி என்ற பெயரின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்து , நடிகராக தோன்றி, முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்தவர்  திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சினிமா துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர் திமுகவின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் , போராட்டம் மற்றும் […]

Categories
அரசியல்

கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!!

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார். திரைப்பட நடிகராகவும் முரசொலியின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். இதனை தமிழகம் முழுவதும் தற்போது திமுக தொண்டர்கள் உதயநிதி ரசிகர்கள் உள்ளிட்டோர் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் இளைஞரணி  செயலாளராக பொறுப்பேற்ற பின் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து  பெற்றார். இதனை  தொடர்ந்து, சென்னை […]

Categories

Tech |