Categories
சினிமா தமிழ் சினிமா

நீ ஞானி , நான் முட்டாள்…மீராவின் எகத்தால பேச்சுக்கு தர்ஷன் பதிலடி..!!

சண்டைக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியானது இன்று மீரா-தர்ஷன் சண்டையுடன் தொடங்கியது. தமிழகத்தின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்,சீசன் 1,2வின் வெற்றியை தொடர்ந்து  3வது சீசனையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். காதல்,காமெடி என நிறைந்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் சண்டைகளுக்கு பஞ்சமே இருக்காது. தினந்தோறும் விறுவிறுப்பை கூட்டி வரும் இந்நிகழ்ச்சியில் 19 ஆவது நாளான இன்று, மீரா தர்ஷனுடன் பிக் பாஸ் வீட்டின்  வளாகத்தின் முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருவரும் அவர்களது வாழ்நாள் நண்பர்களைப் […]

Categories
பல்சுவை

சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி……

சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி  என்பது குறித்து பார்ப்போம். செய்ய  தேவையான பொருட்க்கள்: எண்ணெய் பிரியாணி இலை கள் பாசி புதினா 2    பெரிய  வெங்காயம் 1 தக்காளி மஞ்சத்தூள் உப்பு மிளகாய்தூள் கரம் மசாளா தூள் ஏலக்காய் பூண்டு சோம்பு பட்டை கிராம்பு இஞ்சி ஊரவைத்த சென்னா தண்ணீர் அரிசி         செய்யும் முறை: ஒரு குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பிரியாணி இலை கல்பாசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ரஷித் கான் தான் கேப்டன்… ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஆப்கான் கிரிக்கெட் வாரியம்  ரஷித் கானை  3 வகையான கிரிக்கெட்டுகளுக்கும் கேப்டனாக நியமித்துள்ளது.  உலக கோப்பையில் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 9 ஆட்டங்களில் விளையாடியது. இதில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சில ஆட்டங்களில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் இறுதியில் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில், ஒருநாள், டெஸ்ட் மற்றும்  டி 20 ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை…!!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ள  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சுற்றிலும்  நோய்களை  பரப்பும் வகையில் கொட்டபட்டுள்ள   மருத்துவக் கழிவுகளை முழுமையாக நீக்க  வேண்டும் என்ற  கோரிக்கை எழுப்பட்டுள்ளது .பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும்  மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று கொள்கின்றனர் .   ஆனால் இங்கு தினமும் வரும்  மருத்துவக் கழிவுகள் முழுமையாக  நீக்கப்படாமல் அங்குள்ள  பிணவறை அருகிலும், மருத்துவமனை வளாகத்தினை  சுற்றியுள்ள பல்வேறு  இடத்திலும்  கொட்டப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞர் தாக்குதல்” இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்..!!

நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை 4 பேர் தாக்கியதையடுத்து, இந்திய அளவில் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது   வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். இவர் நேற்று இரவு   மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு,  அதனை  புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓன்று  ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக […]

Categories
மாநில செய்திகள்

சிறந்த நெசவாளர்களுக்கு பரிசுத் தொகை… அமைச்சர் O.S.மணியன்…!!

சிறந்த பட்டுகளை  வடிவமைக்கும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் O.S.மணியன் தெரிவித்துள்ளார். சட்ட பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற  சட்ட பேரவைக் கூட்டத்த தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய அமைச்சர் O.S.மணியன்  புதிதாக சில  அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில்,மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி இயந்திரங்கள்  5,56,000 ரூபாய் மதிப்பில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ..!!! பொதுமக்கள் தர்ம அடி …!!!

பணத்  தேவைக்காக  செயின்  திருட முயன்ற  கல்லூரி  மாணவர்களை  மடக்கி பிடித்த  பொதுமக்கள்  தர்ம  அடி  கொடுத்து  காவல்துறைனரிடம்   ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை  அடுத்த   ரமணா நகரில்   தெய்வானை என்கிற  பெண் சாலையின்  ஓரமாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு  கல்லூரி மாணவர்கள்  தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன்  தங்க தாலி செயினை பறிக்க  முயற்சி செய்தனர் .இதனை  கண்ட  அக்கம் பக்கத்தினர்   இருவரையும்  மடக்கி பிடித்து கைகளை  கயிற்றால்   கட்டி   தர்ம அடி  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் கைது..!!

மாட்டுக்கறி சூப் சாப்பிட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்   வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான் என்பவர் நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர். இவர் சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டது மட்டுமில்லாமல் பைசான் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட 4 பேர்  ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

MLA மகன்களின் டார்ச்சர்…மனமுடைந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் MLA வின் மகன்கள் இளைஞர் ஒருவரை துன்புறுத்தியதால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் MLA  விஷ்ணு ஸ்வரூப்பின்  மகன்களான சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் பன்சால் ஆகியோர் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.மேலும் கடைகளை வாடகைக்கு விட்டும் வருகின்றனர்.இந்நிலையில்,ஒரு கடையை வாடகைக்கு எடுப்பதற்காக  ராஜேஷ் சிங்  என்ற இளைஞர் 7,00,000 ரூபாயை முன்தொகையாக அளித்துள்ளார். இதையடுத்து பணம் கொடுக்கல்,வாங்கலில் ராஜேஷ் சிங்குக்கு சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்… துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு…!!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றிய சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு பெண் ஒருவர்   ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் ரயில்  செல்வதை கண்டு அவசர அவசரமாக ஓடிச்சென்று எற முயற்சித்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறியதால்  கீழே விழுந்தார். இதில் ரயில்  சக்கரத்தின் இடையில்  சிக்க இருந்த அவரை,ரயில் நிலையத்தில்  வழக்கமாக  ரோந்து பணியில் ஈடுபடும்  ரயில்வே துறை காவலர் ஒருவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கல்வி தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி….அமைச்சர் உதயக்குமார்…!!

கிராம உதவியாளர்களாக பணிபுரிவோர்க்கு கல்வித்தகுதி  அடிப்படையில்  பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். சட்ட பேரவை கூட்டத்த தொடரில்  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,கூட்டத்த தொடரின்  கேள்வி நேரத்தில்  பேசிய திமுக உறுப்பினர் M.R.K.பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான  காலி பணி இடங்கள் எத்தனை உள்ளது, கிராம பணி   உதவியாளர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக  அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், அரசுப் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலைய அறையில் “16 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை” பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் கைது..!!

ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாப்பு பணியாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.    சோலாங் ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் முகேரியன் அருகே உள்ள தனது ஊருக்கு செல்ல காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பஞ்சாப் பாதுகாப்பு பணியாளர்கள் அவரிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை இருவரும் நைசாக பேசி அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

பலத்த பாதுகாப்புகளுடன் குடியரசு தலைவர் அத்திவரதர் தரிசனம்…!!

 ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவர் பலத்த பாதுகாப்புகளுடன் அத்திவரதரை தரிசனம் செய்த்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அத்திவரதரை காண அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை காண வருவதையொட்டி காஞ்சிபுரத்தில் 3 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வந்த குடியரசு தலைவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் வருகை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

“ஜாவா பைக் புக்கிங் செய்தீர்களா” அப்போ இன்னும் 10 மாதம் காத்திருங்கள்…!!

 ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புக்கிங் செய்த ஜாவா பைக் பிரியர்கள் சிறிது காலம் காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.  இந்தியாவில் ஜாவா நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஜாவா புதிய பைக்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஜாவா பைக் பிரியர்கள் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்தது முதல் இப்போது வரை  பைக் எப்போது தமது கைக்கு வரும் என்று புக்கிங் செய்தவர்கள் தவித்து வருகின்றனர். ஜாவா நிறுவனமும் அதிகமாக  முன்பதிவு செய்து திணறியது. தற்போது முன்பதிவையும் ஜாவா […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாநில செய்திகள்

சுற்றுலா தலமாக மாறும் பிரபல கடற்கரை…பேரவையில் அமைச்சர் பேச்சு..!!

சீர்காழி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய  கொடியம்பாளையம் கடற்கரை தீவை சுற்றுலாத் தலமாக மாற்ற தமிழக அரசு  நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். நாகை மாவட்டம் பிச்சாவரம் அருகே தீவு போன்று காட்சியளிக்கும் கொடியம்பாளையம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக  அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்ட பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில்  சீர்காழி தொகுதி MLA  கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொடியம்பாளையம் கடற்கரை தீவானது, […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர்…தரிசனத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம்..!!

அத்திவரதரை தரிசிக்க தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு  வந்தடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக  புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை  தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை  முன்னிட்டு கோவிலைச் சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில்  டெல்லியிலிருந்து […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி சரிவு” பவுனுக்கு 232 குறைவு…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 232 குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசானில் ப்ரைம் டே சேல்…. 18 -24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக்…!!

அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு 50 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் ப்ரைம் டே சேல் வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தநிலையில் 18 -வயது முதல் 24 -வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இளைஞர்கள் அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பினால் 50 சதவிகிதம் அதாவது 500 ரூபாய் கேஷ்பேக் ஆக வழங்கப்படும். அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைவதற்கான கட்டணம் 999 ரூபாய். […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

“கிரண்பேடிக்கு பின்னடைவு”அதிகாரம் தொடர்பான வழக்கு தள்ளுபடி..!!

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை வந்த தண்ணீர் எக்ஸ்பிரஸ்…மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்..!!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட தண்ணீர் ரயில் 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கீட்டில்   காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து  அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில்,காலை 7 மணியளவில் மாலை அலங்காரங்களுடன் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

“தபால் துறையில் இனி தமிழ் கிடையாது” இந்தி, ஆங்கிலத்தில் தான் தேர்வுகள் நடக்கும்… மத்திய அரசு சுற்றறிக்கை..!!

தபால் துறையில் இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது  இந்தியா முழுவதும் உள்ள தபால் துறைக்கான பல்வேறு காலியான பணியிடங்களுக்கு  தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்புவது வழக்கம். இத்தேர்வுகளில்  இந்தி,ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் வினாத்தாள் இருக்கும். மாநில மொழிகளில் கொடுக்கப்பட்டிருப்பதால் போட்டி தேர்வு எழுதுபவர்கள் எளிதில் புரிந்து கொண்டு பதிலளிக்க ஏதுவாக இருக்கும். இதுவே நடைமுறைப்டுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் வருகை…காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம்  அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று  வழிபட இருப்பதையடுத்து கோவிலை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக  புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை  தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை  முன்னிட்டு கோவிலைச் சுற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பையில் மெக்ராத் சாதனையை தகர்த்தார் ஸ்டார்க்..!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார்.  உலக கோப்பை இரண்டாவது  அரை இறுதியில் நேற்று  ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின.  பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 46 ரன்களும் எடுத்தனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் வேலூர்

மாலை அலங்காரங்களுடன் புறப்பட்டது தண்ணீர் எக்ஸ்பிரஸ்…!!

 ஜோலார்பேட்டையிலிருந்து  50 வேகனில்  தண்ணீர்  நிரப்பப்பட்ட   ரயில் மாலை அலங்காரங்களுடன்  சென்னைக்கு புறப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர்  தட்டுப்பாட்டை போக்கும் விதமாக  ஜோலார்பேட்டையிலிருந்து    ரயில் மூலம் தண்ணீர்  கொண்டு செல்ல  ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு  அதற்கான பணிகள் விரைவாக  நடைபெற்று முடிந்தது. பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்த நிலையில், 50 வேகனில்  தலா 54,000 லிட்டர் என மொத்தம் 27 லட்சம் லிட்டர் குடிநீர்  நிரப்பும் பணிகள்  நடைபெற்றன. இதையடுத்து குடிநீர் முழுவதும் நிரப்பப்பட்டதும், ஜோலார்பேட்டையிலிருந்து  அலங்காரங்களுடன்  ரயில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எளிதில் சாய்ந்த ஆஸ்திரேலியா…. 27 ஆண்டுகால வரலாற்றை மாற்றிய இங்கிலாந்து..!!

இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது   உலக கோப்பை 2-வது அரை இறுதியில்  ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் நேற்று மோதியது.  பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் அடித்தார். மேலும் அலெக்ஸ் கேரி 46 ரன்களும், மிட்சல் ஸ்டார்க் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை காலமானார்.!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்   கடந்த 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் பா ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதை தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். பா ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (63) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த […]

Categories
பல்சுவை

டீசல் , பெட்ரோல்” இன்றைய விலை நிலவரம்…!!

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை நிலையாகவும் , டீசல் விலை குறைந்தும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 12

இன்றைய தினம் : 2019 ஜூலை 12

Categories
Uncategorized

கூடுதல் கல்வி தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை கிடையாது: நீதிபதி

வேலையில்லா திண்டாட்டம் காரணமாக , கூடுதல் கல்வி தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கமுடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி திட்ட வட்டமாக தீர்ப்பு அளித்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சி… அதுக்கப்பறம் பழகிடுச்சி- ஸ்ருதி ஹாசன்..!!

சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு  ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவன்” கர்நாடக சபாநாயகர் பேட்டி…!!

மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து  கர்நாடக அதிருப்தி MLA_க்கள் சபாநாயகரை சந்தித்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சபாநாயகர்  ரமேஷ்குமார் கூறுகையில் , ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் , ராஜினாமா குறித்து விளக்கம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மிரட்டலால் மும்பை சென்றதாக MLA_க்கள் சொன்னார்கள்” கர்நாடக சபாநாயகர் தகவல்…!!

சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 MLA_க்கள் என்னிடம் கூறினார்கள் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த  சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்  முன்பு அங்குள்ள 10 சட்டமன்ற உறுப்பினர் ஆஜராகி அதில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இதை தொடர்ந்து அதிருப்தி MLA_க்கள் சந்திப்புக்கு பின்பு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்குள்ளது. யாரையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் ராஜினாமா செய்யமாட்டேன்” முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்…!!

அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் நான் ராஜினாமா செய்ய வேண்டுமா அதற்க்கு என்ன தேவை இருக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் தொடர்ந்து நிலவிவரும் சிக்கல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன , இந்த ஆட்சியை தக்க வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசித்ததாக தெரிகின்றது. அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் இந்த கூட்டம் கர்நாடக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து சிறப்பான பந்து வீச்சு…. ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் குவிப்பு…. இறுதி போட்டிக்கு முன்னேறுமா.?

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.  உலக கோப்பை 2-வது அரை இறுதியில்  ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 0 ரன்னில்  ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து  கிறிஸ் […]

Categories
மாநில செய்திகள்

“ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர்” கனிமொழி MP கோரிக்கை …!!

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டுமென்று மக்களவையில் திமுக MP கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த கூட்டத்தில்  உரையாற்றிய தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக M.P கனிமொழி , மத்திய அரசின் எல்லா திட்டங்களும் , எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரியும் படி  பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ,  தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு குறைவு  என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆதரவு கொடுங்கள் , வெறுக்காதீர்கள்” சோயப் அக்தர் வேண்டுகோள்…!!

அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். உங்கள் அணியை வெறுக்காதீர்கள் என்று இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுக்களை சிட்டுக்கட்டாய் சரிந்த போதும் தோனி , ஜடேஜா அணியின் வெற்றிக்காக போராடினார்கள். இருந்தும் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியின் தோல்வி ஒட்டு மொத்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இளம்பெண்ணுக்கு ட்வீட்” சர்சையில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஷமி…!!

இளம்பெண்ணுக்கு ட்வீட்_டரில் குறுச்செய்தி அனுப்பியதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்சையில் சிக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தொடர்ந்து பெண்கள்  விவகாரத்தில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவருக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு மற்றும் உறவு உள்ளதாக அவரது மனைவி ஜஹானே காவல்துறையில் கொடுத்த புகார் நிலுவையில் இருந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது இளம்பெண் ஒருவருக்கு டுவிட்டரில்  குறுஞ்செய்தி அனுப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் முகமது ஷமி. சோபியா என்ற இளம்பெண்ணுக்கு தனது ட்வீட்_டர் பக்கத்தில்  என்னை 1.4 மில்லியன் பேர் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“தோனி ஓய்வு எண்ணமும் உங்களுக்கு வர வேண்டாம்” பிரபல படகி உருக்கம்…!!

ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என்று பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த  இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி […]

Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக் தடை”அரசாணை செல்லும்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம்  தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.இதையடுத்து  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு  பழைய பேப்பர் ,துணி பை உள்ளிட்ட பொருள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  இத்திட்டம் பலர் மத்தியில் வரவேற்பையும்,எதிர்ப்பையும் பெற்று வந்தது. மேலும் தமிழகத்தில் இத்திட்டத்தால்  தொழில்கள் பாதிக்கப்படுகிறது என்றும்,தமிழக அரசு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அலெக்ஸ் கேரியின் தாடையை உடைத்த ஜோப்ரா ஆர்ச்சர்…. ஆஸி 30 ஓவரில் 130/5..!!

ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தில் அலெக்ஸ் கேரியின் தாடையில் பட்டு ரத்தம் சொட்டியது   உலக கோப்பை 2-வது அரை இறுதியில்  ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 0 ரன்னில் எல்.பி. டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன்…வைகோ பேட்டி..!!

மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான், சந்திரசேகர், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட  சண்முகம்,வில்சன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 3 பேர் என மொத்தம் 6 பேர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட […]

Categories
பல்சுவை

தங்கம் கிடுகிடு உயர்வு “பவுனுக்கு ரூ 464 அதிகரிப்பு” பொதுமக்கள் அதிர்ச்சி…!!

தங்கம் விலை பவுனுக்கு ஒரே நாளில் ரூ 464 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எங்களது ஆட்சி கலைக்கப்படாது…. குமாரசாமி நம்பிக்கை…!!

எங்களது ஆட்சி கலைக்கப்படாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்- ஜனதா தள  அதிருப்த்தி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஜனதா தள-காங் கட்சிகள் தீவீர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 2 MLAக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளோம் என சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் ஆட்சி காப்பாற்றப்படுமா?இல்லை கவிழுமா […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் ….!!

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவதால் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார். பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து திமுக  சார்பில் வைகோ , சண்முகம் , வில்சன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகினர். அதே போல அதிமுக சார்பில் முகமது ஜான் , சந்திரசேகர்  , அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகினர்.  இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு….பேரவை செயலாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 18ஆம் தேதி  மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மனு தாக்கல் செய்த   11 பேரில் வைகோவிற்கு மாற்றாக திமுக சார்பில் போட்டியிட இருந்த சம்பத் மற்றும்  சுயேச்சை வேட்ப்பாளர்கள்  உட்பட   5 பேர் தங்களது மனுக்களைத்  திரும்பப் பெற்றுக்கொள்ள 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான்,சந்திரசேகர்,பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

“மத்திய அரசின் திட்டத்தில் தமிழாக்கம்” கனிமொழி MP கேள்வி …!!

 மத்திய அரசின் திட்டம் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் “பிரதம மந்திரி” என்று அடங்கிய பெயர்களை  வைத்து திட்டங்களை செயல்படுத்துகின்றது. இது குறித்து இன்று நடைபெற்ற மக்களவையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் , எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே மத்திய அரசு பெயர் வைக்கிறது. தூத்துக்குடியில் ‘PM Sadak Yojana’ என ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக் கூடாது ” சச்சின் கருத்து

தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையீடக் கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த  இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறன் பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு அறிவுரை வழங்க முடியாது…நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயர் வழக்கு..!!

MLAக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில MLAக்கள் 14 பேர் அளித்த ராஜினாமா கடிதத்தில் 8 பேரின் கடிதங்கள் சட்ட விதிமுறைகளின் படி இல்லை என்றும், ராஜினாமா செய்ய விரும்பினால் முறைப்படி கடிதம் அளிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து MLAக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,MLAக்கள் 10 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை தாக்கிய மால்வேர்..!!

உலக அளவில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ”ஏஜெண்ட் ஸ்மித்” என்றதொரு மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளது. கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு அப்ளிகேஷனாகவே ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் அந்த மால்வேர் மெல்ல ஃபோனில் இருக்கும் மற்ற ஆப்ஸ்களையும் தாக்கத் தொடங்குகிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கே தெரியாமல் இந்தத் தாக்குதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி போராட்டம் “பெருமைபடலாம்” வி.வி.எஸ். லக்ஷ்மன் கருத்து…!!

இந்திய அணி போரடியாயத்தை நினைத்து பெருமைபடலாம் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை […]

Categories

Tech |