Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

திருப்பதியில் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் . திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.கருவறை,ஆனந்த நிலையம்,பகல வடா  சன்னதி,யோக நரசிம்மர் சன்னதி மற்றும் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு,பச்சை கற்பூரம்,மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட மூலிகை கலவைகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டன.இதையடுத்து கோவில் திருமஞ்சனத்தை  ஒட்டி இன்று சர்வ தரிசனம்,திவ்ய தரிசனம், குழந்தையுடன் பெற்றோர்கள்   செல்லும்  தரிசனம், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரியல்மி பிராண்டின் டூயல் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் …!!

ரியல்மி பிராண்ட நிறுவனம் தனது புதிய டூயல் கேமரா கொண்ட  ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்கிறது . இந்தியாவில் ரியல்மி பிராண்டு நிறுவனம் அறிவித்தப்படி  தனது  ரியல்மி 3i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் H.D + 19:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி 60 12 N.M . பிராசஸர், அதிகபட்சம் 4 G.B .RAM  ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 M.B.  பிரைமரி கேமரா மற்றும்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் தீடிர் மாற்றம் …….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆசுரத்தனமான  பெற்று , மத்தியில் தனி பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் அமித்ஷா இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக தேர்வாகியதால் பாஜவிற்கு செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார். ஜே.பி நட்டா தேர்வானத்தில் இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கள்ளுக்கடையில் ரூ10,000 லஞ்சம்… வைரலாகும் போதை போலீசின் வீடியோ…!!

ராமநாதபுரத்தில் கள்ளுக்கடை ஒன்றில் காவலர் ஒருவர் போதையில்   ரூ10,000 லட்சம் கேட்பது  போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ராம்குமார். இவர் அண்மையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கள்ளு கடையில் பனை மர கள்ளை  வாங்கி குடித்து ருசி பார்த்து உள்ளார். பின்னர் மண்பானை குடத்தில் மீதம் இருந்த கள்ளை பாட்டிலில் நிரப்பியவாறு, சட்டவிரோதமாக கடை நடத்தியவரிடம் பத்தாயிரம் ரூபாய் தருமாறு லஞ்சம் கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“அஞ்சல் துறை தேர்வுகள் இனி தமிழில் நடத்தப்படும்” – ரவிசங்கர் பிரசாத்..!!

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 14-ம் தேதி இந்தியா முழுவதும் தபால்துறை தேர்வுகள் நடந்தது. இதில் முதல் தாளில் இருந்த கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றருந்தன. இதையடுத்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு கடும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் ….

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி  x  ஸ்மார்ட்போனில்  6.53 இன்ச் ஃபுல்  H.D+  AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM   , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போனின்  வெப்பத்தை குறைப்பதற்கு  புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஆந்திர பெண்கள் 2 பேர் பேருந்து மோதி பலி..!!

சென்னை  நந்தனம் அருகே  மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.  ஆந்திராவை சேர்ந்த சுதா, நாகலெட்சுமி, பவானி ஆகிய மூவரும் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து,  எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று காலை 9 மணி அளவில் ஒரே பைக்கில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்கள் பேருந்தை […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும்- பாலச்சந்தர்..!!

தமிழகத்தில் மற்றும் புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தின் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசாகவும், மிதமாகவும் மழை பெய்யும். மேலும் பேசுகையில், மேற்கு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்திய விமானம் பறக்க வான்வழியை திறந்தது பாகிஸ்தான்..!!

 இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் பாதையை திறந்து விட்டுள்ளது    இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறந்து செல்வதற்கு  பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டிற்கு செல்லும் போது அவ்வழியை பயன்படுத்த முடியாமல்  பிரதமரின் விமானம் வேறு வழியாக சென்றது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான்  இரு நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கர்தார்பூர் குருத்வராவுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடக்கும் செய்ய பணம் கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய குடும்பத்தினர்…!!

அடக்கும் செய்ய பணம் கொடுத்து விட்டு தூக்கில் தொங்கி அண்ணனும் , தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையதை  சேர்ந்த துரைராஜ் இவருக்குகோபாலகிருஷ்ணன்  என்ற  மகனும் , செல்வி சாந்தி 2 மகள்களும் உள்ளனர். நேற்று இடுக்குவாய்பகுதியிலுள்ள சகோதரி சாந்தியின் வீட்டிற்கு சென்ற கோபால் கோபாலகிருஷ்ணன் அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் ஏன் பணத்தை கொடுக்கிறாய் என்று சாந்தி கேட்டதற்கு அவசிய செலவு தேவைப்படும் என்று கூறிவிட்டு கோபாலகிருஷ்ணன் வீடு திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் குழந்தையின் தங்கச் செயின் பறிப்பு…..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரைச் சேர்ந்த ரம்யா என்பவர் தனது குழந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக அதிகமாக இருந்ததால் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில்  இருந்த பெண் வேகமாக இறங்க முயற்சிப்பதைக் கண்டு அவரை […]

Categories
தேசிய செய்திகள்

“43,00,000 மக்கள் பாதிப்பு”அசாமை புரட்டி போட்ட கனமழை…..!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார்  43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை விட இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கி , வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து  வெளுத்து வாங்கி வருகின்றது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் , அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் . மக்களின் இயல்பு […]

Categories
உலக செய்திகள்

“இந்தோனோஷியாவில் நிலநடுக்கம்” ரிக்டர் அளவு கோளில் 5.7_ஆக பதிவு ..!!

இந்தோனோஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.7_ஆக பதிவாகியுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவின் மாலுக்கு தீவுப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில்  7.3 என்று பதிவாகியது. இத்தோனோசியா என்றாலே அடிக்கடி ஏதாவது இயற்க்கை சீற்றத்துக்கு பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது . இந்தோனேசியா பூமியின் ‘நெருப்புக் கோளம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது தான் காரணம். இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள்  ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள    பாலி பிராந்திய பகுதியில் இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்ற இங்கிலாந்து அணி வீரர்கள்..!!

உலக கோப்பையை வென்றதும் பிரதமர் தெரசா மேயை சந்தித்து இங்கிலாந்து அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில்  பேட் செய்த நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 16…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 16 கிரிகோரியன் ஆண்டு : 197_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 198_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 168 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். 997 – கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்தியஇராணுவத்தினர் தோற்கடித்தனர். 1054 – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும்சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது. […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை” வாடிக்கையாளர் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளுக்குப் பின் 2 பழமையான பிரமீடுகள் பார்வைக்கு அனுமதி…!!!

எகிப்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் 2 பழமையான பிரமீடுகள் மக்கள் பார்வைக்காக முதன் முதலாக திறக்கப்பட்டன. கேரு தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பழமையான 2 பிரமீடுகள் அமைந்துள்ளன. 1965 ஆம் ஆண்டுக்குப் பின் சிதைவடைந்த அந்த பிரமீடுகள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து தொல்லியல் துறையின் நீண்ட முயற்சிக்குப் பின் அதை சீரமைக்க அனுமதி கிடைத்தது. பல ஆண்டுகளாக நடந்த சீரமைப்பு பணிகளுக்கு பின் பிரமிடுகள் இரண்டும்  மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. அதில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது …ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ….

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தன்னுடைய  முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் ப்ரொடக்‌ஷன் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது . இந்த மோட்டார் சைக்கிள் வருகின்ற  2020 -ஆம் ஆண்டு முதல்  விற்பனைக்கும் வரும் என தெரிவித்துள்ளனர் .கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA  2018 மோட்டார் சைக்கிள் விழாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பில் லைவ் வையர் கான்செப்டை  அறிமுகம்  செய்தது . இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாத  விழாவிலும் இதே மாடல்  காட்சிப்படுத்தப்பட்டது. எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுகள் விரைவாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்” ஜிம்மி நீசம் உருக்கம் ..!!

குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள் என்று ஜிம்மி நீசம் உருக்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார்.    நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் அனைத்து விக்கெட்டையும் இழந்து 21 ரன்கள் எடுத்தது.  இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்று பாதையிலும் நீர் தேக்கம்…பயணிகள் கடும் அவதி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.   வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை…சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அருகே எஸ் ஆர் எம் கல்லூரியில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற மாணவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இளைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன்  வாடகைக்கு அரை ஒன்றை  எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீ ராகவ் கல்லூரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

எர்டிகா C.N.G வேரியண்ட்டை அறிமுகம் செய்யும் மாருதி சுசுகி…!!

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய  எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்  முன்னணி  ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வருகின்ற  ஆகஸ்டு மாதம்  21 -ஆம் தேதி தன்னுடைய  M.B.V  ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது.  இது   மாருதி எர்டிகா கிராஸ் என்று   கூறப்படுகிறது .புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . இது தற்போது உள்ள மாடலை விட   அழகியதாக உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கார் முழுவதும் புதிய  அப்டேட்கள் செய்யப்படும் செய்யப்பட்டுள்ளன […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“பொள்ளாச்சி கொடூரம்”5 பேரின் காவல் நீட்டிப்பு… கோவை நீதிமன்றம்..!!

பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய 5 பேரின் நீதிமன்ற காவலை கோவை நீதிமன்றம் நீட்டிப்பு செய்துள்ளது. பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இக்கும்பலை கைது செய்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சேலம்  சிறையில் அடைத்தனர்.   இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு,சபரிராஜன், வசந்த பாபு,  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை…சென்னையில் பரபரப்பு ..!!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இரண்டு  இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தாம்பரம் அற்புதம் நகரைச்  சேர்ந்தவர் பிரதீப் , இவர் தனது வீட்டிற்கு அருகே சேலையூரை சேர்ந்த சுரேஷ் என்ற நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளது.இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற தாம்பரம் காவல்துறையினர்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு அரவேக்காடு தனமாக உள்ளது…. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது அரவேக்காடு தனமாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு பாராட்டுக்களையும்,  எதிர்ப்புகளையும்  தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூர்யாவின் பேச்சு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியுடன் பைக்கில் சென்ற இளைஞர் கைது…சென்னை போலீஸ் அதிரடி..!!

சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று இரவு சென்னை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் சில மர்ம கும்பல் பட்ட கத்தியுடன் வந்து அங்கிருந்தவர்களை சரமாரிய தாக்கினர். இது குறித்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர். ஆனால் அனைவரும் முகத்தில் துணி கட்டிருந்ததால் காவல்துறையினரால் அடையாளம் காண இயலவில்லை. இதையடுத்து சென்னையை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர பரிசோதித்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அய்யப்பா திரையரங்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பார்” அர்ஜுன் சம்பத் பேட்டி….!!

காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பர் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினியை யாரும் இழுக்க முடியாது. அவர் மிக தெளிவாக சொல்லி இருக்கிறாரார். வரக்கூடிய தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் நிச்சயம் இருக்கும். அவர் தேர்தலில் போட்டியிட போகிறாரார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் முதலைமைச்சராக ஸ்டாலினா ? ரஜினியா ? என்று தான் வர போகின்றது. தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி வந்தால் ராஜராஜ சோழன் ஆட்சி” அர்ஜுன் சம்பத் கருத்து….!!

ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியல்  கொள்கை சுவாமி விவேகானந்தருடைய ஆன்மீக அரசியலையும் , ராஜராஜ சோழனுடைய  ஆன்மீக அரசியலை கொண்டது. ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும். ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது , நீதி ,நேர்மை , தர்மத்திற்கு உட்பட்டது தான் ராஜராஜ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத கப்தில்” சமாதானப்படுத்திய வோக்ஸ்..!!

உலககோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்த பின் மைதானத்தில் மார்ட்டின் கப்தில் கண்ணீர் விட்டு அழுதார்.  நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்” முதல்வர் குமாரசாமி நம்பிக்கை …!!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று முதலவர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வருகின்றது. அங்கு ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA_க்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து , பாஜக கட்டுப்பாட்டில் இருந்து வருவதால்  முதல்வர் குமாரசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து  சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி சரிவு” பவுனுக்கு 104 குறைவு…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 104 குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெருங்குளத்தூரில் 8 வழி சாலை…. பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

பெருங்குளத்தூரில் 8 வழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்  கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா கிழக்கு-மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க கோரி வலியுறுத்தியதோடு, மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்வியும் முன்வைத்தார். இதற்கு பதில் அளித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நியூசி அணிக்கு எனது வருத்தம்” ஸ்டோக்ஸ், பட்லர் தான் இதற்கு காரணம் – கேப்டன் மோர்கன்..!!

கோப்பைக்கான மொத்த பெருமைகளும் ஸ்டோக்ஸ், பட்லர் இருவரையுமே சேரும் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.  நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தென்தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி…2 பேரை கைது செய்து காவல்துறையினர் அதிரடி…!!

தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில் ஹாரிஸ் முகமது, ஹசன் அலி   ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கணினிகள் மடிக்கணினிகள் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும் ,தமிழகம் உள்ளிட்ட தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டத்தின் போக்கை மாற்றியது அந்த பந்து தான்” வில்லியம்சன் வேதனை…!!

கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரி சென்றது தான் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றி விட்டது என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார்  நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் இலக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி காப்பாற்றப்படுமா?கவிழுமா? 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. தற்போது ஆளும் அரசை கவிழ்க்க   பாஜக சதி செய்துள்ளதாக மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து ஜூலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final : திக்.. திக்.. சூப்பர் ஓவர்…. கோப்பையை தட்டி தூக்கியது இங்கிலாந்து..!!

உலக கோப்பை இறுதி போட்டியில் பரபரப்பான சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி கோப்பையை வென்றது.   உலக கோப்பை இறுதி போட்டியில் நேற்று இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. கோப்பையை எந்த அணி வெல்லும் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போதை தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை….திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் குடிபோதையினால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பார் அருகே நேற்று இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதையடுத்து  ஒரு தரப்பினரை சேர்ந்த 6 பேரை மற்றொரு தரப்பினர் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் அருள் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்  படுகாயமடைந்த 5 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி டீசல், அதிகரித்து வரும் பெட்ரோல்…. வாகன ஓட்டிகள் கவலை.!!

இன்றைய பெட்ரோல் விலை அதிகரித்தும் டீசல் விலையில் மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலையடைந்துள்ளனர்.  தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 15…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 15 கிரிகோரியன் ஆண்டு : 196_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 197_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 169 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 70 – உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். 1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக்கைப்பற்றினர். 1149 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது. 1240 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை “நேவா” என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர். 1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” தேர்தல் ஆணையத்திற்கு 3 மாத கால அவகாசம்…!!

தமிழக தேர்தல் ஆணையத்திற்கு  உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை ரத்து செய்யக்கோரியதோடு, 6 மாத காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஆனால் தற்போது வரை தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது  பலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா விளம்பரம் தேடுகிறாரா..? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!!

நடிகர் சூர்யா அவரது படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்கு அவசரமாக கருத்து கூறுகிறரா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேவையில்லை நெக்ஸ்டே போதும்…. புதிய மருத்துவ ஆணை மசோதாவில் வெளியான தகவல்….!!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை  மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவ படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரிடையே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் பெரும் மதிப்பெண்களே எம்.டி  மற்றும் எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்பின் மாணவர் […]

Categories
மாநில செய்திகள்

”சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகின்றது” H ராஜா கண்டனம்…!!

நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final நியூசிலாந்து 241 ரன்கள் குவிப்பு…. கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து..!!

இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது   உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோலசும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 19 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் […]

Categories
கல்வி கன்னியாகுமாரி மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் 60,000 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை…. அமைச்சர் செங்கோட்டையன்…!!!

கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பை தொடரில் 578 ரன்கள் குவித்து வில்லியம்சன் சாதனை..!!

நடப்பு உலக கோப்பை தொடரில் கேப்டன் கேன் வில்லியம்சன்  578 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்  உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.இப்போட்டியில்  நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் கேன் வில்லியம்சன்  578 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடிமராமத்து திட்டம்”500 கோடி நிதியில் 1827 பணிகள்…அமைச்சர் SP வேலுமணி…!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம் தூர்வாரும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம், நீலம்பூர் முத்துகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு…. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் பேட்டி…!!

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார். தொடர்ந்து  பேசிய அவர் , நான்கு […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்தில் முழு இந்தியாவை காட்டிலும் தமிழகமே சிறந்தது… வெங்கையா நாயுடு கருத்து…!!

சுகாதாரத்தில் மொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை அமிர்த கரையில் 3 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் […]

Categories

Tech |