Categories
தேனி மாவட்ட செய்திகள்

“முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் குறைப்பு”…. மின் உற்பத்தி குறைவு….!!!!!!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால் லோயர் கேம்பில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தமிழக-கேரளா எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. சென்ற சில வாரங்களாக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததன் காரணமாக மின் உற்பத்தியும் குறைந்தது. நான்கு ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 126 முதல் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. அந்த வகையில் இன்று காலை முதல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. “அலைமோதிய பயணிகள் கூட்டம்”….!!!!!

தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த மக்கள் வேலை செய்து வருகின்றார்கள். விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கின்றார்கள். இந்த நிலையில் நாளை ஆயுதபூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமி என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களும் விடுமுறை. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

இது அனைத்தும் வெளிநாட்டு சதி…. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட “பாகிஸ்தான் முன்னாள் அதிபர்”….!!!!!

பிரபல நாட்டின்  முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள  நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக  ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் முன்னாள் அதிபர் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி அரசுக்கு எதிராக தனது கட்சியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் விதைகள் இருப்புயிருக்கிறது”…. அதிகாரி தகவல்….!!!!!!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடிக்கான நெல் விதைகள் இருப்பு இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி பணிகள் சென்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது. தற்பொழுது வயல்களில் இருக்கும் நெற்பயிர்கள் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருக்கின்றது இந்த நிலையில் இரண்டாம் போக சாகுபடிக்கான நெல் விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கம்பம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பூங்கோதை […]

Categories
உலக செய்திகள்

அரசு அலுவலகத்தில் இரட்டை குண்டு வெடிப்பு…. சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சோமாலியாவில் அரசு அலுவலகத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில்  சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பானது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகின்றது. மேலும், பொதுமக்கள், ராணுவத்தை குறிவைத்து அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாராக இருங்கள்…. பிளேஸ்டோரில் இருந்து காணாமல் போன செயலி …. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை….!!!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த சீன கும்பலை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெளியே வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் ஆன்லைன் மூலம் வேலை தேடுகின்றனர். இதனை சில கும்பல்கள் பயன்படுத்தி பொதுமக்களிடம்  பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பணம் கட்டினால் பகுதி நேர வேலை வாய்ப்பு என விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு ரூபாய்களுக்கு தடை…. திடீரென உத்தரவிட்ட தலீபான்கள்….!!

பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் மாதம் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஓராண்டாக தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது அங்கு பாகிஸ்தான் ரூபாய்களுக்கு திடீர் தடை விதித்து தலீபான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் மாதம் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வெளியான தலீபான் புலனாய்வு அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானில் நிதி பரிவர்த்தனைகளில் பாகிஸ்தானிய ரூபாயைப் பயன்படுத்துவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன சிம்பு….? முக்கியமான அறிவிப்பை வெளியிட போறாரா….? எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்….!!

நடிகர் சிலம்பரசனின் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த சிம்பு இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராகவும் திகழ்கின்றார். ஆனால் இதற்கிடையே சில காலம் பிரச்சனைகள், சர்ச்சைகள் என சிம்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அந்த நேரத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதை தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்”….. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள்…!!!!!

ஸ்ரீவைகுண்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மற்றும் வேளூர் வேலு சமூக நல அறக்கட்டளை சேர்ந்து மாராத்தான் போட்டிகளை நடத்தியது. இப்போட்டியை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். இதை அடுத்து 12 வயதுக்குட்பட்டோர், மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பொன்னங்குறிச்சி வரை போட்டி நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை…? அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!!

வட சென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் ஐந்தில் இன்று மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அதிகாரிகளோடு நடைபெற்று உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது தற்போது உள்ள தமிழக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போருக்கு மத்தியில்… “என் பூனைகளை காப்பாற்றுங்கள்”..? இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடிய நபர்…!!!!!

இந்தியாவில் பிறந்த மருத்துவரான கிடிகுமார் பாட்டீல் என்பவர் கடந்த 2016ம் வருடம் உக்ரைன் குடியுரிமை பெற்றுள்ளார். ரஷ்யா உக்ரைன் போரில் அவர் பணிபுரிந்த மருத்துவமனை குண்டு வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து தனது செல்லப் பிராணிகளை விட்டு அண்டை நாடான போலந்துக்கு சென்று வாழ வேண்டி இருந்தது. பாட்டீல் 2020 ஆம் வருடம் தலைநகர் கீவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு விலங்குகளை வாங்கியுள்ளார் அவற்றில் ஒன்று 24 மாதம் ஆண் லெப்ஜாக் அதாவது ஆண் […]

Categories
அரசியல்

நவராத்திரி பண்டிகையின் மகிமையும், சிறப்பும்…. கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க…. இதோ புராண வரலாறு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டில் கடந்த திங்கட்கிழமை நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி பண்டிகை என்பது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். இந்த நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளில் விஜயதசமி கொண்டாடப்படும். இந்த நவராத்திரி பண்டிகையின் போது நாம் முப்பெரும் தேவிகளை வழிபடுவதால் நமக்கு வீரம், செல்வம் மற்றும் கல்வி போன்றவை கிடைக்கும் என்பது ஐதீகம். இதனையடுத்து நவராத்திரி […]

Categories
உலக செய்திகள்

மேகன் அணிந்திருந்த காதணிகள்… எழுந்து வரும் குற்றச்சாட்டு… “விசாரிக்க அரண்மனை அதிகாரிகள் அச்சம்”…? வெளியான தகவல்…!!!!

இளவரசர் ஹரி மேகன் தம்பதியினருக்கு திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின் இவர்கள் இருவரும் ஓராண்டு காலம் தென்னாபிரிக்காவில் வசிக்க அரண்மனை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் போனது இந்த சூழலில் 2018 ஆம் வருடம் ஹரி மேகன் தம்பதி உத்தியோகபூர்வமான பயணம் செல்ல முடிவானது. இதனை அடுத்து தம்பதி இருவரும் பிஜியில் இரண்டு நாட்கள் தங்கவும் நாட்டின் ஜனாதிபதி சிறப்பு விருதை ஒன்றை ஏற்பாடும் […]

Categories
உலக செய்திகள்

“10 குழந்தைகள், 40 பேர குழந்தைகள்” 67 வயது முதியவருக்கு 5-வது திருமணம்…. 90’ஸ் கிட்ஸ்கள் ஷாக்….!!!

பொதுவாக தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது பலருக்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு தற்போது 5-வது முறையாக திருமணம் நடந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் சௌகாத் (67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 முறை திருமணம் ஆகியதில் 4 மனைவிகளும் இறந்து விட்டனர். இவருக்கு தற்போது 10 குழந்தைகள் மற்றும் 40 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதியவரின் மகள்கள் அனைவருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் கடன்” பணத்தை செலுத்தியும் விடாது டார்ச்சர்….. ஐடி ஊழியரின் விபரீத முடிவால் பரபரப்பு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கேகே நகர் பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நரேந்திரன் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை நரேந்திரன் முழுவதுமாக திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனம் 50,000 ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை நரேந்திரன் கடன் செயலியில் செலுத்தியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வங்கியில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடி வந்த ஊழியர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எம்.பி.டி சாலையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இங்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாடியில் இருந்த ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்ததால் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிக பெருமக்களே…! இதோ கிளாஸான மாஸான “தூம் தாம் தோஸ்தான்”…. நானி படத்தின் முதல் பாடல் இதோ…!!!!!

சந்தோஷ் நாராயணன் இசையில் நானி நடிக்கும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிங்காராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நானி புதிய திரைப்படம் ஒன்றில் நடித்த வருகின்றார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இருந்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ் – கிரித்தி சனோன் காதலா….? இணையத்தில் பரவும் ரசிகர்களின் பதிவுகள்….!!!

பிரபாஸ் மற்றும் கிரித்தி சனோன் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகரானார். இதன் பின்னர் இவர் சஹோ, ராதேஷ்யாம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் ஆதிபுருஷ், ப்ராஜெக்ட் கே, சலார் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆதிபுரூஷ் படத்தின் டீசர் நேற்று ரிலீசானது. இந்த படத்தின் கதாநாயகி கிரித்தி மற்றும் பிரபாஸ் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்டனர். பிரபாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் பயணிகள் கவனத்திற்கு”…. மத்திய மந்திரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

எதிர்காலத்தில் இந்தியாவில் 40 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் நேற்று ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்காண அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மாநில ரயில்வே மந்திரி ஜல்னா, உதயநிதித்துறை இணை மந்திரி பகவத் காரத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்  கூறியதாவது. 42 ரயில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், அவர்கள் அகரப்பட்டியில் வசிக்கும் சந்திரசேகரன், வீரக்குமார், வெங்கடேஷ், ராஜா மற்றும் முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 5 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட பெற்றோர்….. சடலமாக மீட்கப்பட்ட பட்டதாரி வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபாலபுரம் ஆரோக்கியா நகரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான சக்தி பிரசாத்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சக்தி பிரசாத்துடன் அவரது பெற்றோர் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்தி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை 4 மணி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த பிரசவ வலி….. விரைந்து செயல்பட்ட மருத்துவ உதவியாளர்….. குவியும் பாராட்டுக்கள்….!!

ஆம்புலன்சிலேயே பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் மருதபாண்டி- பிரபாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த பிரபாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் லெப்பை குடிக்காட்டில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக பிரபாவதியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் சென்ற போது திடீரென […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்யராஜ் நடிப்பில் உருவான வெப்பன்… வெளியான புதிய அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தென்னிந்தியாவின் பலமொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் சத்தியராஜ் தரமணி படத்தின் ஹீரோ வசந்த் ரவியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை சவாரி, வெள்ளை ராஜா போன்ற படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கி வருகின்றார். இந்த நிலையில் இந்த படத்திற்கு வெப்பன் எனும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியிடம் அடி வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்…. வைரலாகும் வீடியோ பதிவு….!!!

புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். சின்ன திரையிலிருந்து இவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். மேலும், இவர் டாப் ஹீரோ படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார். இவருக்கும் இவரின் காதலில் பென்ஸ்சியாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியிடம் அடி […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. 7 ஆண்டுகளாக பெண்னை ஏமாற்றி “உல்லாசமாக இருந்த ராணுவ வீரர்”…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!!

பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்  குல்வந்த்  சிங் என்ற ராணுவ வீரர்  வசித்து வருகிறார். இவர் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குல்வந்த்  சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை கடந்த 7  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித்தின் துணிவு படத்தில் இணைந்துள்ள பிக் பாஸ் பிரபலம்”… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் நடிகர் அஜித், எச் வினோத் போனி கபூர் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் அதே கூட்டணியில் வலிமை திரைப்படம் வெளியானது வலிமை திரைப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வலிமையை தொடர்ந்து ஏகே 61 படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் சேர்ந்துள்ளனர். வலிமை படத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

22-வது வருடம் தொடக்கம்…. ஈரோடு BSNL வாடிக்கையாளர்களுக்கு…. “329 ரூபாயில் அதிவேக இணையதள இணைப்பு”….!!!!!!

22 ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு ஈரோடு தொலை தொடர்பு மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு 329 ரூபாய் கட்டணத்தில் அதிவேக இணையதள இணைப்பு வழங்கப்படுவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுநிலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம் சென்ற 2000 வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. தற்பொழுது பிஎஸ்என்எல் 22 வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு அறிவித்து இருக்கின்றது. மிகவும் குறிப்பாக ஈரோடு தொலை தொடர்பு […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்கள்தான் காரணமா?…. பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோக்கள்…. அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சரவை….!!!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான  ஷெபாஸ் ஷெரீப்  தனது அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுக்கள் ஆடியோவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ஆடியோ அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை  முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  தலைமையிலான பாகிஸ்தான்  தெஹ்ரீக்  இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே அடையாளம் தெரில…. நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் லுக்…. செம வைரல்….!!!

நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“20 கிராம் மக்களின் கோரிக்கை”…. தீர்வு காணப்படுமா….? மேம்பால திட்டம் தொடங்கப்படுமா….???

திருமங்கலம் மேம்பால திட்டம் மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட கிராமங்கள் திருமங்கலத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் இருக்கின்றது. இந்த கிராமங்களில் விளையும் பருத்தி, காய்கறி, மல்லிகைப்பூ உள்ளிட்ட பொருட்கள் காலை ஏழு மணிக்குள் திருமங்கலம் மார்க்கெட் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் இடையில் ரயில்வே கேட் பகுதி இருப்பதால் சில நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை ரயில்கள் கடந்து செல்லும் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. ”பொன்னியின் செல்வன்” ட்ரைலரில் இதை கவனித்தீர்களா….? என்னன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

தொடங்கியது நோபல் பரிசு மாதம்… மருத்துவத்திற்கான நோபல் பரிசு யாருக்கு தெரியுமா?…

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு இந்த வருடத்தில் மருத்துவருக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு வழங்கப்படும். உலக நாடுகளை சேர்ந்த மனித உரிமை தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், புது முகங்கள், பொருளாதார வல்லுனர்கள் போன்றோர் நோபல் பரிசு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அதன்படி இந்த வருடத்தில் ஸ்வீடன் நாட்டின் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அழிந்த ஹோமினின்களின் மரபணுக்களும், […]

Categories
உலக செய்திகள்

இங்கு என்னால் வாக்களிக்க முடியாது…. நடிகை பிரியங்கா சோப்ரா வருத்தம்….!!!!

பெண்கள் எப்பொழுதும் விதிவிலக்காக இருக்கக் கூடாது என  பிரபல நடிகை கூறியுள்ளார். முன்னாள் உலக அழகி என்று போற்றப்படுபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் மூலம்  ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இமான் இசையில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். இதனையடுத்து பாலிவுட்டில்   பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடரில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. 5ஜி அறிமுகமான வேகத்தில் 6ஜி…. மத்திய மந்திரி வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி சேவைகள் தொடங்கிய வேகத்தில், 6ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சர்வதேச அளவில் 6ஜி தொழில்நுட்ப சேவையில் இந்தியா முன்னணி வகிக்கும். சர்வதேச தகவல் தொடர்பு யூனியன் அமைப்பில் 5ஜி மற்றும் 6ஜி குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்த  குழுவில் இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தி ”விக்ரம் வேதா”…. இதுவரை செய்த வசூல்…. வெற்றியா தோல்வியா….?

விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதனையடுத்து , ‘விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  இந்த திரைப்படம் இதுவரை 3 நாட்களில் இந்த திரைப்படம் வெறும் […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதம் வெடித்தால் ஏற்படும் விளைவு என்ன…? ரஷ்யா வெளியிட்டுள்ள திகில் காட்சி…!!!!!

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று அணு ஆயுதம் வெடிக்கும் காட்சிகளையும் அணு ஆயுதம் வெடிப்பதால் ஏற்படும் பயங்கரமான பின் விளைவுகள் மற்றும் நச்சு வாழ்வில் இருந்து காப்பாற்றும் முகமூடிகள் முதலான காட்சிகளை வெளியிட்டுள்ளது. மேலும் அணு ஆயுதங்களை பயன்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்ற காட்சியை கண் முன் கொண்டு வந்து பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கத்தில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவின் மையப் பகுதியில் இருந்து புறப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சத்யராஜின் அழகான மனைவி மற்றும் திரைப்பயணம்…. நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இவருடைய குடும்பம் மற்றும் மனைவி குழந்தைகள் பற்றிய விவரங்கள் இதோ. ஆரம்ப காலத்தில் இவருக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்புகள் தான் அதிகம் வந்தது. இதனை தொடர்ந்து ஹீரோ வாய்ப்பும் வர தொடங்கியது. இவருக்கு நடிப்பின் மீது அளவு கடந்த காதல் என்பதை அமைதிப்படை, […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு அரசு உதவ வேண்டும்….. மருத்துவமனைகளில் குவியும் மக்கள்…. பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!!

பிரபல நாட்டில் பெய்த கனமழையால் மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4  மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் மெல்ல மீண்டும் வரும் நிலையில் பல மாகாணங்களில் மலேரியா நோய் பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மேக வெடிப்பு ஏற்பட்டு பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக ஆகஸ்டில்  கொட்டிய கனமழையால்  கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

விதிமீறல்!…. டிரைவர் சீட்டில் பெண் கண்டக்டர்…. போக்குவரத்துத் துறை அதிரடி….!!!!

மராட்டிய மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டம் கலாம்ப்பகுதியில் இயங்கும் அரசு பேருந்தில் பெண் கண்டக்டராக சாஹர் மங்கல் கொவர்தன் பணிபுரிந்து வந்தார். இவர் சென்ற சில தினங்களுக்கு முன் அரசு பேருந்தில் டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை சாஹர் மங்கல் தன் சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து பெண் கண்டக்டரான சாஹர் விதிகளை மீறி டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. அதன்பின் சாஹரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” என்னாது பிரபாஸ், கீர்த்தி சனோன் காதலிக்கிறார்களா….?”…. வைரலாகும் ரசிகர்களின் பதிவுகள்….!!!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் காதலிப்பதாக செய்தி பரவி வருகின்றது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக இருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கு வரன்கள் அதிகம் வந்தது. ஆனால் அதை உதறி தள்ளி விட்டார். பிறகு அனுஷ்காவும் இவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை இருவரும் மறுத்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என கூறி வந்தனர். இந்த நிலையில் பிரபாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

SHOK NEWS: வகுப்பறையில் ஆசிரியர் செய்த செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்திரபிரதேசம் ஹத்ராஸ் எனும் இடத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக சைலேந்திரா சிங் கவுதம் பணிபுரிந்து வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சமயத்தில் மது பாட்டிலை உடன் வைத்திருந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது. அந்த காட்சிகளில் தன் இருக்கையின் பின்பும், மேஜையின் கீழேயும் மது பாட்டில்களை சைலேந்திரா சிங் கவுதம் வைத்திருந்தார். नशे की हालत में धुत मास्टर जी बच्चे बच्चियों को पढ़ा रहे हैं। वीडियो हाथरस यूपी […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ரயிலை உருவாக்க…. இவ்வளவு கோடி செலவாகுமா?…. பலரும் அறியாத உண்மை….!!!!

தினசரி லட்சக்கணக்கானோர் இந்திய இரயில்வேயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் போக பேருந்து, விமானம் பயணத்தை விடவும் ரயில் பயணத்தையே மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். அலைச்சல் மிககுறைவு மட்டுமின்றி, பயணத்துக்கான செலவும் மிகமிக குறைவாக உள்ளது. இதுவே மக்கள் இரயில் பயணத்தை விரும்பி தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம். இந்த நிலையில் நம் நாட்டில் ஒரு ரயிலை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவுஆகும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் செலவை இங்கே தெரிந்து கொள்வோம். ரயிலில் […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறீர்களா?… இதோ உங்களுக்கான சலுகைகள்… புதிய விசா நடைமுறைகள் அறிமுகம்…!!!

ஐக்கிய அரபு அமீரகம் அதிக சலுகைகளோடு விசா நடைமுறைகளை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பத்து வருடங்கள் விரிவுபடுத்தப்பட்ட தங்க விசா திட்டம், திறமை மிகுந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் போன்றவை இருக்கிறது. சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கலாம். கிரீன் விசா உடன் வருபவர்கள் அனுமதி காலாவதியான பிறகும் ஆறு மாதங்களுக்கு தங்க முடியும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

25 பேர் கிட்ட ஏமாந்திருக்கேன்…. நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேச்சு….!!!

ஸ்ரீ ரெட்டியின் பேச்சு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை ஸ்ரீ ரெட்டி பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர்ந்து புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பி வருவார். பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக இவர் ஊடகங்கள் முன்னிலையில் நிறைய புகார் கொடுத்து இருக்கிறார். இவர் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், விஷால் ஆகியோர் மீது புகார்கள் தெரிவித்தார். இவர் விளம்பரத்திற்காக இப்படி […]

Categories
உலக செய்திகள்

“சொந்த மண்ணில் தோல்வியடைந்த அரேமா அணி “… கொந்தளித்த ரசிகர்கள்… வன்முறையில் 174 பேர் பலி…!!!!!!

இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 174 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கால்பந்து போட்டியை காண்பதற்கு சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்த நிலையில் போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்துள்ளது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உதயா”…. கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியீடு….!!!!!

நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் உதயா. பாக்கியராஜ் மற்றும் உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவது தொடர்பாக தன்நிலை விளக்க கடிதம் கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியது […]

Categories
உலக செய்திகள்

“எப்டி பயந்தியா?”… தாய் சிங்கத்தை அலற வைத்த கியூட்டான குட்டி சிங்கம்…. வைரலாகும் வீடியோ…!!!

ஒரு சிங்கக்குட்டி தன் தாய் சிங்கத்தை பின்புறம் இருந்து பயமுறுத்தும் அழகான வீடியோ,  இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பொதுவாக காடுகளில் சிங்கத்தைப் பார்த்தாலே மற்ற மிருகங்கள் பதுங்கி ஓடிவிடும். ஆனால் அந்த சிங்கமே, தன் குட்டியை பார்த்து பயந்திருக்கிறது. அந்த வீடியோ தான் இணையதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு பெண் சிங்கம் தரையில் படுத்திருக்கிறது. அதன் குட்டிகள் இரண்டும் அருகில் இருக்கின்றன. https://twitter.com/Yoda4ever/status/1576273237402537984 அதில் ஒரு குட்டி தாய் சிங்கத்தின் முன்புறத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: கோலாகரமாக நடைபெற்ற துர்க்கை பூஜை…. பக்தர்களுக்கு நேர்ந்த உச்சகட்ட கொடூரம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

 ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அப்போது  அங்கு அமைக்கப்பட்டிருந்த கூரை   திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில்   4-க்கும் மேற்பட்டோர்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஞ்சு வாரியருடன் இணைந்த பிரபுதேவா…. வெளியான புதிய வீடியோ…. செம வைரல்….!!!!

நடிகை மஞ்சு வாரியார் தற்போது நடித்து வரும் “ஆயிஷா” என்ற திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.  “அசுரன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் தற்போது “ஆயிஷா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிக் கக்கோடி எழுத, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் என்னும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கின்றார். இந்நிலையில் “ஆயிஷா” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”- நம்மள எப்பிடி கூப்புடுவாங்க…. புலம்பும் சீரியல் நடிகர்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ் 6”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் வருகிற அக்டோபர் 9 ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.   அதன்படி, இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா ரோஷினி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, […]

Categories

Tech |