Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சூப்பர் ஸ்டார்…. மகழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே… அக்டோபர் 8ம் தேதி ரெடியா இருங்க… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

குடும்ப அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக அக்டோபர் எட்டாம் தேதி மக்கள் குறை தீர் முகாம் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவிப்புள்ளது. அதன்படி […]

Categories
சினிமா

“ஹர ஹர மஹாதேவ்” படம்…. எப்போது ரிலீஸ் தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!

டிரைக்டர் அபிஜித் தேஷ் பாண்டே எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் “ஹர ஹர மஹாதேவ்”. இந்த திரைப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜனாக சுபோத் பாவேயும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவாக ஷரத் கேல்கரும் நடித்து இருக்கின்றனர். ஜி ஸ்டூடியோஸ் தயாரித்து உள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உட்பட 5 மொழிகளில் உருவாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் “வா ரே வா ஷிவா” பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி “ஹர ஹர மஹாதேவ்” திரைப்படத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

புது வாகனப் பதிவு நடைமுறை…. 24 மாநிலங்களில்….. வெளியான தகவல்…..!!!!

நாடு முழுதும் எவ்வித தடையும் இன்றி சொந்த வாகனத்தில் பயணம் மேற்கொள்ள வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புது “பாரத்சீரிஸ்” வாகனப்பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூரில் சென்ற மாதம் நடந்த போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-வது ஆண்டு கூட்டத்தின் தீா்மானம் வாயிலாக இத்தகவல் தெரியவந்துள்ளது. அவற்றில் மேலும் கூறியிருப்பதாவது, ஒருவா் தன் சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்தில் இருந்து வேறுமாநிலத்துக்கு (அல்லது) யூனியன் பிரதேசத்துக்கு குடிபெயரும் போதும், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

2030ம் வருடத்திற்குள்…. முடிவுக்கு வருமா வறுமை?…. உலக வங்கி அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தொற்று மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குறித்த காரணங்களால் 2030-க்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நீண்ட கால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவலை உலகவங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நடவடிக்கைகளுக்குப் பின் ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2020ல் மொத்தம் 71 மில்லியன் பேர் தீவிரவறுமையில் வாழ்கின்றனர். அதன்படி, 719 மில்லியன் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

Driving License….. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. போலி ஓட்டுநர் உரிமத்தினால் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், இதை தடுக்க ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மக்கள், மாநில போக்குவரத்துத் துறையின் இணையதளத்திற்கு சென்று ‘லிங்க் ஆதார்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆதாருடன் இணைத்துகொள்ளலாம்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துப்புரவு பணி மேற்பார்வையாளர் மீது புகார்….. நகராட்சி அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

நகராட்சி அதிகாரி துப்புரவு பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சியில் காசி என்பவர் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி முறையாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் ஆயக்குடி பகுதியில் காசி இறைச்சி கடை நடத்தி வருவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் கமலா காசியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி….. படுகாயமடைந்த 2 டிரைவர்கள்…. 2 மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து கோழி தீவனங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான முனியப்பன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் இரண்டாவது வளைவு பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கைக்குட்டையை எடுக்க சென்ற மாணவன்…. தாய் கண்முன்னே பலியான சம்பவம்…. கோர விபத்து…!!!

தாய் கண்முன்னேயே பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பண்ணந்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதுர்வேதி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாயுடன் ஸ்கூட்டரில் தர்மபுரிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது மாணவனின் கைகுட்டை சாலையில் விழுந்தது. இதனால் தனது தாயை சாலையோரம் இறக்கிவிட்டு மாணவன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள 8 மருத்துவக் கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள 8  அரசு  மருத்துவ கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி 8 முதல்வர்கள் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6  பேருக்கு பதவி உயர்வு அடிப்படையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 1.சென்னை மருத்துவக் கல்லூரியில்  கல்லீரல் சிகிச்சை இயக்குனராக இருந்த டாக்டர். கே.நாராயணசாமி தற்போது செங்கல்பட்டு மருத்துவக் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூடு… 31 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 31 பேர் உயிரிழந்திருக்கின்றனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 31 வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு […]

Categories
பல்சுவை

ஐயோ!…. இனி வாட்ஸ் அப்பில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாதா?…. ஷாக்கில் பயனாளர்கள்….!!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிகம் விரும்பப்படும் வாட்ஸ்அப் தனது பயனர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பல புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது எனப்படும் ஒருமுறை மட்டுமே பார்க்கும் புகைப்படம் அல்லது தகவல்களை ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்க முடியாது வகையில் புதிய மாற்றம் பரிசோதனையில் உள்ளது. இது குறித்து whatsapp பீட்டா வெளியிட்டிருக்கும் பதிவில், ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாமல் செய்திருப்பதற்கு நன்றி. வியூ ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் வீடியோ அல்லது புகைப்படங்களை இனி பயனர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி… ஆன்லைன் ரம்மியால் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… பெரும் பரபரப்பு…!!!!!

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டை எனும் பகுதியின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து திருச்சியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் நிகழ்வு இடத்தில் பார்த்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜேஸ் (42) என்பவர் தனது உறவினர்களுடன் வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் பழனி வழியாக கேரளாவிற்கு செல்ல இருந்தனர். அந்த வேனில் கொடைக்கானலில் இருந்து பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை சால்தீன்(33) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேல்பள்ளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அபாயகரமான அஞ்சுவீடு அருவி” தடாகத்தில் தவறி விழுந்து பலியான மாணவர்…..பெரும் சோகம்….!!

அருவி தடாகத்தில் தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வசிக்கும் 6 பள்ளி மாணவர்கள் அஞ்சு வீடு அருவிக்கு சென்று ஆபத்தை உணராமல் குளித்துக் கொண்டிருந்தனர். குளித்து முடித்த பிறகு ஒவ்வொரு மாணவராக பாறை வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பாக்கியபுரம் பகுதியில் வசிக்கும் தினகரனின் மகன் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான பிரின்ஸ்(17) என்பவர் தடாகத்தை ஒட்டி இருக்கும் பாறையை கடக்க முயன்றார். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்….. 3 மாத குழந்தை பலி; படுகாயமடைந்த 3 பேர்….. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில் அன்புச்செல்வன்(28) விஜயலட்சுமி(26)- தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் பிரதிக்ஷா(4) என்ற மகளும்,பிறந்து 3 மாதமேயான குருசாவிதா என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பு செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் சென்ற போது தேனி நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (07-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 07-10-2022, புரட்டாசி 20, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.27 வரை பின்பு வளர்பிறை திரியோதசி திதி பின்இரவு 05.25 வரை பின்பு சதுர்த்தசி. சதயம் நட்சத்திரம் மாலை 06.17 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் –  07.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பி.ஆர்க். படிப்புக்கான   தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டிட கலை தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் பி.ஆர்க்.  படிப்புக்கு  ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி வரை  https:// WWW.tneaoline.org என்ற  இணையதளத்தின் மூலம் 2ஆயிரத்து 491  மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவற்றில் ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 3 மாற்றுத்திறனாளி […]

Categories
அரசியல்

ப்ரோ கபடி லீக் 2022…… தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறுமா….?? களமிறங்கும் முக்கிய புள்ளி….!!!

தமிழ் தலைவாஸ் அணி ப்ரோ கபடி லீக் வரலாற்றில் மிகவும் குறைந்த அளவிலேயே வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது சீசனில் லீக்கில் இணைந்த தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. தமிழ் தலைவாஸ் அணி 22 ஆட்டங்களில் 5 புள்ளிகளில் வெற்றி அடைந்து பட்டியலில் 11-வது இடத்தை பிடித்தது. ஆனால் 6 போட்டிகள் டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதில் அணி வெற்றி பெற்றிருந்தால் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் […]

Categories
கபடி விளையாட்டு

9-வது புரோ கபடி லீக்போட்டி: மிகப்பெரிய பலமாக பவன் செராவத்…. இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் நிலை என்ன?….!!!!

12 அணிகள் விளையாடும் 9வது புரோ கபடி லீக்போட்டிகள் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் துவங்கவுள்ளது. டிசம்பர் மாதம் இறுதி வரையிலும் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான லீக்சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே, ஐதராபாத் போன்ற 3 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தொடருக்கான 5-வது சீசனில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாக  கொண்டு உருவாக்கப்பட்ட அணி தமிழ் தலைவாஸ். சென்ற 4 சீசன்களில் ஒரு முறைகூட பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறாத இந்த அணி, அதனை மாற்றும் […]

Categories
அரசியல்

ப்ரோ கபடி 9வது சீசன்…. 12 அணிகள் மோதும் விறுவிறுப்பான போட்டி…. எந்த அணிகள் எப்போது மோதுகின்றன?…. அட்டவணை வெளியீடு….!!!!

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பலவும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றான கபடியை ஊக்குவிக்கும் வகையில் தேச முழுவதும் உள்ள கபடி வீரர்களுக்கான சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் ப்ரோ கபடி தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 7ஆம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது. இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் […]

Categories
அரசியல்

PRO KABADI 2022: முதல் போட்டியிலேயே அனல் பறக்கும் அணிகள்‌…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரனா பரவல் காரணமாக ப்ரோ கபடி நடைபெறாமல் இருந்தது இந்நிலையில் புரோ கபடி இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி 12 அணிகள் களமிறங்கும் 9 வது புரோ கபடி லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூர், புனேஸ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளுக்காக […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டு நகரம் பற்றிய தகவல்… அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார். விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் அறிவித்திருக்கிறார். சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் இடம் தேர்வு செய்து விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர்  மெய்ய நாதன் கூறியுள்ளார். திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விளையாட்டு நகரம் அமைக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிஐடியின் சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆயுதப்படை ஐஜியாக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இயல்பை விட 75% கூடுதலாக பருவமழைக்கு வாய்ப்பு”… முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் விளக்கம்…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய போது, தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவமழையை சிறப்பாக எதிர் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியன் செல்வன்” திரைப்படம்….. இதுவரை உலகம் முழுவதும்….. எத்தனை கோடி வசூல் தெரியுமா…..?

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தை நாம் அனைவரும் விமர்சனம் செய்வதை தாண்டி நாம் கொண்டாட வேண்டிய ஒரு படமாகும். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதனைத் தொடர்ந்து 150 நாட்களில் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும்  முடித்துள்ளார். தற்போது மணிரத்னம் 2-ம் பாகத்தின் வேலையை தொடங்கியுள்ளாராம். பொன்னியின் செல்வன் வெளிவந்த […]

Categories
அரசியல்

OMG….!! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை….. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,785-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
தேசிய செய்திகள்

M.Ed. மாணவர்களே!! இன்று முதல் October 12 வரை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில்  அமைந்துள்ள அனைத்து  கல்வியல் கல்லூரிகளில் முதுநிலை  படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24 -ஆம் தேதி இணையவழியில்  தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழன் கிழமை வெளியாகும் என கல்லூரி இயக்கம் அறிவித்தது. தற்போது முதுநிலை கல்வியல் படிப்புக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன….? திரையரங்கில் விசித்திரமாக நடந்து கொண்ட பெண்ணா….? இடையிலேயே நிறுத்தப்பட்ட கன்னட திரைப்படம்….!!!!

மங்களூரில் உள்ள திரையரங்கில் “காந்தாரா” படம் ஓடிக்கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்டார். கன்னடத்தில் இயக்குனர் பிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியான “காந்தாரா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வசூல் ரீதியாகவும் “காந்தாரா” படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! இந்தி ரீமேக் “விக்ரம் வேதா” வசூல்…. இவ்வளவு மோசமா….?

“விக்ரம் வேதா” படத்திற்கு இவ்வளவு குறைவான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் வருத்தம். தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த “விக்ரம் வேதா” திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்து திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இணைந்து இந்தியிலும் இயக்கியுள்ளார்கள். இந்தி ரீமேக் “விக்ரம் வேதா” படத்தில் ஹிருத்திக் ரோஷன், சயிஃப் அலி கான் மற்றும் ராதிகா ஆப்தே போன்ற நடிகர், நடிகைகள் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின்…. முடிச்சுட்டு விழா அறிவிப்பு….!!

இங்கிலாந்து நாட்டில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த  2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகின்றார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகின. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது? சுந்தர் சி படம் தள்ளி போக இதுதான் காரணமா….? உண்மையை போட்டுடைத்த குஷ்பூ…!!!

எஸ். எஸ். சக்திவேல் இயக்கத்தில் ராஜாத்தி, பாண்டியன், ஆரா மற்றும் கோவை சரளா நடித்துள்ள “ஒன்வே” திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குஷ்பு நிகழ்வு முடிந்த பின் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது, “ஒவ்வொருவருடைய பார்வையையும் பொறுத்தது வெற்றிமாறன் பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை. இதனை அடுத்து பொன்னியின் செல்வனையும், பாகுபலி ஒப்பிடுவது பற்றி கேட்கப்பட்டபோது தமிழ் […]

Categories
தேசிய செய்திகள்

துர்க்கை சிலை கரைக்கும் போது “வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 9 பேர் பலி” …. மீட்பு பணியில் களமிறங்கியுள்ள அதிகாரிகள்….!!!!!

துர்க்கை அம்மனை கரைக்க சென்ற போது ஆற்றில் மக்கள் அடித்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும். அதிலும் விநாயகர் சிலையை  கரைப்பது போல் அவர்கள் 10 நாட்களுக்கு துர்க்கை அம்மனுக்கு  பூஜை செய்து ஆற்றில் கரைப்பது வழக்கம். அதேபோல் நேற்று மேற்கு வங்காளத்தில் உள்ள மால் ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துர்கை அம்மன்  சிலையை கரைக்க வந்துள்ளனர். அப்போது திடீரென ஆற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!! சுற்றுலா பேருந்து மீது அரசு பேருந்து மோதி “9 மாணவர்கள் பலி”…. சோகத்தில் கேரள மாநிலம்….!!!!!

சுற்றுலா பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பாசலியஸ்  வித்யா நிகேதன் என்ற  பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து  50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  சுற்றுலா பேருந்தில் ஆலத்தூர்  சாலையில்  சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக  வந்த அரசு பேருந்து சுற்றுலா பேருந்தின் மீது  […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.20,000 பெற…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….. இதோ முழு விபரம்…..!!!!!

அரசாங்கத்தால் ஜனவரிமாதம் 2004 ஆம் வருடம் துவங்கப்பட்ட என்பிஎஸ் ஓய்வூதிய திட்டம் லாபகரமானதாகவும், பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்டுகிறது. இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2009 ஆம் வருடம் முதல் அனைவருக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமானது முதலீட்டாளர்கள் வயதான காலக்கட்டத்தில் சிறந்த வருவாயை பெற்று வளமாக வாழ்வதற்கு வழிவகை புரிகிறது. NPS திட்டத்தில் இந்திய குடி மகன்கள் (அல்லது) இந்தியாவில் வசிப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவற்றில் சேருபவர்களின் வயது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. சர்க்கரை உற்பத்தியில் இந்தியா தான் பெஸ்ட்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் கரும்பு சீசனில் சாதனை அளவாக 5000 மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக கரும்பு உற்பத்தியாகி இருக்கிறது. அதன் மூலம் சர்க்கரை உற்பத்தியில் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதனை போல சர்க்கரை ஏற்றுமதில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து சர்க்கரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்…. முதல்வர் ஸ்டாலின்‌‌ திடீர் முடிவு…. இதுதான் காரணமா….?

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது. அதிலும் நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, திருநங்கைகள் ஆகியோருக்கு இலவச பயணம், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 மாதம் தோறும் ஊக்கத்தொகை […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு தண்டனையா!…. “பர்கர்” வாங்கி தர குற்றவாளிக்கு நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

டெல்லியில் வசிக்க பெண் ஒருவர் தனது முன்னாள் கணவர் தன்னை பாலில் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் தன்னை பின் தொடர்வதாகவும் வமிரட்டி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயமான கார்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….. போலீஸ் அதிரடி….!!

கார் திருடிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  மாக்கினாம்பட்டி திருவள்ளூவர் காலனியில் கார்த்திகேயன்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் தனது உறவினரான தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் காரை நிறுத்தியுள்ளார். அந்த கார் திடீரென மாயமானதை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி தீயணைப்பு துறையில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு….. வாழ்த்து தெரிவிக்கும் வீரர்கள்…..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலராக புருஷோத்தமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தற்போது புதுக்கோட்டைக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் சென்னை எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் அலுவலராக வேலை பார்த்த கணபதி என்பவர் பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தீயணைப்பு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

“பேச்சுவார்த்தை எல்லாம் இல்ல ஒரு கை பார்ப்போம்”…. அமித் ஷா திட்டவட்டம்….!!!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று  ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அதன்பிறகு இன்று பாரமுல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 1947 ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலும் ஆட்சி செய்தது அப்துல்லா குடும்பம், முப்தி குடும்பம், காந்தி நேரு குடும்பம் என்னும் மூன்று குடும்பங்கள் தான். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கு இந்த மூன்று குடும்பங்கள் தான் காரணம். ஜம்மு […]

Categories
மாநில செய்திகள்

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் ஸ்டாலின்…. கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எந்த மதத்திற்கு திமுக எதிரில் இல்லை என்று பேசி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஆ ராசாவை கூப்பிட்டு முதல்வர் கண்டித்துள்ளாரா? அவ்வாறு செய்யவில்லையே அல்லது அவரை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினாரா? அதுவும் செய்யவில்லையே. ஒரு பக்கம் நாங்கள் இந்து மதம் உள்ளிட்ட எந்த மதத்திற்கும் எதிரியில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊராட்சி,ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியது அரசு. இதில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணையை தமிழக பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவை தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பிஎப் பணத்துக்கு பெரிய ஆபத்து….. இத மட்டும் யாரும் பண்ணாதீங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக கணக்கு தொடர்பான தகவல்களை எதுவும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது.ஏனென்றால் பல மோசடி சம்பவங்கள் நடந்து வருவதால் பி எப் கணக்கு பற்றிய தகவல்கள் மோசடி செய்பவர்களின் கைகளில் சிக்கினால் உங்களின் கணக்கிலிருந்து பணத்தை நொடிப் பொழுதில் திருடிவிட அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி அல்லது […]

Categories
உலக செய்திகள்

வறுமையில் வாடும் 32 கோடி மக்கள்…. எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?… ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அலர்ட்…. உடனே இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் பல சலுகைகளும் கிடைக்கின்றன.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் நம்பர் மாறி இருந்தால் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். அதற்கு முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மற்றொரு சலுகை…. அனைவருக்கும் மானிய கடன்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் பணம் 3 தவணைகளாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்த பன்னிரண்டாவது தவணையை பெறுவதற்கு முன்பே அரசாங்கம் விவசாயிகளுக்கு மற்றொரு வசதியை வழங்குகின்றது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு கிசான் கிரெடிட் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால் அதனை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அப்படி ஆதார் கார்டு புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.ஆனால் நேரடியாக நீங்கள் ஆன்லைனில் அதனை மாற்ற முடியாது. மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் ஆன்லைன் மூலமாக போட்டோ மற்றும் வசதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி எல்லாமே வந்து சேரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது கல்வி,வேளாண்மை மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் உள்ளன, திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகின்றதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இபிஎஸ் ஓய்வூதியத் திட்டம்: சம்பளத்தில் 333% அதிகரிப்பு இருக்குமா?…. வெளியான முழு விபரம்…..!!!!

இபிஎஸ் என்பது இபிஎஸ்​​ ஆல் கவனிக்கப்படும் அத்தகைய திட்டம் ஆகும். இத்திட்டம் 58 வயது நிரம்பிய ஊழியர்களுக்கானது. எனினும் பணியாளர் குறைந்தபட்சம் 10 வருடங்கள் பணிபுரிந்து இருந்தால் மட்டுமே இத்திட்டத்தைப் பெறமுடியும். இபிஎஸ் ஆனது கடந்த 1995ம் வருடம் துவங்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் புது இபிஎஸ் உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேரலாம். அரசு நிறுவனம் மற்றும் ஊழியர்கள் இருவரும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 % இபிஎஸ் நிதிக்கு சமமாக வழங்குகின்றனர். இருந்தாலும் ஊழியர்களின் பங்களிப்பின் முழுப்பகுதியும் இபிஎஸ்-க்கும், நிறுவனத்தின் […]

Categories

Tech |