யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியதால் 2 பேர் காயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளப்படி அம்பலக்காடு பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தது. இதனை எடுத்து சதாசிவம் என்பவரது வீட்டை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அப்போது சதாசிவத்தின் குடும்பத்தினர் பின்புற […]