Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஸ்வினின் “பீட்சா‌ 3″….. ரிலீஸ் எப்போ தெரியுமா…..? வெளியான புதிய அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பீட்சா 2 திரைப்படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீட்சா 3 உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ள பீட்சா 3 திரைப்படத்தில், அஸ்வின் ஹீரோவாக நடிக்க பவித்ரா மாரிமுத்து ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தமிழக பகுதிகளுக்கு கூடுதல் நீர் திறப்பு”….. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது….!!!!!!

தமிழக பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொளியாக முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையை நம்பித்தான் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர்….. இனி இது மட்டும் போதும்….. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை நேற்று தொடங்கியது.அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட்டது. சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும்,ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

BREAKING: பிரபல வீரர் அறிவிப்பு! இதுதான் கடைசி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

கர்த்தார் உலக கோப்பை தான் என்னுடைய கடைசி உலக கோப்பை என அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களுடன் நேர்காணலில் பேசிய அவர், நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்து விட்டேன். உண்மை என்னவென்றால் ஒரு சிறிய பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜஸ்டின் பிரபாகரன் திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள்”…. வைரலாகும் பிக்ஸ்….!!!!!

ஜஸ்டின் பிரபாகரன் திருமணத்தில் சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, க்ரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்கள். சென்ற 2014-ம் வருடம் வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.  இதன் பின் ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்- கரோலின் சூசன்னா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துக்களை […]

Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி முடித்தால் போதும்… மாதம் ரூ.32,000 சம்பளத்தில்… நபார்டு வங்கியில் வேலை…!!!

நபார்டு வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: வளர்ச்சி அலுவலர் காலி பணியிடங்கள்: 177 சம்பளம்: ரூ.32,000 கல்வித்தகுதி: டிகிரி தேர்வு முறை: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 10 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nabard.org என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஏடிஎம் கார்டை திருடி 44,000 அபேஸ் செய்த மர்ம ஆசாமி”…. போலீசார் வலைவீச்சு….!!!!!

பெண்ணிடம் ஏடிஎம் கார்டை திருடி 44,000 அபேஸ் செய்த மர்மநபரை போலீஸ் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் மண்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் தனது வீட்டில் வங்கி கணக்கின் ஏடிஎம் கார்டை வைத்திருக்கின்றார். அதனை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார்கள். அந்த ஏடிஎம் கார்டுடன் ரகசிய எண்ணையும் குறித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. அந்த கார்டை பயன்படுத்தி சந்திராவின் வங்கி கணக்கிலிருந்து 44 ஆயிரத்தை அந்த மர்ம நபர் அபேஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500, ரூ.2000 நோட்டுகள்….. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல அல்லது ரூபாய் நோட்டின் ஓரம் கிழிந்திருந்தாலோ, டேப் போட்டிருந்தாலோ அல்லது இரண்டு இடத்தில் கிழிந்து இருந்தாலோ அதை mutilated note என்று  அதை வங்கியில் கொண்டு கொடுத்தால் அவர்கள் அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் மிகவும் கவலைக்கிடம்….. மருத்துவமனை அறிக்கை…!!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங், உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 82 வயதான அவருக்கு நுரையீரல் தொற்று அறிவிப்பில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு மாதம் அன்னதானம்… எந்தெந்த நாட்களில்..? எந்தெந்த இடங்கள்…? அரசு அறிவிப்பு…!!!!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த தினம் இன்று. இவர் சிதம்பரம் அருகில் மருதூரில் 1823 ஆம் வருடம் பிறந்தார். ஆன்மீகவாதியான இவர் சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை நிறுவினார்.  இந்த நிலையில் வள்ளலாரின் முப்பெரும் விழாவையொட்டி சென்னையில் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி, அக்., 6 – 8 வரை கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோயில் அருகில், அக்.,9- 11 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த 11 பேர்”….. வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்….!!!!!!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 11 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே இருக்கும் சிறைக்குளம் ஊராட்சி கழநீர்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரை பொது பிரச்சனை காரணமாக சென்ற எட்டு வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் பொதுக் கண்மாயில் குளிக்கவும் குடிநீர் குழாய் பயன்படுத்தவும் தடை விதித்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி 11 […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இதற்கான அனுமதிச் சீட்டை பெறலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!!

அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு 2022-23 கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் தேர்வுக்கான பாட புத்தகம் ஆகும் தேர்வில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மூலம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றது. தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15-ந் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

என் மனைவி கூட எனக்கு…. இவ்வளவு காதல் கடிதம் எழுதவில்லை…. கெஜ்ரிவால் வேதனை…!!!

என் மனைவி கூட எனக்கு இவ்வளவு காதல் கடிதம் எழுதவில்லை என டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், “ஒவ்வொரு நாளும் துணை நிலை ஆளுநர் என்னை எவ்வளவோ திட்டி கொண்டே இருக்கிறார். துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா என்னை தினமும் திட்டும் அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டியதில்லை. கடந்த 6 மாதங்களில் ஆ ளுநர் எழுதியது போன்று, என் மனைவி கூட எனக்கு இவ்வளவு காதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“காவலர் இறப்புக்கான உண்மையான காரணம்”…. சிபிசிஐடி போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல்….!!!!!

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேளாங்குளம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சித்ராதேவி மாவட்ட காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகின்றார். இத்தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சித்ராதேவி தனது மகளுடன் சென்ற வருடம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! விற்பனை பெருகும்..! லாபம் அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் உங்களின் திறமையால் அதனை சரிசெய்துக் கொள்வீர்கள். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் சிறப்பான தருணங்கள் அமையும். சகோதரர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஒற்றுமை கூடும்..! வெற்றி கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். இன்றைய நாள் பிரச்சனையில்லாத நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! எச்சரிக்கை அவசியம்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். உரையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! இறைவழிபாடு இருக்கும்..! நன்மை உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். பணத் தட்டுப்பாட்டை நீங்கள் சரி செய்ய வேண்டும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடை மட்டும் ஆபரண சேர்க்கை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்..! கவனம் தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் அலைச்சல்கள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நெருக்கம் கூடும்..! அன்பு வெளிப்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த வேற்றுமை குறைந்து, நெருக்கம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இன்று ஏற்படும். புதிய தொடர்புகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைச்சேரும். மனம் நிம்மதியளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பயணங்கள் ஏற்படும்..! தனவரவு சிறப்பாக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லவரன்கள் வரக்கூடும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதனால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தனவரவு காலதாமதமாக வந்தாலும், கையில் வந்துச்சேரும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாக இருக்கும். செல்வநிலை சீராக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும், சுமுகமான சூழ்நிலை நிலவும். வரவேண்டிய பணம் தாமதமாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். இன்று பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பேச்சுத்திறமை வெளிப்படும்..! உணர்வுகள் அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உழைப்பீர்கள். துணிச்சலுடன் செயலாற்றுவீர்கள். பேச்சுத்திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் நடந்து முடியும். வசீகரமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! வரன்கள் தேடிவரும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு நல்ல தருணங்கள் உண்டாகும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். வசீகரமான தோற்றமும் வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். கடுமையான உழைப்பிற்கு இன்று வெற்றிப்பெறும் நாளாக இருக்கும். வேலைப்பளு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! திருப்பங்கள் ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும். சரியான முறையில் எதையும் பயன்படுத்தப் பாருங்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசால் தொழில் வளர்ச்சியில் திருப்பம் நிலவும். மக்களின் ஆதரவை கண்டிப்பாகப் பெறமுடியும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். உங்களின் வளர்ச்சியை உயர்த்திக் கொள்வீர்கள். முதலீட்டினை அதிகரிக்க முயற்சிகள் செய்வீர்கள். விவசாயிகளுக்கு இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (07-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 07-10-2022, புரட்டாசி 20, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.27 வரை பின்பு வளர்பிறை திரியோதசி திதி பின்இரவு 05.25 வரை பின்பு சதுர்த்தசி. சதயம் நட்சத்திரம் மாலை 06.17 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  07.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 7…!!

அக்டோபர் 7 கிரிகோரியன் ஆண்டின் 280 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 3761 – எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு. 1403 – வெனீசிய-செனோவப் போர்கள்: செனோவா கடற்படை பிரெஞ்சு அதிகாரியின் தலைமையில் வெனிசியப் படைகளைத் தோற்கடித்தன. 1477 – உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1513 – லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது. 1571 – லெப்பாண்டோ சமரில் திருத்தந்தை ஐந்தாம் பயசின் திருச்சபைப் படைகளிடம் உதுமானிய படைகள் முதலாவது தோல்வியைச் சந்தித்தன. 1763 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பழங்குடிகளின் பிரதேசங்களை வெள்ளையினக் குடியேற்றங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முழு வீச்சுடன் செயல்படும் ஜிவி பிரகாஷ்….. “சர்தார்” திரைப்படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்….!!!!!

சர்தார் திரைப்படத்தின் பின்னணி இசையில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருவதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மிளகு பொடியை தூவிய மர்ம நபர்கள்….. சுதாரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் வலைவீச்சு….!!!

மிளகு பொடியை முகத்தில் தூவி சப்-இன்ஸ்பெக்டரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் பழனிவேல் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிவேல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் நந்தியாலம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல்லில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு”…. ஆராய்ச்சி நிலையம் தகவல்….!!!!

நாமக்கலில் மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது. நாமக்கல் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று 2 மில்லி மீட்டரும் நாளை 8 மில்லி மீட்டரும் நாளை மறுநாள் 34 மில்லி மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. இன்றும் நாளை மறுநாளும் மணிக்கு ஆறு கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 4 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோகன் ராஜாவின் ரீமேக் சூட்சமம்… குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!!

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் லூசிபர். இந்த படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக்ஸ் செய்திருக்கின்றனர். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியன், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா  தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து….காயமடைந்த 5 பேர்….. பரபரப்பு சம்பவம்….!!!

ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டியிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் விசைப்படகு மூலம் பிடித்து வரப்படும் மீன்களை சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். வழக்கம் போல இந்த ஆம்னி பேருந்து தொண்டியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் இரண்டு பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மீமிசல் பகுதியில் இருந்து 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்த பட ரிலீஸ்க்கு தயாரான பொன்னியின் செல்வன் பூங்குழலி”… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடித்த ஜகமே தந்திரம், கேப்டன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இவர் ட்ரிப்பிள்ஸ் வெப் தொடரின் இயக்குனர் சாருக்கே சேகர் இயக்கத்தில் அம்மு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதி….. வாலிபர்கள் செய்த காரியம்….. போலீஸ் அதிரடி….!!!

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே இருக்கும் பாம்பாலம்மன் கோவிலுக்கு திருச்சியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தம்பதியை வழிமறித்தனர். இதனை அடுத்து அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடமிருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர் தான் ரியல் பொன்னியின் செல்வி…. 2 மாநிலங்களை கலக்கும் தமிழிசை சௌந்தரராஜன்….!!!!!

ஆளுநரின்  அதிரடி நடவடிக்கையால் பாஜக மகிழ்ச்சி அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதனால் மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கவும், 2024 -ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவியை கைப்பற்ற பாஜக திட்டம் தீட்டியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மாநில கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தம்பதி பலி; 2 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

கார் விபத்தில் சிக்கியதால் தம்பதி பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் காந்தி நகரில் வங்கி ஊழியரான பிஸ்வாராஜன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் அஞ்சனா(32), பக்கத்து வீட்டில் வசிக்கும் பிஜய்குமார் சரண்(75), அவரது மனைவி மீரா சரண்(67) ஆகியோருடன் காரில் கேரளா நோக்கி சென்றுள்ளார். இந்த காரை பிஸ்வாராஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலூர் அருகே சென்றபோது ஓட்டுநரின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒப்பந்த தனியார் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்….. சுங்க சாவடி பணியாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

போராட்டத்தின் போது சுங்க சாவடி பணியாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்க சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் வேலை பார்த்த தலா 28 பணியாளர்களை ஒப்பந்த தனியார் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து திருமாந்துறை சுங்க சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளான நேற்று முன்தினம் மதியம் முதல் […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவின் பதிலடி… எல்லையில் 30 போர் விமானங்கள்… பெரும் பதற்றம் ‌..!!!!

தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. இதன்படி ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த ஒன்றாம் தேதி 2 பாலிஸ்ட் ஏவுகணை ஏவி வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் பல கன்னடம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்கள் அனுப்பியது பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தென் கொரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இலவச விழிப்புணர்வு என்ற பெயரில் அனுமதி” பொதுமக்களிடம் பணம் வசூலித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு….!!

சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்தும், ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு இலவச விழிப்புணர்வு முகாம் நடத்துவதாக கூறி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தினர் வேப்பந்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் முகாம் நடத்தி பொதுமக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனலட்சுமி அங்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள்….. சாதனை படைத்த இளம்பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் தெற்கு தெருவில் முகமது பதுருதீன்-பவுசியா பீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபானா பஸ்லீம்(23) என்ற மகள் உள்ளார். இவருக்கு சதாம் உசேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த சிபானா பஸ்லீம் 1000-க்கும் மேற்பட்ட குடியரசு தினம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு, இயற்கை காட்சிகள் உள்பட பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இதனால் “விரிஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்” […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ஆயுத பூஜையொட்டி நாமக்கலில் குவிந்த சுமார் 80 டன் குப்பைகள்”…. அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல்….!!!!!!

ஆயுத பூஜை தினத்தையொட்டி நாமக்கலில் 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். தமிழக முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாமக்கல் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் லாரி பட்டறைகள், உணவகங்கள், தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்கள். இதற்கு முன்னதாக சுத்தம் செய்யப்பட்ட குப்பைகள் தெருக்களின் ஓரத்தில் கொட்டப்பட்டது. இதையடுத்து பூஜைக்கு பிறகு நிறுவனம் மற்றும் கடைகளில் அலங்கரிக்கப்பட்ட மாயிலை, பூக்கள், வாழைமரம் உள்ளிட்டவற்றை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வேளாண் பட்டதாரிக்கு 1 லட்சம் நிதி உதவி”…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!!!!!

வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலமாக 2022-23-ம் வருடத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது. இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]

Categories
உலக செய்திகள்

2030-ம் ஆண்டுக்குள்…. வறுமையை முடிவுக்கு கொண்டு வர முடியுமா….? அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள உலக வங்கி….!!!!

வறுமையைக் குறைப்பதற்கு 3 தசாப்த காலமாக எடுக்கப்பட்ட முன்னேற்றங்கள் பாதிப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் கொரோனா நோய் தொற்று தாக்கம் போன்றவற்றால் 2030-க்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நீண்ட கால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இதனால் வறுமையைக் குறைப்பதற்கு 3 தசாப்த காலமாக எடுக்கப்பட்ட முன்னேற்றங்கள் பாதிப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து  உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பிரதமருடன்…. மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்திப்பு….!!

நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா காலத்தின்போது, தடுப்பூசி தயாரிப்புகளில் மிக பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் அதே மாதிரி இருந்து வருகின்றோம். எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன் அடிப்படைகள் இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையிலிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு…. திற்பரப்பு அருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்….. 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதை ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதற்கு தீர்வு காண போலீசாரும், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நீச்சல் கற்று கொடுத்த பெரியம்மா…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பாகநத்தம் ஆவுத்திபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமுருகன்(8) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் தனது அக்கா ஓவியாவுடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியம்மா மணியின் வீட்டிற்கு சென்றுள்ளான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணி அப்பகுதியில் இருக்கும் 30 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை….. ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….. கடும் போக்குவரத்து நெரிசல்….!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் ஊட்டியின் பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

தென் கொரியாவை நோக்கி இன்று… மீண்டும் ஏவுகணை வீச்சு நடத்திய வடகொரியா…!!!!

வடகொரியா கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏவுகணையை ஏவியுள்ளது. வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசுபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பாக ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வடகொரிய ஏவுகணை இதுவாகும் இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை […]

Categories
பல்சுவை

இதெல்லாம் ரொம்ப டூ மச்….. தனுஷின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பள்ளி சிறுவர்கள்….. வைரல் வீடியோ….!!!!

மாணவர்கள் கல்வியை கற்றுக் கொள்ளும் இடமாக மட்டுமில்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் பள்ளிக்கூடங்கள் கற்றுக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் வீட்டு பாடங்களை எழுதுகிறோமே, தேர்வில் வெற்றி பெறுகிறோமே, ஒழுக்கமாக இருக்கணும் என்கின்ற பயம் மாணவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். ஆசிரியர்களின் கம்பு மீது பெற்றோர் மீதும் மிகுந்த அச்சம் தான் அந்த ஒழுக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஆசிரியர்களால் அடிவாங்கி பல பனிஷ்மெண்ட்களை கடந்து வந்தவர்கள் கூட இப்போது அவர்களது ஆசிரியர் மீது எந்த வன்மமும் இருக்காது. ஆனால் இன்று […]

Categories

Tech |