Categories
உலக செய்திகள்

“ராணுவ அரசின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த ஜப்பான் பத்திரிகையாளர்”… மியான்மர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!!!

மியான்மரில் ராணுவ அரசின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த ஜப்பான் பத்திரிகையாளருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்த வருடம் கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து ஊடகங்களின் செயல்பாடுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது நடைபெற்ற மக்கள் போராட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தொடர்பாக ஜப்பானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரான டோரு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பையிலிருந்து கேட்ட அழுகை சத்தம்….. பேருந்தில் குழந்தையை விட்டு சென்ற சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து செம்பட்டி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதில் காமாட்சிபுரத்தில் வசிக்கும் வேலுமணி என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கையில் துணிப்பையுடன் அமர்ந்திருந்தார். இதனை அடுத்து செம்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் இளம்பெண் துணி பையை இருக்கையிலேயே வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து துணி பையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே….! சூப்பர் ஐடியா….. பாலித்தீன் பயன்பாட்டை தடுக்க வனத்துறையினரின் புதிய ஏற்பாடு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டாம்பூச்சி பூங்கா, மூலிகை நாற்று பண்ணை, ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பைகளில் தின்பண்டங்களை எடுத்து சொல்கின்றனர். சிலர் அத்துமீறி மது பாட்டில்களையும் கொண்டு செல்வதால் ஆழியாறு பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கண்காணிப்பையும் மீறி சிலர் பாலிதீன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கவரால் முகத்தை கட்டி….. பட்டதாரி வாலிபர் தற்கொலை…..பரபரப்பு சம்பவம்….!!!

பி.டெக் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகரில் ராம் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹயக்கிரிவ ராம்(22) என்ற மகன் இருந்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் ராமிற்கு வேலை கிடைத்தது. நேற்று முன்தினம் தலை வலிப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அறைக்கு தூக்க சென்ற ஹயக்கிரிவ ராம் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவர் கதவையும் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜென்டில்மேன் 2” ஹீரோ‌ யார் தெரியுமா….? வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் “ஜென்டில்மேன் 2” படத்தில் ஹீரோவாக சேதம் சீனு நடிக்க உள்ளார்.  தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்தவர் கே.டி. குஞ்சுமோன்.   பின்னர் இவர் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இவர் இயக்கிய வசந்தகால பறவைகள், சூரியன் போன்ற படங்களின் வெற்றிகளை தொடர்ந்து கடந்த 1993-ல் பிரம்மாண்டமாக அவர் தயாரித்த படம் ஜென்டில்மேன். இந்தப் படம் ஷங்கரை டைரக்டராக  அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து பல வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார். ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் அதன் இரண்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நகுலின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் நடிகர் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கப்பட்டது. தமிழ் நடிகர்கள் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியுள்ளது. இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகின்றார். ஒளிப்பதிவு வேலைகளை ஓய்.என்.முரளி கவனிக்கின்றார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கின்றார். இதனைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு துவங்க […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இளவரசர் வில்லியமை விட்டு விட்டு ஓடிய கேட்…. வைரலாகும் வீடியோ….!!!!!

இளவரசி கேட் இளவரசரை  விட்டுவிட்டு ஓடும்  வீடியோ வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் இளவரசியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் எட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார்.  கடந்து சில நாட்களுக்கு முன்பு இளவரசர் வில்லியமும்   அவரது மனைவி கேட்டும் பொதுமக்களை சந்திப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து  புறப்பட்ட நேரத்தில் திடீரென இளவரசி கேட் இளவரசரை விட்டு விட்டு ஓடியுள்ளார். எதற்காக கேட் இப்படி ஓடுகிறார் என்று வில்லியம்  பார்த்தபோது. அங்கே ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

தசரா நிகழ்ச்சியில் எரிய மறுத்த ராவண உருவ பொம்மை… நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்…!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி என்னும் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தசரா விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் இதிகாசத்தின் படி ராமர் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு நேரத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அங்கு இராவணனின் உருவ பொம்மையை ஏற்பாடு செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆனால் ராவண வதத்தின் போது ராவணனின் 10 தலைகள் சரியாக எரியவில்லை இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நகராட்சி எழுத்தாளரான ராஜேந்திர யாதவ் என்பவரை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….. மீண்டும் உயரும் சம்பளம்?….. தீபாவளி பரிசு இதோ….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலை உயர்த்தப்பட்டு 36% வைக்கப்பட்டது. இதற்கு முன்னாள் 34% ஆக அகவிலை படி மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்சஸும் அதிகரிக்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராசுட்டி தொகையும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் மற்றும் பணிக்கொடை கணக்கீடு என்பது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் செய்யப்படுகிறது. எனவே அகவிலைப்படி அதிகரிப்பால் பிஎப் மற்றும் கிராசுட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! கருணையே இல்லையா….? உதவிக்காக போராடும் போண்டாமணியிடம் 1 லட்சம் ஆபேஸ்…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். போண்டாமணி சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டங்கள் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலு நகைச்சுவை பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரம் ட்ராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரம் ட்ராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவு ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

PF பணத்திற்கான வட்டி வரவில்லையா….? EPFO கொடுக்கும் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிமானம் செய்யப்படும். இந்த தொகை பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணத்தை சேமிப்பதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவுகிறது. இந்த பிஎஃப் பணம் தொழிலாளர்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டி.வி. மோகன் தஸ் பாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… முதல் நாள் வசூலில் சாதனை படம்… எது தெரியுமா?…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களுக்காக வருகை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து திரையரங்குகளில் கொண்டாடுவர். அதன்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என நடிகர்களின் படங்களை முதல் நாள் திரையரங்குகளில் விழாக்கோலம் போல் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். அதன்படி இந்த வருடம் திரையரங்கில் அஜித்தின் வலிமை படமும், விஜயின் பீஸ்ட் படமும், கமல் விஜய் சேதுபதியின் விக்ரம் படமும், திரை பிரபலங்கள் பலரும் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை… சக மாணவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்தியனா போலிஸ் நகரத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் வருண் மணி சேட்டா (20)என்பவர் பர்டூ பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் படிப்பு பயின்று வந்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தின் மேற்கு முனையில் உள்ள மேட்கட்சான் அரங்கில் உள்ள அறையில் அவர் தங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் தனது அறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் அவரது உடலில் கூர்மையான காயங்கள் இருந்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா கைது… போலீசார் அதிரடி..!!

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தது நெல்லை காவல்துறை. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை கைது செய்தது நெல்லை போலீஸ்.. கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… “எதிர்ப்பு குரல்கள் எரிமலையாக வெடித்து சிதறும்”… ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகை…!!!!

ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானில் இளம் பெண் மஹ்சா அமினியை போலீஸர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஈரானில் பெண்கள் தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது  களம் இறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் போன்ற முன்னணி பிரெண்ட்ஸ் நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS:‌ வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம்…. SBI வங்கியின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சமீப காலமாகவே ஆன்லைனில் பணம் மோசடி என்பது அதிகரித்துவிட்டது. இது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது செய்தித்தாள்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நம்முடைய செல்போனுக்கு ஏதாவது ஒரு மெசேஜை அனுப்பி அதை நான் தெரியாமல் கிளிக் செய்யும்போது நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகி விடுகிறது. அதுமட்டுமின்றி வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று நாடகமாடி ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி விடுகின்றனர். இந்த லிங்கை நாம் கிளிக் செய்து நம்முடைய […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவு… 19 பேர் உயிரிழப்பு… 30 குழுக்கல் கொண்ட மீட்பு பணி… பெரும் சோகம்…!!!!!

உத்தரகாண்ட் பனிசரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர் காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறி உள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து திரும்பிய போது 17,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பணி சிறையில் சிக்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. இந்த மாதம் இறுதியில் 36 செயற்கைகோள்கள்….. இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி மார்க்- 3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை இந்த மாதம் 3 வது அல்லது 4ஸவது வாரத்தில் விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2;வது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது‌. இந்த வகை ஜி.எஸ்.எல்.வி‌. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் மூன்று நிலைகளைக் கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

மொழி பிரச்சனையை தீர்ப்பதற்காக….. நில ஆவணங்களில் புதிய திட்டம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் நிலவளத்துறை இணைச் செயலாளர் சோன்மோனி போரா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நாடு முழுதிலும் உள்ள பல்வேறு மக்கள் நில ஆவணங்களை கையாள்வதில் மொழி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக தற்போது நில ஆவணங்களில் மொழிபெயர்ப்பு முறையை மத்திய அரசு கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் எழுதப்படும் நில ஆவணங்கள்  ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இதற்கான புதிய மென்பொருளை ரூபாய் 11 கோடியில் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனை பறிக்க முயன்ற இளைஞர்….. துண்டான கால்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிபூண்டி நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி-கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்பு பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம் போல் மெதுவாக சென்றது. அப்போது அந்த பகுதியில் கூட்டாளிகளுடன் தயாராக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ரயில் படிக்கட்டில் தாவி அதில் பயணம் செய்யும் பயணிகளின் செல்போனை பறிக்க முயன்று உள்ளார்‌. அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்த அந்த இளைஞரின் இடது கால் மீது […]

Categories
உலக செய்திகள்

இவர்களை உடனடியாக பணியில் இருந்து தூக்க வேண்டும்…. பிரபல நாட்டில்”நடைபெற்ற போராட்டம்”….. போலீசாரின் கொடூர செயல்….!!!!

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாட்டில் முல்லை தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் சிலர்  சட்டவிரோதமாக மீன் பிடித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அதிகாரிகளும்    அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று மீன் பிடிப்பவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த  போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று […]

Categories
மாநில செய்திகள்

வாங்க ! வாங்க…. தமிழகத்திற்கு வாங்க…. எல்லா வசதியும் இருக்கு…. தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் விடுத்து அழைப்பு….!!!!

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் கலந்து கொண்டார். குடியரசு நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற MSV கண்காட்சியில் துவக்க விழாவில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் முன்னிலையில் அமைச்சர் தா.மோ அன்பரசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் செக் குடியரசுக்கும் இடையிலான பொருளாதார உறவு என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“மக்கள் அல்ல” இபிஎஸ் மட்டும் தான்…. மனுவைப் பற்றி பேசினால் கல்லால் அடிப்பாங்க…. திமுக அமைச்சர் விமர்சனம்….!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் மனுவை பற்றி பேசுகிறார்கள் அவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும். மனுவைப் பற்றி அவர்கள் தெளிவாக பேசினால் மக்கள் கல்லைக் கொண்டு அவர்களை அடிப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் மனுவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்போது வேதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ லேப்டாப்: ரூ.19,500-க்கு இவ்வளவு அம்சங்களா?…. குஷியில் பயனர்கள்…..!!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆன பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் நிலையில், இப்போது விலை மலிவான லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை அரசு இ-மார்க்கெட் பிளேஸ் போர்ட்டலில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஜியோ குவால்காம் ஸ்னாப் டிராகன் 665 11.6 இன்ச் நெட்புக் என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலையானது ரூபாய்.19,500 ஆகும். ஜியோவினுடைய இந்த லேப்டாப் ஆனது முன்னதாகவே சந்தையில் விற்பனைக்கு வந்தபோதிலும் இதை அனைத்து மக்களாலும் வாங்கமுடியாத […]

Categories
மாநில செய்திகள்

“RSS பேரணி 100% நடந்தே தீரும்” முதல்வரே நினைத்தாலும் தடுக்க முடியாது…. பாஜக‌ சூர்யா சிவா சவால்….!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறியதால், நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பாஜகவினர் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதில் தீவிரமாக இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1000 கல்வி உதவித்தொகை…. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு (என் எம் எம் எஸ்- National means cum merit scholarship scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“அப்படிப் பார்த்தால் தமிழக முதல்வர் தமிழரை கிடையாது”…. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!!!

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற “21 ஆம் நூற்றாண்டில் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது” என்கின்ற தலைப்பிலான கருத்தரங்கள் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கல்வியியல் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் உயர் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணங்கள் கழிப்பறை […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு நேர்ந்த அதிர்ச்சி…. OMG…எச்சரிக்கை…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான போண்டாமணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிகர் நடிகைகள் யாராவது உதவவும் முன் வர வேண்டும் எனவும் கூறி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் உடல்நலம் […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் சிறந்த எழுத்தாளரா?…. இலக்கியத்திற்கான “நோபல் பரிசை கைப்பற்றும் பெண்” …. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள விருதுகளில் மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசாகும். இந்த விருதானது ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், இலக்கியம்,வேதியல் என பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல்  வெளியிடப்பட்டது. இதனையடுத்து  இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவர்  எழுதிய எல் அகுபேஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “மும்பை போலீஸ்” திரைப்படம்….. தெலுங்கில் ரீமைக்கா….? சுதீர்பாபுவின் துணிச்சல் நடிப்பு….!!!!

“மும்பை போலீஸ்” தெலுங்கு ரீமேக் படத்தில் சுதீர் பாபு நடித்து வருகின்றார்.  சமீபமாக மலையாளத்தில் ஹிட்டான திரைப்படங்கள் தெலுங்கில் தொடர்ந்து ரீமேக்காகி வருகின்றது. அதிலும் குறிப்பாக நடிகர் பிரித்திவிராஜ் நடித்த படங்களை அதிகம் ரீமேக் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பிரித்திவிராஜ் நடித்த ஐயப்பன் ஜோசியம் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு பவன் கல்யாண் நடிப்பில் பீம்லா நாயக் என்ற பெயரில் வெளியானது. பிரித்திவிராஜ் இயக்கியும் முக்கிய வேட த்திலும் நடித்திருந்த லூசிபர் திரைப்படம் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வீடுகள் மீது மோதிய பொக்லைன் இயந்திரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

நான்கு வீடுகள் மீது பொக்லைன் எந்திரம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் கொருக்குப்பேட்டை அம்பேத்கர் 5-வது தெருவில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கால்வாயில் இருக்கும் ஆகாய தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரியுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் கால்வாய் அருகே இருந்த 4 வீடுகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் 2 வீடுகளின் சுவர் இடிந்து மேற்கூறை சரிந்து விழுந்தது. மேலும் 2 வீடுகள் விரிசல் ஏற்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் இன்று ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அழைப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் இருக்கும் அறை எண் 215-ல் அரசு ஓய்வூதிய இயக்குனரால் ஓய்வூதிய கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் இன்று காலை 10:30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

கடன் பெறுவோர் இறந்தால்?…. அடுத்து அதன் பொறுப்பு யாரை சேரும்?…. பலரும் அறியாத முக்கிய தகவல் இதோ…..!!!!

வங்கியில் இருந்து கடன் பெற்றால், அக்கடனுக்கான காலஅளவுக்குள் நாம் வாங்கிய கடன்தொகை முழுவதையும் வங்கிக்கு திருப்பிசெலுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியும். இல்லையென்றால் வங்கியால் முழு அதிகாரத்துடன் கடன் வாங்கியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எனினும் கடன் வாங்கியவர் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்து விட்டால், அக்கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்று உங்களுக்குத் தெரியுமா..? இந்நிலையில் வங்கிகளினுடைய நடைமுறை என்ன என்பதை அறிந்துகொள்வோம். அதாவது, கடன் வகையையும், பிணையத்தினையும் பொறுத்தே, கடன்-ஐ […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் போராட்டம்”….. பெருகிவரும் நடிகைகளின் ஆதரவு…..!!!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நடிகைகள் தங்களது முடியை வெட்டியுள்ளனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

BSNL நிறுவனத்தின் அடுத்த ஹேப்பி நியூஸ்….. விரைவில் 5ஜி சேவை…. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!!

இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போன்றவைகள் 5ஜி சேவையை தொடங்கவுள்ளது. ஆனால் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையையே இன்னும் தொடங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களிடம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த கவலையை போக்கும் விதமாக அடுத்த மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அடுத்த வருடம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனியும் ஒரு உயிர் கூட போகக்கூடாது….. ஆளுநரே உடனே ஒப்புதல் கொடுங்க…. பாமக தலைவர் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆன்லைன் ரம்பியை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் பலர் தங்களுடைய வாழ்க்கை மற்றும் உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மியால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி […]

Categories
உலக செய்திகள்

“நாட்டையே உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்”… 38 பேர் பலி… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர் அவர்களின் 24 பேர் குழந்தைகளாகும். மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள், […]

Categories
மாநில செய்திகள்

“இது மட்டும் நடக்கவே நடக்காது”…. கறராக பேசிய இபிஎஸ்…. செம அப்சட்டில் ஓபிஎஸ்….!!!!

ஒற்றை தலைமை யுத்தத்தின் விளைவாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக இருக்கிறது. அதிமுக இந்த யுத்தத்தில் அரசியல் ரீதியாக, சட்டரீதியாக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். ஆனால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்சின் மேல்முறையீடு வழக்கு கட்சி தலைமை பொறுப்புக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீது நீதிமன்றமும், […]

Categories
மாநில செய்திகள்

“OPS-EPS இரு தெய்வங்கள்”…. ட்ரெண்டாகும் வடிவேல் டயலாக்….. அதிமுக தொண்டர்கள் ரியாக்ஷன் இதுதான்….!!!!

ஒற்றை தலைமை விவகாரம் எழுந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர்த்தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இதுதான் நிலைமை என்றாலும் சமீப நாள்களில் இருதரப்பு வார்த்தைகளில் சுற்று மூர்க்கமாக மோதுகிறார்கள். திரைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப் பயந்தார் என்று நாமக்கலில் […]

Categories
உலக செய்திகள்

கடுமையாக உயர்ந்த எரிபொருளின் விலை…. பிரபல நாட்டில் பொதுமக்கள் கடும் அவதி….!!!!

எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். சிரியா நாட்டில் வடகிழக்கு பகுதியில் அந்நாட்டினுடைய எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இது தன்னாட்சி அதிகாரத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அங்கு கச்சா எண்ணெய் நிரப்புவதற்கு கடைசியாக செப்டம்பர் 14ஆம் தேதி கப்பல் ஒன்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக போருக்கும் முன் நாள் ஒன்றுக்கு எண்ணெய் உற்பத்தி அளவு 3 இலட்சம் பீப்பாயாக இருந்த நிலையில் போருக்குப்பின் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது. இந்த தகவலை சிரிய […]

Categories
ஆன்மிகம் தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊஞ்சல் உற்சவம்” சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூரில் பூவாடைக்காரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் இருந்தவாறு அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சேவையும், பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி… வெளிநாட்டு பயண செலவு உயரும் அபாயம்…!!!!

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பென்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பி பி எஸ் என அதிகரித்தது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சரிவினால் வெளிநாட்டு பயண செலவு அதிகமாகும் என்ற அபாயம் இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. மத்திய அரசு ஊழியர்களுக்கான VDA…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. முன்பாக அகவிலைப்படியை 4 % உயர்த்திய அரசு, இப்போது வேரியபிள் அகவிலைப்படியையும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு முதலாவதாக நவராத்திரி பரிசாக அகவிலைப்படியில் அதிகரிப்பு கிடைத்தது. அரசு இப்போது தீபாவளி பரிசை வழங்க திட்டமிட்டு இருக்கிறது. ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளத்தில் 4% அகவிலைப்படி மற்றும் DA நிலுவைத்தொகை கிடைத்திருக்கிறது. இப்போது மத்திய அரசின் மற்றஊழியர்களுக்கு வழங்கப்படும் வேரியபிள் அகவிலைப்படியும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு […]

Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முக்கூடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி….. பகவதி அம்மனை காண திரண்ட பக்தர்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் சிகர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை அடுத்து பரிவேட்டை மண்டபத்தை அடைந்த அம்மன் பாணாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு டென்ஷனா….? பாஜகவுக்கு‌ தலையிட உரிமை கிடையாது…. இபிஎஸ் திடீர் அதிரடி….. கடும் அப்செட்டில் ஓபிஎஸ்….!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை  எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும் அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமாகவே அமைந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுச் செயலாளர் […]

Categories
சினிமா

இதுதான் ரஜினியின் கடைசி படம்… சற்றுமுன் பரபரப்பு…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் துப்பாக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் LYCA தயாரிப்பில் #Thalaivar 170- ஐ டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும், #Thalaivar 171- ஐ ஐஸ்வர்யா ரஜினியும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஐஸ்வர்யா […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…… சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் பகுதியில் தேவி ஸ்ரீ முப்பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கி கடந்த 28-ஆம் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் வரை நடைபெற்ற கும்மியாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு கும்ப அழைப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் பாராட்டா விட்டால் குற்ற உணர்வு”…. திமுக எம்.பி. திருச்சி சிவா நெகிழ்ச்சி…..!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படக்குழுவிற்கு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நவராத்திரி சப்பர வீதி உலா…. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…. திரண்ட பக்தர்கள்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அரியநல்லூர் தெருவில் முப்பிடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று முன்தினம் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Categories
வேலைவாய்ப்பு

10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு….. இந்திய ராணுவத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க……!!!!

இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டன்ட், நர்சிங் அசிஸ்டன்ட் வெட்டினரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Indian Army பதவி பெயர்: Soldier Technical Nursing Assistant, Nursing Assistant Veterinary கல்வித்தகுதி:10, +2 Intermediate pass in Science with Physics, Chemistry, Biology and English வயது வரம்பு: 18 – 25 கடைசி தேதி: அக்டோபர் 30 கூடுதல் விவரங்களுக்கு: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/NA-NA_Vet_Notfn.pdf

Categories

Tech |