போதை பொருள் பயன்பாட்டற்ற மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை தாங்கி ஆலோசிக்கப்பட்டதாவது, மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல்துறையின் மூலம் மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. […]